5/22/2015

| |

மகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து கல்லடியில் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து கல்லடியில் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று நடைபெற்றது.


கண்டன வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம், கல்லடிப் பாலம் வரை சென்று திரும்பியது.மகளிர் அணியின் தலைவி செல்வி மனோகர் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியின் இறுதியில்; வித்தியாவின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நீதி மன்றம் வழங்க வேண்டும் என இறைவனை வேண்;டி கல்லடி பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  பிள்ளையார் ஆலயத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதலில் ஈடுபட்டனர்.