10/21/2015

| |

மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் மறைவு -ஆழ்ந்த இரங்கல்கள்

 Afficher l'image d'origineமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் மறைந்தார்.அவரது   மறைவு குறித்து மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான அ.மார்க்ஸ் அவர்கள் கீழ்வருமாறு தனது முகனூலில் குறிப்புகளை தெரிவித்துள்ளார்."வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்த செய்தி சற்றுமுன் அறிந்தேன். வருத்தங்களும் அஞ்சலிகளும்.
அவருடைய கருத்துக்கள் பலவற்றிலும் மாற்றுக் கருத்துக்கள் உண்டெனினும் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தில் நின்றவர்.என்கிற வகையில் அவர் மீது எனக்கு மரியாதைகள் உண்டு.
மார்க்சீய அணுகல்முறையைக் கிட்டத்தட்ட அவதூறு எனும் அளவிற்கு எதிர்த்தவர். அவருடைய இது தொடர்பான கருத்துக்களை மிகவும் ஆழமாகவும் வன்மையாகவும் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் அவர்கள் மறு்த்துள்ளார்.
என்னையும் ஒரு சந்தர்ப்பத்தில் சற்றும் பொருத்தமின்றி போகிற போக்கில்கடுமையான வார்த்தகளைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் அப்பால் இன்று அவரது மரணச் செய்தி துயரத்தை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்".