3/31/2016

ஒரு சந்திப்பும் உரையாடலும்!!! - சுவிஸ்

 
Afficher l'image d'origine  ஒரு சந்திப்பும் உரையாடலும்!!!
மலையகக் கவிஞர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்
மல்லியப்பு சந்தி திலகர் அவர்களுடன்

...
பொருள்: மலையகக் கலை, இலக்கியம் மற்றும் அரசியற் சூழல் குறித்து
காலம்: 03.04.2016 ஞாயிறு பி. ப. 4.00 மணிக்கு


இடம்: Stall 6, Gessnerallee 8, 8001 Zürich
ஆர்வலர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: விஜயன் 076 366 97 44,
யோகா 079 758 47 07, சயந்தன் 079 913 77 59  சுவிஸ்
»»  (மேலும்)

கைது செய்யப்பட்ட ரமேஷ் (வயது 32) தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்துகொண்டார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில்  செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
.
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில், சிங்கள மொழிப் பத்திரிகை மற்றும் உரப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தத் தற்கொலை அங்கியும் இதர வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட வெடிபொருட்களில், தற்கொலை அங்கி, 4 கிளைமோர் குண்டுகள், 12 கிலோ கிராம் நிறைகொண்ட வுNவு வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகள், 9 மில்லிமீற்றர் ரவைகள் அடங்கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதிகளில் 100 ரவைகள் இருந்துள்ளன),  கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதற்கான மின்கலப் பொதிகள் இரண்டு, சிம் அட்டைகள் ஐந்தும் அடங்குகின்றன.

.
இவ்வாறான நிலையில் சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர்,  தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்துகொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்குஒரு வருட சிறைத்தண்டனை

அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு குறைந்த வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ், இன்று (31) உத்தரவிட்டார்.
»»  (மேலும்)

3/30/2016

இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த விருது


நேற்று லயனல்வென்ட் அரங்கில் உலகநாடகதினத்தை முன்னிட்டு நான்கு பேருக்கு விருது வழங்கப்பட்டது.
...
இலங்கை நாடகக் கலைக்காற்றிய
பங்களிப்புக்காக இவ் விருது வழங்கப்பட்டது
விருது வழங்கப்பட்டோர்
1.ஜெயலத் மனோரத்ன
2.லூசியன் புலத் சிங்கல
3ஜெயந்த டிமென்டிஸ்
4.சி.மௌனகுரு

சி.மௌனகுரு உரையாற்றுகையில்

சிறந்த நவீன நாடகப் பாரம்பரியம் ஒன்றையுடைய எமது பெரும்பான்மைச் சிங்கள இனம் சிறந்த மரபுவழி பாரம்பரியமுடைய இலங்கைத் தமிழ் நாடக உலகைக் கௌரவித்த குறியீடாக நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழ் நாடக உலகம் செழுமையான பாரம்பரியம் ஒன்றைக் கொண்டது;என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்
நாங்கள் சிங்கள நாடகதின் காத்திரமான கலைஞர்களை தெரிந்து வைத்துள்ளோம்
.எத்தனை சிங்கள நாடகக் கலைஞர்கள் காத்திரமான தமிழ் நாடக் கலைஞர்கள் அறிந்து வைத்துள்ளனர்?
.இரு இனக் கலைஞர்களுக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படாமைக்கான காரணம் நம் நாட்டு அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது
இப்புரிந்துணர்வின் விதையாகவே இவ்விருதை நான் காண்கிறேன்
இப்புரிந்துணர்வு
வேரூன்றவேண்டும்
.முளைவிட வேண்டும்
விருட்சமாக வளர வேண்டும்
இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு அளித்த விருதாக நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
»»  (மேலும்)

3/29/2016

கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த அனைவரும் விடுவிப்பு

அலெக்ஸாண்ட்ராவிலிருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸுக்கு திருப்பப்பட்டது.
விமானத்தில் இருந்த ஒருவர் வெடிகுண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றை அணிந்திருப்பதாகக் கூறியதை அடுத்து, விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் இறக்கப்பட்டது.
கடத்தப்பட்ட அந்த விமானத்தில் பல வெளிநாட்டவர் உட்பட 80 பேர் இருந்தனர்.
விமானத்தை கடத்திய நபர் அங்கு தஞ்சம் கோரியுள்ளதாக சைப்ரஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தன்னிடமிருந்து பிரிந்து சென்ற சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த தனது மனைவியை சந்திக்க வேண்டும் என விமானத்தை கடத்தியவர் கோரியதாக லார்னாகா விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து அவரது மனைவி விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
இந்த விமானக் கடத்தல் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கை இல்லை என்று, சைப்ரஸின் அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
»»  (மேலும்)

56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களில் 56 பேருக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகள் வழங்கி கவுரவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

2016ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பெயர்களை குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது. மறைந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அனுபம் கர், அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை செயினா நெய்வால், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 112 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றனர். இவர்களில் 56 பேருக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.


5 பத்ம விபூஷண், 8 பத்மபூஷண் மற்றும் 43 பத்மஸ்ரீ விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார். திருபாய் அம்பானி, அவினாஷ் கமலாகர் தீக்சித், ஜக்மோகன், யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும், ஹபீஸ் சொராபி, பர்ஜிந்தர் சிங் ஹம்தர்த், அனுபம் புஷ்கர்நாத் கர், பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி, செயினா நெய்வால், வினோத் ராய், அலா வெங்கடராமா ராவ், துவ்வுர் நாகேஸ்வர ரெட்டி ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மயில்சாமி அண்ணாதுரை, மதுர் ஆர்.பதன்தர்கர், அஜய் தேவ்கன், தீபிகா குமாரி, முகம்மது இம்தியாஸ் குரேசி உள்ளிட்ட 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் இன்று வழங்கப்பட்டன.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த், பிரியங்கா சோப்ரா, சானியா மிர்சா உள்ளிட்ட மீதமுள்ளவர்களுக்கு அடுத்த மாதம் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

»»  (மேலும்)

3/24/2016

மதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந் என்னும் மாணவனை க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய செய்திருக்கின்றது

மதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந் என்னும் மாணவனை க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய செய்திருக்கின்றது.thineshமட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்துள்ளது கல்குடாதொகுதி. இந்த கல்குடா தொகுதியில் அமைந்துள்ள வாகரை பிரதேசம் ஒருகாலத்தில் புலிகளின் முழு கட்டுப்பாடில் இருந்தது.இங்கிருந்து திருகோணமலை செல்லும் பிரதான வீதியில் இருந்து   சுமார் 11கிலோமீட்டர்கள் காட்டுவழியாக சென்றால் அங்கு அமைந்துள்ளதுதான் மதுரங்கேணி குளம் என்னும் குக்கிராமம் ஆகும். இந்த நெடும்தூர பயணம் ஆபத்தானதொன்று காட்டுவிலங்குகள் பலவற்றைக்கடந்துதான் இந்த கிராமத்தை அடைய வேண்டும்.அதில் காட்டுயானைகளும் அடக்கம்.ஆனாலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இங்கேயுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆசிரியர்கள் தினம்தினம் சென்று வருகின்றார்கள்.
அரசியல்வாதிகளோ ஐந்துவருடங்களுக்கு ஒருமுறைதான் வந்து செல்வார்கள்.

இங்குவாழும் மக்கள் வேட்டையாடுதல், தேன்வெட்டுதல்,மீன்பிடி,சிறு வேளாண்மை என்று பருவகாலங்களுக்கு ஏற்ற பல்வேறு தொழில்கள் ஊடாக தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.

யுத்தகாலங்களில் காடுகளுக்குள் சென்று தமது ஜீவனோபாய தொழில்களை செய்யமுடியாது அழிவின் விளிம்பில் தப்பி பிழைத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமன்றி புலிகளின் பிள்ளைபிடிக்கும் இராணுவத்தில் வெறியா ட்டங்களுக்கும் முகம்கொடுத்து இளம் சமூகத்தையே தொலைத்து நிற்கின்றனர் இங்கு வாழும் மக்கள்.


கடந்த காலங்களில் வெறும் ஆரம்ப பாடசாலையாக இயங்கி வந்த இங்குள்ள பாடசாலை முதலமைச்சர் சந்திரகாந்தனின் முழு முயற்சியால் 2010ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் வரை தரமுயர்த்தப்பட்டது. தற்போது இங்கு 1 தொடக்கம்11 வரையான தரங்கள் உண்டு. 1 தொடக்கம் 5 வரையான தரங்களுக்கு ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் எவருமில்லை. அத்துடன் கணிதம் விஞ்ஞான பாடங்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களும்  இல்லை. பாடசாலை நிலவகுப்பறைகள் காணப்பட்டாலும் கற்பித்தலுக்கு பொருத்தமான வகுப்பறை தளபாடங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளன .


இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில் இருந்துதான்  மதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந் என்னும் மாணவனை க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய செய்திருக்கின்றது. அத்தனை கஷ்டங்களுக்கும் மத்தியில் பொது போக்குவரத்துக்களின்றி நாளாந்தம் பயணம் செய்து இங்கு கல்வி பணி புரியும் ஆசிரியர்கள் உண்மையிலேயே கனவான்கள்தான்.அவர்களுக்கும் இந்த மாணவனுக்கும் பாராட்டுக்கள்.

இப்போது இந்த பதினாறுவயது தினேஷ்காந் அந்த ஆபத்தான யானைகளையும் தாண்டி  11 கிலோ, மீட்டர் காட்டுவழியே நாளாந்தம் பயணம் செய்து தனது உயர் கல்வியை எங்கே எப்படி தொடரப்போகின்றான்? என்னும் கேள்விகளுக்கு விடைதேடி கொண்டிருக்கின்றது   அந்த மதுரங்கேணி குளம்.

மீன்பாடும் தேனாடான்
»»  (மேலும்)

3/23/2016

வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்கு சுவீஸ் உதயத்தின்பங்கு அளப்பெரியது என பெற்றோர்கள் தெரிவிப்பு

studend_vantharu_moolai_002மட்டக்களப்புமாவட்டம் கல்குடாவலயத்தின் ஏறாவூர்ப்பற்று-2 கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலய மாணவியின் சாதனைக்கு சுவீஸ் உதயத்தின்பங்கு அளப்பெரியது என பெற்றோர்கள் தெரிவிப்பு
2015 க.பொ.த(சா/த) பரீட்சையில் பாஸ்கரன்-தனுஸ்கா எனும் மாணவிக்கு 9ஏ சித்திகள் பெற்று சாதனைபடைத்துள்ளார் இப்பாடசாலையின் வரலாற்றில் அனைத்துப் பாடங்களிலும் ஒருமாணவர் அதி விசேட சித்தியெபற்றமை என்பதும் 9 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபின் 9ஏ சித்திகள் பெற்றதும் இதுவே முதல் தடைவ என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெற்றிக்கு அதிபர் ஆசிரியர்களின் பாரியபங்களிப்படன் சுவீஸ் உதயத்தின் மாலைநேரவகுப்பில் கற்பிக்கப்பட்டதுமே இவ்வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக பெற்றோர்களும் கல்வியலாளர்களும் தெரிவிக்கின்றனர்
இதைத் தவிர விஜயதாஸ்-வியோக்ஸன் எனும் மாணவன் 8ஏ1சி சித்தியைப் பெற்றுள்ளதுடன் 7ஏ மற்றும்6ஏ சித்திகளுடனும் மாணவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலயத்தின் சாதனைமட்டத்தில் மிக நீண்டகாலமாகவே பின்னடைவை காட்டிய இப்பாடசாலையின் வெற்றிக்கு அதிபர்திரு.க.பகீரதன்,ஆசிரியர்கள்,வலயகல்விப் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலுக்கு மேலதிக மாகசுவிஸ்-உதயம் அமைப்பின் அனுசரணையில் நடாத்தப்பட்ட மேலதிகவகுப்பின் பலாபலனுமே இதற்குக்காரணம்
 
இப்பாடசாலையின் அதிபராக திரு.தி.ரவிஅ வர்கள் பணியாற்றியபோது சுவிஸ்-உதயத்தின் செயற்பாடுகள் முன்னாள் முதலமைச்சர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்களால் வைபவரீதியாக
ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலமாகஉயர்தர விஞ்ஞானத்துறைக்கு மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு மிக நீண்டகாலமாகவே 3 மாணவர்களையேனும் கொண்டிருக்காத இத்துறையில் தற்போது 14 மாணவர்கள் உள்ளமையையினை பெற்றோர் பாராட்டியுள்ளதுடன் இவ்வாறு உதவிகளைச்செய்துவருகின்ற சுவீஸ் உதயம் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பெற்றோர்கள் நன்றிதெரிவித்துள்ளனர்
»»  (மேலும்)

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கம் யோகேஸ்வரன் பிதற்றல் , மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம்திரவியம்

Résultat de recherche d'images pour "மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம்"


“கொளுத்திய விளக்கில் கும்பிடு போடுவது போல் செயற்படுகிறார் பாராளுமன்றஉறுப்பினர் யோகேஸ்வரன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கப்பட்ட நிருவாக முறைதெரியாமல் பிதற்றுபவர் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சியின் உபதலைவரும், மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம்திரவியம் தெரிவித்தார்.

வாகரைதட்டுமுனைப் பகுதி மக்களை தட்டுமுனை விக்னேஸ்வரா ஆலயத்தில் நேற்று சந்தித்து உரையாற்றும் போது மேற்கண்டவாறுதெரிவித்தார்.

மேலும்அவர் தெரிவிக்கையில்!

மட்டக்களப்புமேற்கு கல்வி வலயத்தினை உருவாக்கியது கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தான் என்பதனைமட்டக்களப்பு மாவட்ட கல்விப்புலமும் கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள், அதிகாரிகள் எனஅனைவரும் நன்கு அறிவார்கள். அதனையும் தாண்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஆக்க பூர்வமான மக்கள் நலன் சார்;ந்தஅபிவிருத்திப் பணிகளை ஒரு போதும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்
அவ்வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளம்பரம் தேடும் குறுகிய அரசியல் இலாப நோக்கமோ அநாகரீகஅரசியல் செய்யும் அவசியமோ மக்கள் நலன் சார்ந்த சிந்தனையுள்ள கட்சி என்ற வகையில்எமக்கில்லை. இருப்பினும் போலியான அரசியல் இலாபம் தேடும் அறிக்கைகளுக்குப் பதில்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

கடந்த2016.03.14ஆம் திகதி ஊடக வாயிலாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கியதில்முன்னாள் முதலமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை மத்திய அரசின் அழுத்தமே புதிய கல்வி வலயம்உருவாக்கியதற்கு காரணம் என்ற தொனிப்பொருளில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாற்றியிருந்ததாக செய்திவெளியிடப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனால் மேற்கொள்ளப்பட்ட பல பாடசாலைக் கட்டிடங்களையும் ஏனைய பொதுத் திட்டங்களையும் திறந்து வைத்து தம்மைத்தாமே தம்பட்டம் அடிக்கும் இவ்அரசியல் தலைமைகள் 2010ஆம் ஆண்டு தொடக்கம் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காகமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் இவ்வாறு அடுத்தவர் கொளுத்தியவிளக்கில் கும்பிடு போடுவதை நிறுத்தி ஆக்கபூர்வமான சேவைகள் புரிய முன்வரவேண்டும்.


2008ஆம்ஆண்டு கிழக்கு மாகாண சபையினை த.ம.வி.பு. கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன்பொறுப்பேற்று எத்தனையோ பல கல்விச் சேவைகள் செய்ததுடன் அன்றைய கல்வி அமைச்சின்பிரதிச் செயலாளர் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரி முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் ஆகியோரினை உள்ளடக்கிய குழுவினை நியமித்தார். இக்குழுவினரும் கல்குடா,பட்டிருப்பு, மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி புதிய மட்டக்களப்புமேற்கு கல்வி வலயத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலில் போரதீவுபற்றுகல்விக் கோட்டத்தினையும் உள்வாங்குவதாக தீர்மானிக்கப்பட்டபோது பின்னர்பட்டிப்பளை, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று பிரதேசத்தில் சில பாடசாலைகளையும்சேர்த்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

இருமுறைபுதிய கல்வி வலயத்திற்காக அனுமதி மறுக்கப்பட்ட போதும் முன்னாள் முதல்வர்சி.சந்திரகாந்தனின் விடாமுயற்சியின் பயனாக மூன்றாவது முறையாக கிழக்கு மாகாண சபையின்அமைச்சர்களின் அங்கீகாரத்தின் ஊடாக ஆளுநரின் ஒத்திசைவுடன் அனுமதி பெறப்பட்டு மட்டக்களப்புமேற்கு உப கல்வி வலயம் உருவாக்கப்பட்டது.

இதற்கானகாரியாலயம் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியின் பயனாக மண்முனைமேற்கு பிரதேச சபையின் பங்கேற்புடன் குறிஞ்சாமுனையில் அமைக்கப்பட்டது. பின்னர் விசேடநிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய பணிமனை அமைக்கப்பட்டதுடன், முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் கவனங்களுக்குக்கு கொண்டு சென்றசி.சந்திரகாந்தன் தனியான கல்வி வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தரம்உயர்த்தினார்.

மாகாணங்களில்திட்;டங்கள் நடைமுறைப்படுத்தும் போது முதலில் மாகாண சபையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன்ஆளுநரின் ஒப்புதலினூடாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்வதே அரசஇயந்திரச் சுற்றோட்டம் அது புரியாமல் அறிக்கைகளை விடுவது ஓர் அரசியல்வாதியின்அறியாமையை புலப்படுத்துகின்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கப்பட்ட மேலதிகவிபரங்கள் தேவை என்றால் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணிஅவர்களிடம் கேட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு விளக்கம்கொடுத்திருப்பார்.

எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாண சபையினை இரா.சம்பந்தன் அவர்களிடம் ஆலோசனை கேட்டுத்தான்அமைக்கப்பட்டது என்று சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை  என்றார்.»»  (மேலும்)

3/22/2016

ஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட கோவிலும் இடிக்கப்படும் இன நல்லுறவும் - ஜுனைட் நளீமி

வறுமையை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்கின்றார்கள் என்ற கருத்தொன்றை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயா அவர்கள் அண்மையில் மாணவச்செல்வங்களின் மனதில் விதத்தைச் சென்றுள்ளார். அத்தோடு ஓட்டமாவடியில் கோவில் இடிக்கப்பட்டு மீன் சந்தை அமைக்கப்பெற்றதாக வரலாறும் கூரிச்சென்றுள்ளார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் உறவினை கூறுபோடும் மிக மோசமான இனத்துவேச கருத்துக்களை மதிப்புக்குரிய யோகேஸ்வரன் ஐயா அவர்கள் அப்பாவி தமிழ் மக்களின் இதயங்களில் விதைக்க முற்படுவது கவலையளிப்பதாக அமைகின்றது. எதனையும் தமிழ் மக்களுக்கு சாதிக்க முடியாத வங்குரோத்து அரசியலில் வெள்ளையர்களின் பிரித்தாளும் தந்திரமே வெற்றிபெரும் என்ற அடிமட்ட சிந்தனை ஐயா அவர்களின் அரசியலில் வெளிப்படுவது வேதனையளிக்கின்றது. ஓட்டமாவடியில் இந்துக்கோவில் ஒன்று அமைந்திருந்தமையை முஸ்லிம்கள் மறுக்கவில்லை கடந்த கால ஆயுதக்குழுக்களின் இனச்சுத்திகரிப்பு போராட்டத்தில் தமிழ் சகோதர சமூகம் தமது இருப்புக்களை இழந்தது போன்றே முஸ்லிம் சமூகமும் இழப்புக்களை தமிழ் சமூகத்திடம் பறிகொடுத்தமை வரலாறு.ஓட்டமாவடியில் அமைந்திருந்த கோவில் நிலத்திற்கு பதிலாக பனிரெண்டு இலட்சம் அக்காலப்பகுதியில் அரச அதிபராக கடமை புரிந்த அரச அதிபரினதும் புலிகள் அமைப்பினரதும் மத்தியஸ்த்தத்தில் கோவிலின் வண்ணக்கர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உறுதி எழுதப்பட்டது. அந்த பணத்தினைக்கொண்டே கறுவாக்கேணியில் உள்ள கோவில் அமைக்கப்பட்டது ஐயாவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. போதாக்குறையாக கோவில் வேலைப்பாடுகளை நிவர்த்திக்க பணம் போதாமையினால் 2500 ஓடுகளும், 200பக்கட் சீமெந்தும் வழங்கி கட்டட வேளை முடிக்கப்பட்டதேல்லாம் வரலாறு.தங்களது பிறந்தகமான வாழைச்சேனையில் அமைந்திருந்த ஹிஜ்ரா புறம் என அழைக்கப்பட்ட ஜிந்தாபாத் கிராமத்திலிருந்த பள்ளிவாசல் நிலத்தில் நீங்கள் இந்து கடவுள்களின் சிலைகளை நிறுவி உள்ளதனையும் முஸ்லிம்களது மயானம் அமைந்திருந்த பகுதியில் ஆயுத முனையில் தேசிய இயந்திர நிலையத்தினையும் வாழைச்சேனை பிரதேச செயலகத்தினையும் நிர்மாணித்து வைத்திருப்பது ஒன்றும் மூடி மறைக்க முடியாத சான்றுகள். இந்த முஸ்லிம்களது இழப்புக்கு நீங்கள் எத்தகைய பதிலீட்டினை மேற்கொண்டீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்று சுமார் தொழில் நிமித்தம் சலவைத்தொளிலாளிகளும், கொள்ளர்க்களுமாக சுமார் 15குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது நிலங்களை பணத்திற்கு விற்றுவிட்டே இடம்பெயர்ந்தனர். ஆனால் ஹிஜ்ரா புற கிராமக்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்கபெறவில்லை.


இது இவ்வாறிருக்க மதுரங்கேணி குளத்தில் இருந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் எங்கே, அங்கிருந்த பள்ளிவாசல், மயானங்கள், பாடசாலைகள், தபற்கந்தோர் என்பன எங்கே. பனிச்சங்கேணியில் அமைந்த பள்ளிவாசல், மீரானா ஊற்றில் அமைந்த பள்ளிவாசல் மயானம் என்பன ஆயுதப்போராட்ட வரலாற்றில் சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை உங்களால் மறுக்கத்தான் முடியுமா. கள்ளிச்சை முஸ்லிம் கிராமம் எங்கே, வாகனேரி முஸ்லிம் குடியிருப்புக்கள் எங்கே, என கேள்விகள் நீண்டு கொண்டு செல்லும். யுத்தத்திற்கு பின்னரும் மாவட்டத்தில் முஸ்லிம்களது நிலங்களை கபளீகரம் செய்த வரலாற்று துரோகங்களை எப்படி பட்டியல் போட்டு முடிக்க முடியும். சென்ற சில மாதங்களுக்கு முன்னர் தற்காலிகமாக கிரான் செயலகப்பகுதியில் அமைந்துள்ள ஜப்பார் திடல் என்ற முஸ்லிம் கிராமத்தில் சீனி முஹம்மது (வதாளையார்) என்பவரது பூர்வீக நிலத்தில் அரச அதிகார பயங்கர வாதத்துடன் பலாத்காரமாக கோவில் அமைக்கப்பட்டதை நீங்கள் எவ்வாறு நியாயப்படுத்த முடியும். முற்றிலும் முஸ்லிம்கள் வாழ்ந்த, அவர்களுக்கு சொந்தமான பூமியில் தமிழ் சகோதரர்களே இல்லாத இடத்தில் எப்படி பலாத்கார ஆக்கிரமிப்பினை மேற்கொள்ள முடியும். மட்டக்களப்பு முஸ்லிம் கொலனி என்றழைக்கப்படும் கள்ளியங்காட்டில் பள்ளிவாசல்கள் இருந்த இடத்தில் பள்ளியை இடித்து பிரம்மா குமாரிகள் இல்லத்தினை அமைத்து பூஜிப்பது எந்த இந்து சாஷ்த்திரத்தில் நியாயமென குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லூர் கோவில் கூட மசூதி அமைந்திருந்த இடம் என்பதும் வரலாறு தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் மதத்தின் பேரால் வெரியுனர்விணர்வினையும் இனக்கிலேசங்களையும் கொளுத்திவிடுவதனால் எதனைத்தான் சாதிக்க முடிந்தது. அரசியல் சானக்கியமின்மை, அரசியல் வங்குரோத்து தன்மையின் இறுதி வடிவம்தான் இவ்வாறான இன, குல, மத வாதங்களை தூண்டி அரசியல் இலாபம் ஈட்ட முற்படுவது என்பது வரலாறு. இத்தகைய ஈனச்செய்கை மூலம் ஒற்றுமையாக வாழ முற்படும் இரு சகோதர சமூகங்களை பிரித்து அரசியல் செய்வது தெய்வக்குற்றமாகாதா என்ற கேள்வி எழுகின்றது.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயர் அவர்கள் எப்பொழுதும் தமிழ் முஸ்லிம் உறவிற்கான இணைப்பு பாலத்தை உடைத்தெரிவதிலே குறியாய் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய இனத்துவேச அமைப்பான விஷ்வ ஹிந்து பரீக்சத் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளராக இருப்பதனால் இந்தியாவில் ஓடும் இரத்த ஆறுகளை இலங்கையிலும் ஓடவைக்கும் நிகழ்ச்சி நிரலை கட்சிதமாக காய்னகர்த்துகிறார் என எண்ணத்தோன்றுகின்றது.


படுவான்கரை மக்கள் போக்குவரத்தில் எதிர்கொண்ட பிரச்சினைக்கும் கல்வி கலாசார பொருளாதார பின்னடைவுக்கும் பிரதான காரணங்களில் ஒன்றாக அமைந்த போக்குவரத்துக்கான பாலமின்மையை போக்க அரசு நடவடிக்கை எடுத்த போது காத்தான்குடி படுவான்கரைக்குள் வந்துவிடும் என்று எக்காலமிட்டார். மண்முனை( மரைக்கார் என்பவரே 1926ம் ஆண்டு மண்முனை பாலம் அமைக்கவென தனது சொந்த காணியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.) இன்று தமிழர்கள் முஸ்லிம்களுக்கு வாக்குப்போடக்கூடாது என்று இனவாதம் பேசுவது வாஸ்த்தவம்தான். கடந்த காலங்களில் யோகேஸ்வரன் ஐயர் அவர்களின் தொகுதியிலே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் அரசியலில் குதித்தபோது மாக்கான் மாக்காரை ஒரு முஸ்லிம் என்று பார்க்காது தோற்கடித்து தேவ நாயகத்தை பாராளுமன்றம் அனுப்பியதும், வாழைச்சேனை கிராம சபை இருந்த காலப்பகுதியில் பெரும்பான்மை முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட சபையில் கனகம் என்பவரை ஓட்டமாவடியைச்சேர்ந்த முஸ்லிம்கள் தவிசாளராக நியமித்தமை தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கான சான்றுகள். ஆனால் இன்று வரலாறு மீண்டு வருகின்றது. தமிழர்கள் முஸ்லிம்கள் என்று பாராமல் தமது அபிவிருத்திகளையும், தேவைகளையும் சரிவரச்செய்யும் தலைமைகளையும் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகளையும் பாறாளுமன்றிட்கு அனுப்பும் விழிப்புணர்வுள்ள சமூகங்களாக தமிழ் முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. கடந்த கால யுத்த வடுக்களை களைந்து முஸ்லிம்கள் கந்தையாவுக்கும் தமிழர்கள் ஹனீபாவுக்கும் வாக்களித்து தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முற்படும்போது முட்டுக்கட்டையாக இருந்து இனவாதம் பேசுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். வடக்கிலே தமிழ் சகோதரர்கள் முஸ்லிம் ஒருவருக்கும் முஸ்லிம்கள் தமிழ்க்கட்சி ஒன்றுக்கும் வாக்களித்து மாகாண சபைக்கு அனுப்ப முடியுமாக இருந்தால் ஏன் கிழக்கு சமூகம் சகவாழ்வை நோக்கி தன்னை மாற்றிக் கொள்ளக்கூடாது. இத்தகைய கேள்விகளுக்கு கேலர யோகேஸ்வரன் ஐயர் அவர்களால் பதிலளிக்க முடியுமா என்ற வாதம் இங்கு எழுந்துள்ளது.


முஸ்லிம்கள் கிரானில் இருந்த முகம்மதியா பாடசாலைகளையும் நிலங்களையும் தேடிச்செல்வதோ, வாகரை பள்ளிவாசலை மீண்டும் அமைக்க முயற்சி எடுப்பதோ கல்லியங்காட்டில் பிரம்மா குமாரிகள் இல்லத்தை உடைத்து மீண்டு மசூதி கட்டுவதோ நடைமுறைச்சாத்தியமானதாக அமைவதில்லை. இரு இனங்களும் பதிலீடுகளையும் மாற்றீடுகளையும் சிந்தித்து விட்டுக்கொடுப்புடன் பகிர்ந்துண்டு வாழ்வதே யுத்தத்தினால் தீய்ந்து போன இரு சமூகங்களதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைக்காமல் உண்மைக்குப்புரம்பாக வரலாற்றுத்திரிபுகளை மேற்கொண்டு கலவரங்களையும் இனக்குரோதங்களையும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியலுக்காக கிளறிவிடுவது தர்மமாகாது.
இந்து தர்மத்திலே 32 தர்மங்களை செய்பவன் தர்மவானாகும் அவற்றில் ஆதுலர் சாலை(ஏழைகளுக்கு தர்ம விடுதி) அறு சமயத்தார்க்கு உணவு (எல்லா சமயத்தவர்க்கும் உணவு), மடம், தடம், தண்ணீர்ப்பந்தல் அமைத்தல், விலை கொடுத்து உயிர் விடுதல் என பல சமூக நல பணிகளை இந்து சமயம் ஏவுகின்ற போது இனம் மாதம் பார்த்து ஏவவில்லை. அதனை செய்பவரை தடுப்பது பாவமாக கருதுகின்றது என்ற சமய உண்மையை நன்கறிந்து முஸ்லிம் சகோதரர்கள் மனிதாபிமான முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மதமாற்ற சாயம் பூசி தடுக்க நினைப்பது எவ்வகையில் மதநேரியாக அமையும் என்பதனை கெளரவ யோகேஸ்வரன் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார்.
""போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை,'' என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ணபிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன்.
கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
""அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது <உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு,'' என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான். பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
""அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு,'' என்றார்.
பிறர் மீது பழிபோடுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் கொலைக்கும், தற்கொலைக்கும் ஈடானது என்பதைப் புரிந்து கொண்டீர்களா. இதுதான் நாங்கள் படித்த இந்து மத சாஸ்த்திரம். சுயலாப அரசியலா யதார்த்த சகவாழ்வா ஐயா அவர்களின் எதிர்கால வார்த்தைகளிலே தங்கியுள்ளது.

நன்றி முகலூல்

»»  (மேலும்)

பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர் பலி

L'aéroport de Zaventem, à Bruxelles, cible d'une explosion, mardi 22 mars 2016, sur une photo partagée par Jef Versele sur Facebook.பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸின் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.

பிரஸ்ஸல்ஸ் நகரிலுள்ள ஜாவெண்டெம் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகளும், நகரின் மத்தியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் வெடித்துள்ளன.
விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து கிடப்பதையும், கூரையின் சில பகுதிகள் இடிந்து அந்த இடிபாடுகள் தரையில் விழுந்துள்ளதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜாவெண்டெம் விமான நிலையத்தில் உள்ளோர்களை வெளியெற்றும் பணி நடைபெறுகிறது.சுரங்க ரயில் பாதையும் மூடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பாரிஸ் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபரான சாலஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெறுள்ளன.
»»  (மேலும்)

3/21/2016

சுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் புகலிட இலக்கிய சந்திப்பின் 46 வது நிகழ்வு இம்முறை பிரான்சில் இடம்பெறுகின்றது.

46வது இலக்கியச்சந்திப்பு - பரிஸ், பிரான்ஸ்'s Profile Photo
சுமார் இருபத்தியெட்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் புகலிட இலக்கிய சந்திப்பின் 46 வது நிகழ்வு இம்முறை பிரான்சில் இடம்பெறுகின்றது.

எதிர்வரும் சனி ஞாயிறு(26,26) தினங்களில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணிவரை இடம்பெறும். இச்சந்திப்பில் பல்வேறுவகையான சஞ்சிகைகள், நூல்கள் சார்ந்து வெளியீடுகளும்,விமர்சனங்களும் இடம்பெறும்.அத்தோடு கலை,இலக்கிய, அரசியல்,சமூகம் சார்ந்த கருத்தாடல்களும் விவாதங்களும் ,ஆற்றுகைகளும் இடம்பெறவுள்ளது.கருத்து சுதந்திரத்தின் அடையாளமாக இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில் இலங்கையுட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள்,விமர்சகர்கள்,கலைஞர்கள்,வாசகர்கள் மற்றும் சமூக செயற்பட்டாளர்கள் கலந்துகொகின்றார்கள்.
»»  (மேலும்)

நல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளதுநல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 450 கிராம் எடையுடைய பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. பாணின் விலை உயர்விற்கு நிகராக ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
»»  (மேலும்)

பெண்களே உங்கள் கஷ்ட நஷ்டங்கள்,வறுமைகள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பிள்ளை பெறும் இயந்திரமாயிருங்கள்- கல்விப் பணிப்­பாளர் கே.சத்­தி­ய­நாதன்

இன்று தமிழ் மக்­களின் சனத்­தொகை வீழ்ச்சி கண்டு வரு­கின்­றது. எனவே, தமிழ்ப்­பெண்கள் அதி­க­மான குழந்­தை­களைப் பிர­ச­விப்­ப­தற்கு முன்­வ­ர­வேண்டும் என மட்­டக்­க­ளப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்­பாளர் கே.சத்­தி­ய­நாதன் தெரி­வித்தார்.  
sathiyanathan-a

பட்­டிப்­பளை பிர­தேச கலை இலக்­கிய சமூக அபி­வி­ருத்தி ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் செம்மை மாதர் விருதும், பெண்ணால் முடியும் சிறப்­புக்­க­வி­ய­ரங்­கமும் கொக்­கட்டிச் சோலை கலா­சார மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.


"எம்­மை­விட ஏனைய சகோ­தர இனத்­த­வர்­களின் சனத்­தொ­கையும், மாண­வர்­களைப் பாட­சா­லைக்கு அனு­ம­திக்கும் விகி­தத்­திலும் அதி­க­ரிப்­புள்­ளது. ஆனால் தமிழ் மாண­வர்­களின் வீதத்­திலே வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளமை வேத­னை­யான விட­ய­மாகும்."


எம் இனத்தின் விகி­தா­சாரம் குறை­வ­டைந்து செல்­வது எமக்கு நல்­ல­தல்ல. சமூக, பொரு­ளா­தார விட­யங்­களில் சனத்­தொகை வீதம் என்­பது தாக்கம் செலுத்­தக்­கூ­டி­யது. நமது பிர­தே­சங்கள் ஸ்திர­மாக இருக்க வேண்­டு­மானால் மாணவர் வளமும், மனி­த­வ­ளமும் சிறப்­பாக இருக்க வேண்டும் அப்­போ­துதான் நிதி­வ­ளமும், பௌதீக­ வ­ளமும் நிறை­வாகக் கிடைக்கும்.
இலங்கை செம்மை மாதர் விருது வழங்கி கௌர­விக்­கப்­ப­டு­கின்ற பெண்கள் சமூகத்தில் எமது இனப்பரம்பலை பெருக்கக்கூடிய வகையிலான விழிப்புணர்வுத் திட்டங்களை கிராம மக்களிடையே முன்னெடுக்க வரவேண்டும்.


»»  (மேலும்)

3/19/2016

ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த அதிரடி தீர்ப்பு

ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பொன்ற 23.02.2015 அன்று வழங்கியிருக்கிறார். மன்மீத் சிங் எதிர் ஹரியானா மாநிலம் என்ற வழக்கில் ( WP 26734/2014 dt 23.02.2015 )தீர்ப்பளித்த நீதியரசர் அவர்கள் காவல்துறைக்கு சில முக்கியமான வழிகாட்டுதல்களை ஆணையாகப் பிறப்பித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில் ஊடக நிறுவனங்களுக்கும் ஒருஅறிவுரையை வழங்கியிருக்கிறார்.

மன்மீத் சிங் என்பவர் தனது மனைவியைப் பிரித்துக்கொண்டுபோன அவரது பெற்றோர் அவரைப் படுகொலை செய்துவிட்டனர் என்று தொடுத்த வழக்கில் பின்வரும் உத்தரவை நீதியரசர் கே.கண்ணன் பிறப்பித்திருக்கிறார்:
1. ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை ஆதரிக்கவும் அவர்களுக்கு ஆலோசனைகளை நல்கவும் ; கலப்புமணம் நடந்தால் கிராமத்தில் பதற்றம் ஏற்படாமல் அமைதியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு கிராமத்திலும் ‘மக்களின் நண்பர்கள் ‘ என்ற பெயரில் அங்கிருக்கும் முற்போக்காளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
2. ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஆணவக் கொலை குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கென தனிப் பிரிவுகள் ஏற்படுத்தவேண்டும்.
3. கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளில் ஆணையோ பெண்ணையோ அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் பெற்றோருடன் அனுப்பக்கூடாது.
4. ஆணவக் கொலை தொடர்பான வழக்கை எஸ்.எஸ்.பி ஒருவரின் நேரடி மேற்பார்வையில் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ளவர்தான் விசாரிக்கவேண்டும்.
5.பழமையான மரபுகள் கலப்பு மணத்துக்குத் தடையாக இருக்குமெனில் தனி மனிதரின் சுதந்திரத்துக்குத்தான் காவல்துறை முன்னுரிமை அளிக்கவேண்டும்.
6. திருமணப் பதிவு அலுவலகங்களில் பதிவின்போது தம்பதியினரின் பெற்றோர் உடன்வரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தக்கூடாது.
ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் நீதியரசர் கே.கண்ணன் “ ஊடகங்களில் வெளியிடப்படும் வரன் தேடும் விளம்பரங்கள் பல சாதியப் பெருமிதத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. வருமானத்தை முதன்மையாகக் கருதாமல் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 
»»  (மேலும்)

முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்!

முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஆரம்பம்! மைத்திரி, ரணில் சம்பந்தன் உட்பட பலர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது தேசிய மாநாடு கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், பல்லாயிரக்கணக்கான போராளிகளின் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் கோலாகலமாக தற்போது பாலமுனையில் ஆரம்பமாகியது.
இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விசேட ...
அதிதியாகவும் கலந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் உட்பட பல கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மு.கா.செயலாளர்நாயயகம் எம்.ரி.ஹசன்அலி மாநாட்டில் பங்கேற்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி .ரி.சகாதேவராஜா
»»  (மேலும்)

3/18/2016

விசாரணையை ஒத்திப்போடுவதும் தடுத்து வைப்பதுமாக தொடரும் அரசியல் பழிவாங்கல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 01ம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை சந்திரகாந்தனின் பிணை மனு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு பிணை மனு மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கம் உத்தரவிட்டார்.
»»  (மேலும்)

3/17/2016

வந்தார் மகிந்த

கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது கலந்துகொண்டுள்ளார். கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அவர் அக்கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது -
»»  (மேலும்)

3/16/2016

"எதிர்ப்புப் பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரானதல்ல"

கூட்டு எதிர்க் கட்சியினர் நாளை நடத்தவுள்ள எதிர்ப்பு பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரானது அல்ல என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்த எதிர்ப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தப் பேரணியின் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பெரும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதில் கலந்துகொள்ளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்று அந்த கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, சம்பந்தப்பட்ட பேரணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை அல்ல என்று கூறினார்.
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத செயல்களை கண்டித்தே இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர் துமிந்த திசாநாயக்க காரணங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களின் பிரச்சனைகளை பேசுவதன் முலம் கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படுவதாக யாரும் கூற முடியாது என்றும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் சுதந்திரக் கட்சியின்
உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித்த "தேசியத் தலைவர்"!

சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வு அதிகாரியைச் சந்தித்த லாச்சப்பல் "தேசியத் தலைவர்"!

பாரிஸ் லாச்சப்பலில் தன்னையே தேசியத்தலைவரின் உண்மையான வாரிசு என்று தம்பட்டமடித்துத் திரிந்த பிரபல வர்த்தகரான சிவகுரு பாலச்சந்திரன் நேற்றுக் காலை (15.03.2016) பாரிசிலுள்ள சிறிலங்கா தூதரகத்தில் உள்ள புலனாய்வு அதிகாரியைச் சந்தித்து இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக பேச்சுநடாத்தியிருக்கிறார்.
தூதரகம் செல்வோரை எல்லாம் துரோகிகள் என்று தனது போட்டோக்கொப்பி பத்திரிகையில் வசைபாடிவந்த அவர், துக்ளக் பத்திரிகையை லாச்சப்பலில் எரித்து  சினிமா காடியவர் இப்போது திடீரென்று தூதரகம் சென்றதும் அங்கு புதிதாக பதவியேற்றுள்ள ராணுவ புலனாய்வு அதிகாரியை சந்தித்திருப்பதும் இவர்களது பிழைப்புவாத நடவடிக்கைகளே ஆகும்.

குட்டி யாழ்ப்பாணம் என்று வர்ணிக்கப்படும் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெயரில் நடக்கும் அனைத்து வைபவங்களிலும் அழையா விருந்தாளியாக நுழைந்து கூத்துக்காட்டுவதில் எப்போதும் முன்னிற்கும் பாலச்சந்திரன், கடைசியாக காட்டிய சினிமா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பாரிஸ் வந்திருந்தபோது நடாத்திய தர்பார்தான். அதற்கு முன்னிலையில் நின்றவர் இந்த பாலச்சந்திரன்.

புலிகளின் உண்மையான விசுவாசியாக தன்னை அவர் காட்டிக்கொண்டாலும், அவர் தனது வியாபாரத்திற்காகவே அவ்வாறு செய்கிறார் என்பதை புலிகள் நன்றாக அறிந்தே இருந்தனர். 
அதனால்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது தேர்தலில் அவர் போட்டியிட்டபோது நூறு வாக்குகளை மாத்திரமே அவரால் பெறமுடிந்தது.
புலிகளின் முக்கிய தூண் ஒருவரை சந்திக்கவிருப்பதாக நினைத்திருந்த புலனாய்வு அதிகாரியும் இவரைச் சந்தித்த பின்னர் இவரைப்பற்றி தெரிந்துகொண்டதாகவும், அவரைச் சந்தித்து தனது நேரத்தை வீணாக்கிவிட்டதாக தனது சக ஊழியர்களிடம் கூறியதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவிலும் தமிழாலயம் புத்தகக்கடையை திறக்கப்போகிறாரோ? என முகனூலில் செய்திகள் உலவுகின்றன.


»»  (மேலும்)

3/15/2016

அடுத்தவன் வயலை அறுவடை செய்ய முயலும் யோகேஸ்வரன் எம்பி

அடுத்தவன்  வயலை அறுவடை செய்ய    முயலும் யோகேஸ்வரன் எம்பி

Afficher l'image d'origineஇம்முறை மட்டக்களப்பில் இருந்து பல்கலை கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களில் பலர்  பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து  வரலாற்றிலே முதல் முறையாக தெரிவாகியுள்ளனர். இதற்கு காரணம் சந்திரகாந்தன் முதல்வராக இருந்த போது இட்ட கல்வித்துறை சார்ந்த அத்திவாரம் ஆகும்.புதிய கல்வி வலயங்களை உருவாக்கியதும் பல பாடசாலைகளை தரமுயர்த்தி அதற்கான வாய்ப்பு வசதிகளை அதிகரித்ததும்,ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடிந்தவரை தீர்வுகண்டதும் என்று பல அபிவிருத்திகளை கல்வித்துறையில் சாதித்தவர் சந்திரகாந்தன். 

 அண்மையில் க.பொ.த உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியானது இது சார்ந்த செய்திகளும் முன்னாள் முதல்வருக்கான நன்றிகளும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது.இதனை பொறுக்க முடியாத கூட்டமைப்பினர் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இதில் ஒரு கட்டமாக ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு வவுணதீவு மேற்கு கல்வி வலயம் ஒன்றை உருவாக்கியது பிள்ளையான் அல்ல தாமே என்று கயிறுதிரிக்க தொடங்கியுள்ளனர்.
தங்களுக்கு சார்பாக இருக்கின்ற பிழைப்புவாத ஊடகங்களின் துணையோடு இப்போது வவுணதீவு மேற்கு கல்வி வலையத்தை தாமே உருவாக்கியதாக கதை விட தொடங்கியுள்ளனர்.

இந்த கல்வி வலயம் ஒன்றின் அவசியம் பற்றி வரலாற்றில் யாருமே எண்ணிப்பார்த்ததில்லை. படுவான்கரை மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் சந்திரகாந்தனே இந்த முன்னெடுப்பை தொடங்கினார் அவரே அதன்திட்டத்தை வடிவமைத்தார்.மத்திய கல்வியமைச்சுக்கு கொடுக்காத தொந்தரவெல்லாம் கொடுத்து அதற்கான அனுமதியை பெற்றார்.(இந்த வலயம் மட்டுமல்ல திருக்கோயில் வலயமும் கூட ) அவரே அந்த கல்வி வலயத்துக்கு திறமை வாய்ந்த பாஸ்கரன் என்னும் கல்வி பணிப்பாளரை பொருத்தமாக நியமித்து அவ்வலயத்தை திறந்தும் வைத்தார்.


ஆரம்பத்தில் பிள்ளையான் முதலமைச்சரான போது தங்கதுரையை போட்டமாதிரி "பொட்டர் எப்படியும் ஆள போட்டிடுவார்" என்று கனவு கண்டனர்.பாம்பின் கால் பாம்பறியும் என்பதால் பொட்டரால் அது முடியவில்லை.எனவே அதன்பிறகு இது தேறாத மாகாண சபை என்று சாபம் போட்டனர்.பிள்ளையானுக்கு அரசியல் தெரியாது,தகுதி கிடையாது என்று கிண்டலடித்தனர்.

ஆனால் பிள்ளையானின் அபிவிருத்தியின் வேகம் ஒருகணம் இவர்களை திக்கு முக்காட செய்தது.அப்போது அபிவிருத்தியால் ஏதும் நடக்காது உரிமையே முக்கியம் என்று புலுடால் விட்டு பார்த்தனர்.அதுவும் சரிவரவில்லை.   கடைசி அத்திவாரமாக  சேவைகளை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். பிள்ளையானை சிறையிலடைத்துவிட்டால் அனைத்தையும் தாமே உரிமை கொண்டாடிவிடலாமென எண்ணுகின்றார்கள்.முதலில் பிள்ளையான் ஆட்சியை சூது செய்து கைப்பற்றி தானம் செய்தார்கள்.பின்னர் பிள்ளையான் உருவாக்கிய கட்டிடங்களை தங்களது தலையாட்டி அமைச்சர்களை கொண்டு திறந்து வைத்தார்கள்.இப்போது ஊரறிய உலகறிய பிள்ளையான் செய்த மகத்தான பணிகளுக்கு உரிமை கொண்டாட தொடங்கியுள்ளனர். சீ -- கேவலமான பிழைப்பு இது .
»»  (மேலும்)

தமிழர் அரசியலை இயக்கும் சாதிச் சக்கரம்.

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் கால நிலை 1940களில் எப்படி அமைந்திருந்ததோ அப்படியேதான் இன்றைக்கும் அமைந்துள்ளது. கடந்த 68 வருடங்களாக எந்தவிதமான பரிணாம வளர்ச்சியும் இன்றி எமது அரசியல் தொடர்ந்து ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டு மக்களை வண்டி இழுக்கும் மாடுகளைப் போல பாவித்துக் கொண்டு வருகிறதற்கான ஒரேயொரு அடிப்படைக் காரணம் எமது தமிழ் அரசியல் பாவிக்கும் "நுகத்தடி"தான். அதன் பெயர்தான் "சாதி".
1949ல் மலையக மக்கள் நாடற்றவராக ஆக்கப்பட்டபோது, அதனைக் காரணமாக வைத்து சமஷ்டி கட்சி ஆரம்பித்த நாம் அவர்களை அப்படியே கை கழுவி விடச் செய்தது எமது "சாதி" மனப்பான்மையே.
கடந்த கால ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் சிந்தாந்த நெறிப்படுத்தலுடன் முன்னெடுக்கப்படுவதை தடுத்து அதனை திசை திருப்பி முள்ளிவாய்க்கால் வரை இட்டுச் சென்றதும் எமது "சாதி" ஆதிக்கமே.
இந்த "முள்ளிவாய்க்கால்" முற்றுகைக்குப் பல வருடங்கள் முன்பே 1964ல் ஒரு முன் ஒத்திகையை "நிச்சாமத்தில்" நடாத்திப் பார்த்ததும் அதே "சாதி" அரசியல்தான். சிங்கள அரச படைகளுடன் இணைந்து "நிச்சாமம்" கிராமத்தைச் சுற்றி வளைத்து அதற்குள் வாழ்ந்த குழந்தைகளுக்குப் பால் மா கூட கிடைக்கவிடாமல் தமிழர்களைப் பட்டினிச் சாவு நோக்கி நகர்த்தியதும் எமது "சாதி" ஆணவமே.
போரில் பாதிக்கப்பட்டு இன்று பரிதவிக்கும் மக்கள்-போராளிகள், அனாதைகளாக-அகதிகளாக அலைவதற்கும் மூல காரணம் எமது "சாதி" சிந்தனையே.
1990ல் முஸ்லீம் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டபோது அதற்கு ஆதரவு வழங்கியதும் எமது "சாதி"யின் நியாயத்தனமே.
இன்று அரசியல் கைதிகள் விடயத்தில் இரட்டை வேடம் பூண்டு நாடகம் ஆடுவதும் "சாதி" (மனித) அபிமானமே.
எமது ஆளும் ஆட்சி அதிகார ஆசைக்காக, அரசியல் விழிப்புணர்வு இன்றி பழிவாங்கும் உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆயுத வழிமுறைக்கு விடுதலைப் போராட்டம் என அங்கீகாரம் கொடுத்து வளர்த்தெடுத்து இறுதியில் அதிகாரம் கிடைக்காது என்றுணர்ந்து அதனை அழிக்க உதவியதும் எமது "சாதி" மேலாதிக்க மனோபாவமே.
தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் என்பது எப்போதுமே ஆதிக்க சாதிகளின் சுயநலப் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டே முன் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால யுத்தம் இன்று பாதிக்கப்பட்ட சாதிகளையும் அதே சுயநலப் பொருளாதார நலன்கள் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படும் தளத்துக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
யுத்த காலத்தில் "ஆயுதம்" பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழ் "சாதிகளை"ப் பதவிகளில் அமர்த்தி பெரும்பான்மைத் தமிழ் ஆதிக்க "சாதிகளை" கட்டி ஆண்டது. "ஆயுதம்" மௌனித்ததனைத் தொடர்ந்து இன்று ஆதிக்க சாதியினர் "பழைய கணக்கு" தீர்க்கும் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளனர்.
1930களில் சம உரிமை - சமத்துவ சமூகம் அமைக்கப் போராடிய "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" ஆதிக்க சாதிகளால் அழிக்கப்பட்டது. 1980களிலும் அதே கொள்கைகளுக்காக ஆயுதம் தூக்கியவர்கள் ஆதிக்க சாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஓரம் கட்டப்பட்டு கொல்லப்பட்டனர்.
எமது தமிழ் சமூகம் எதனையுமே மனிதர்களாக இருந்து கொண்டு சிந்திப்பதில்லை. யாராவது ஒருவர் ஒரு கருத்தை முன் மொழிந்தால் அக்கருத்து என்ன என்பதனை பரிசீலிப்பதற்கு முன்னர் அக்கருத்தை முன்வைத்தவர் எந்த "சாதி" என்று பார்த்த பின்னரே அதனைப் பற்றிய விவாதத்தில் இறங்குவார்கள். அக்கருத்தால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை விட தாம் சார்ந்த சாதிகளுக்கு அதனால் கிடைக்கும் சாதக பாதகங்கள் பற்றியே கணிப்பீடு செய்வார்கள். இந்த இடத்தில் நீதி - நியாயம் என்பது சாதி வாய்ப்பாட்டின் பிரகாரமே தீர்மானிக்கப்படும்.
ஜனநாயக அரசியலிலும் சரி, ஆயுத அரசியலிலும் சரி "சாதி" சார்ந்த பார்வை - சிந்தனை ஊடாகவே அவற்றிற்கான ஆதரவுத் தளங்கள் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயக அரசியல் அரங்கில் கடுமையாக உழைத்த பலர் "சாதி" அடையாளத்தால் அரசியல் முன்னணிக்கு வரமுடியாத வண்ணம் ஓரங்கட்டப்பட்டே வந்துள்ளனர். ஆயுத அரசியலில் ஆயுதத்தைக் கையாண்டவர்களுக்கும் அந்த ஆயுத அரசியலை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்து வளர்த்தெடுத்து அதனூடாக சுயலாபம் தேடியவர்களுக்கும் இடையே இந்த "சாதி"க் கணிப்பீடுகளும் கண்காணிப்புக்களும் இருந்ததன் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் அரசியல் சூழல் ஆகும்.
இன்று வட கிழக்கு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகள் முதல் பாராளுமன்றம் வரை அரச நிர்வாகங்கள் உட்பட "சாதி" வாய்ப்பாட்டின் வகுத்தல் வழி ஊடாகவே "காரியங்கள்" யாவும் அரங்கேறுகின்றன.
கட்சி - கூட்டணி - முன்னணி - பேரவை யாவுமே ஆதிக்க சாதிகளின் அணி திரட்டல்களாகவே அமைந்துள்ளதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் வெளிப்பாடுகளாக அல்ல. பாதிக்கப்பட்ட "சாதிகள்" ஆதிக்க "சாதிகளின்" சிந்தனையில் ஊட்டப்பட்டு வளர்ந்ததன் காரணமாக போட்டிக்குப் போட்டியாக - பழிவாங்கல்களாக அரசியல் நடவடிக்ககைளை முன்னெடுக்கிறார்கள். அது ஆதிக்க "சாதி" அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு வாய்ப்பாகவே அமைகின்றன.
வட மாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்காக "சாதி-சமய" வாய்ப்பாட்டுக் கணக்கு போட்டுப் பார்த்தே கொழும்பிலிருந்து (வடக்கில் தகுதியானவர்கள் இல்லாமல் போய் விட்டனர்) சேர் பொன்னம்பலம் இராமநாதனின் இரத்த வழி உறவை இழுத்து வந்து வேட்பாளராக்கி முதலமைச்சராக்கினார்கள். இந்தத் தேர்தலில் ஆதிக்க சாதிகளின் சிநதனைப் போக்கின் ஆளுமையின் கீழ் சிந்திக்கப் பயிற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாக்குகளும் சேர்ந்தே ஆறுமுகனாரின் மறு அவதாரத்தை தலைமையாகக் கொண்ட ஒரு மாகாணசபையை உருவாக்கியது.
ஆனால் இந்த மாகாண சபையினால் வடக்கில் உடலுழைப்பை மட்டும் நம்பி வாழும் எந்தவொரு தொழிலாளர் சமூகத்திற்கும் எதுவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. ஏனெனில் "சாதி"யே அங்கு செங்கோலாக அமர்ந்துள்ளது.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகள் - அகதி முகாம்களில் அவலப்படுபவர்கள் பற்றி சர்வதேச அமைப்புக்கள் - ஊடகங்கள் காட்டும் அவதானத்தை சொந்த மண்ணில் செயற்படும் மாகாண சபையும் தமிழ் ஊடகங்களும் அசட்டை செய்வது "சாதி" அபிமானத் தார்மீக நெறியே.
"சாதி"களை மூலஸ்தானத்தில் முன்னிறுத்தும் சமயங்களைக் கட்டிப் பிடித்து கொண்டு "சம உரிமையை" கோயில் கோபுரங்களிலும், கோவில் திருவிழாக்களிலும் நிலை நிறுத்த முற்படும் ஒடுக்கப்பட்ட தமிழ் சாதிகள் அதன் மூலம் ஆதிக்க சாதிகளின் தேவைகளுக்கு முட்டுக் கொடுக்கும் பணியினையே செய்கிறார்கள்.
பாதிக்கப்படும் "சாதி"த் தமிழர்கள் இந்த "சாதி" வாய்ப்பாட்டிலிருந்து விடுபட்டு, தங்களை அடக்கி ஒடுக்கப்படும் மக்களாக இனங்கண்டு இலங்கைக் குடி மக்களாக இணைந்து தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதன் ஊடாகவே இந்த "சாதி" எனும் கொடிய நஞ்சை எமது தமிழ் சமூகத்திலிருந்து ஆணிவேரோடு அழிக்க முடியும்.
இதனை விடுத்து ஊருக்கு ஊர் "சாதிக்கொரு" கோவில் கோபுரம் கட்டி எழுப்புவதும் - முன்னேற்றக் கிராமங்கள் அமைப்பதும் - மூலதன நிறுவனங்களை தோற்றுவிப்பதும் "சாதி" என்னும் தமிழர் பண்பாட்டை தொடர்நதும் தக்க வைப்பதாகவே அமையும்.


»»  (மேலும்)

இலங்கையின் பல்லினத்தன்மைக்கு பொருத்தமான கண்டி மன்றம் வெளியிட்டுள்ள யாப்பு திருத்த யோசனைகள்


பேராசிரியர் நுஹ்மான்,பேராசிரியர் ஹஷ்புல்லா,பேராசிரியர் அனஸ்  போன்றோருடன் இணைந்து பதினோரு புத்திஜீவிகள் இக்கண்டி மன்றத்தின் சார்பில் மேற்படி யோசனைகளில் கையெழுத்திட்டுள்ளனர்.

இனரீதியாக எல்லைகளை வரையறுத்து அதிகார மையங்களை உருவாக்குவது இலங்கையின் பல்லின தன்மைக்கு பொருத்தமற்றது என குறிப்பிடும் யோசனைகளுடன் வடக்கு கிழக்கை இணைப்பதோ,கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு ஒன்றினை உருவாக்குவதோ உசிதமானதல்ல என தெரிவிக்கும் மேற்படி அறிக்கை மாகாண சபை முறைமையை பலப்படுத்துமாறு கோருகின்றது.

பிரதேச எல்லைகளுடைய மற்றும் பிரதேச எல்லைகள் அற்ற சிறுபான்மை  இனங்களுக்கான அரசியல் யாப்புத் தீர்வுகள்
தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மத சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பாக்கின்றோம்.
யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக்கோள்களை அர்த்தமுள்ள முறையில் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய யாப்பில் உள்ளடக்குவதற்காகப் பின்வரும் ஆலோசனைகளை நாம் முன்வைக்கின்றோம்.
1.பிரதேச நிலையில் அதிகாரப் பகிர்வு
அதிகாரப் பகிர்வு என்பது இனத்துவ அடிப்படையிலும் பிரதேச எல்லை என்ற அடிப்படையிலும் இன்று புரிந்துகொள்ளப்படுகின்றது. பிரதேச நிலையில் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கை இலங்கைத் தமிழ்த் தேசிய வாதிகளால் சுதந்திரத்துக்குப் பிந்திய ஆரம்ப காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. சிங்களப் பெரும்பான்மை மேலாதிக்கமும் இனத்துவப் பாராபட்சமும் இதற்குக் காரணமாக அமைந்தன. இந்த நாட்டில் தொடர்ச்சியான இன வன்செயல் களுக்கும், முப்பது ஆண்டுகால யுத்தத்துக்கும் பேரழிவுக்கும் இது இட்டுச் சென்றது.
இந்தியத் தலையீட்டின் மூலம் 1987ல் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமும், அரசியல் யாப்புக்கான 13 ஆவது திருத்தமும் இலங்கையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தின. வடக்கும் கிழக்கும் நிபந்தனையுடன் இணைக்கப்பட்டன. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தீர்மானம் பற்றி கிழக்குமாகாண மக்களின் கருத்துக் கேட்கப்படவில்லை. எனினும், 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வடக்குக் கிழக்கு இணைப்புச் செல்லுபடியாகாதென்று தீர்ப்பு வழங்கி வடக்கையும் கிழக்கையும் பிரித்தது. இப்போது, 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவற்றை விடக் குறைந்த அதிகாரங்களுடன் தனித்தனி மாகாண சபைகள் நடைமுறையில் உள்ளன.
பிரதேச சுயாட்சி பற்றிப் பேசுவதற்கும் சுயாதீனமான பிரதேச அல்லது மாகாண சபைகளை நிறுவுவதற்கும் ஒரு வாய்ப்பான சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு மட்டுமன்றி அதிகாரப் பகிர்வையும் அதிகாரப்  பரவலாக்கத்தையும் விரும்பும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கத் தக்கது.
ஆகவே, தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமை தொடர வேண்டும் என்றும், மாகாணக் கவர்னர்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் கண்டி மன்றம் முன்மொழிகின்றது.
2.கிழக்கு மாகாணம்
  அ) வடக்கையும் கிழக்கையும் மீள இணைப்பது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அது ஒரு நடைமுறை சாத்தியமான கோரிக்கை அல்ல. முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் மீள் இணைப்பை விரும்பவில்லை. மேலும், கிழக்கிலங்கையின் மொத்தச் சனத் தொகையில் தமிழர்கள் 39.79%  வீதத்தைக் கொண்ட சிறுபான்மையினரே என்ற உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
  ஆ) கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்ச்சியற்ற தனிமாகாணம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் அச்சமூகத்தின் தேவைகளுக்கு உகந்ததல்ல என்றும், இன்றுள்ள இனப்பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என்றும் நாங்கள் கருதுகின்றோம். ஆகவே, முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனிமாகாணத்தை உருவாக்கும் கோரிக்கையை நாங்கள் வன்மையாக நிராகரிக்கின்றோம்.
  இ) கிழக்கு மாகாணம் இலங்கையில் சமாதான சகவாழ்வுக்கு ஒரு முன்மாதிரி மாகாணமாக இருக்க முடியும். அது மட்டுமே இலங்கையில் கிட்டத்தட்ட இனத்துவச் சமநிலையுடைய ஒரே ஒரு மாகாணமாகும். இங்கு தமிழர்கள் 39.79% வீதமும், முஸ்லிம்கள் 36.72% வீதமும், சிங்களவர்கள் 23.15% வீதமும் வாழ்கின்றனர். இனப் பன்மைத்துவம், நல்லாட்சி, சமாதான சகவாழ்வு என்பவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டான மாகாணமாக அது பரிணமிப்பதற்கு இது ஒரு சிறந்த சூழ்நிலையாகும். மாகாணத்துக்கு உள்ளும், மாகாணங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு வேண்டிய யாப்புரீதியான விசேட உறுப்புரைகள் மூலம் இம்மாகாணத்தை மேலும் பலப்படுத்த முடியும்.
3.பிரதேச எல்லைகளற்ற சிறுபான்மையினர்
இலங்கையின் மையச் சிந்தனையோட்டம் வடகிழக்குத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி மட்டுமே அக்கறை காட்டியதால், அதேயளவு முக்கியத்துவமுடைய பிரதேச எல்லைகளற்ற மிகப் பெருந்தொகையான இலங்கையின் ஏனைய இனத்துவச் சிறுபான்மையினரின் பிரச்சினை பற்றி இந்த நாட்டின் அரசியல்வாதிகளோ, அறிஞர்களோ, சிவில் சமூகங்களோ இதுவரை அக்கறை காட்டவில்லை.
மாகாண நிலையில் உச்ச அளவு அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டால் கூட இந்த நாட்டில் இனத்துவச் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை அது முற்றாகத் தீர்த்துவிடாது. ஏனெனில், தமிழ்ப்பேசும் சிறுபான்மையினரில் மிகப் பெரும் பகுதியினர், 55% வீதத்துக்கும் அதிகமானவர்கள், பிரதேச எல்லைகளற்ற சிறுபான்மையினராக வட, கிழக்குக்கு வெளியே பிற எல்லா மாகாணங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் சிதறலாக வாழ்கின்றனர். இவர்களுள் இலங்கைத் தமிழர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினரும், மலையகத் தமிழர்களில் 99 % வீதத்தினரும் இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதிக்குச் சற்று அதிகமானவர்களும் அடங்குவர். இவர்களே கடந்த காலங்களில் தென்னிலங்கையில் அவ்வப்போது நடைபெற்ற இன வன்செயல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். அதிகரித்துவரும் சிங்களமயமாக்கப்பட்ட நிருவாகத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுபவர்களும் இவர்களே.
பிரதேச ரீதியிலான அதிகாரப் பரவலாக்கம் இந்நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான பிரதேச எல்லைகள் அற்ற இந்த இனத்துவச் சிறுபான்மையினரின் அரசியல் தேவைகளையும், சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பையும் எவ்வகையிலும் உறுதிப்படுத்தாது. பிரதேச  எல்லைகள் அற்ற இச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் அரசியல் யாப்பு ரிதியிலான சில திட்டவட்டமான பரிந்துரைகளும் நிறுவன ரீதியான கட்டமைப்பும் அவசியமாகும்.
ஆகவே, புதிய அரசியல் யாப்பு பின்வரும் விடையங்களை உறுதிப்படுத்த வேண்டும் என நாங்கள் முன்மொழிகின்றோம்.
  •பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி அமைப்பு களிலும் அவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களால் தேர்ந்தெடுக் கப்படும் அங்கத்தவர்கள் இல்லாதவிடத்து நியமன அங்கத்தவர்களால் அது நிரப்பப்பட வேண்டும்.
  •தங்களுடைய மொழி உரிமையை முழுமையாகப் பயன்படுத்தவும், எவ்வித அச்சுறுத்தலும், பயமும், தடைகளும் இன்றித் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் அனுஷ்டிக்கவும் அவர்களுக்கு உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  •தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கும், பொருளாதார மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கும், எந்தவிதமான பாராபட்சமும் இல்லாமல் அரச, தனியார் நிறுவனங்களில் தொழில் பெறுவதற்கும் உரிய வாய்ப்பு  உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  •சிறுபான்மையினரின் நலன்களைக் கவனிக்கவும் இனத்துவ, மத, பண்பாட்டு, மொழிரீதியிலான எல்லாவிதமான பாராபட்சங்களையும் தடுப்பதற்கும்,  தீர்வுகாண்பதற்கும் சமூக சமத்துவத்துக்கான ஒரு சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் என்றும் நாங்கள் முன்மொழிகிறோம்.
  4.பறங்கியர், மலாயர் போன்ற இன்னும் பல பிரதேச எல்லைகளற்ற சிறுபான்மையினர் உள்ளனர். இலங்கைப் பிரஜைகள் என்றவகையில் அவர்களுடைய தனிமனித மற்றும் குழு உரிமைகள்  அரசியல் யாப்பினால் பாதுகாக்கப்பட வேண்டும்.
  5.இலங்கையின் பல்லின, பல்மத, பல்மொழித் தன்மையைப் புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்க வேண்டும். அத்துடன், இனத்துவம், சாதி, பால், மதம், மொழி என்ற பேதம் இன்றி எல்லாப் பிரஜைகளின் சம உரிமையையும் அது உறுதிப்படுத்த வேண்டும்.
  6.நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும். இந்த முறைமையின்கீழ் இதே ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு பாசிச ஆட்சி மேற்கிளம்ப முடியும் என்பதையும், நாட்டில் ஜனநாயகச் செயற்பாட்டைத் செயலிழக்கச்செய்ய முடியும் என்பதையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த 35 வருடகால நமது அனுபவம் நமக்குச் சொல்கிறது.
  7.அரசியல் யாப்பே நாட்டின் அதி உயர் சட்டம் என்ற வகையில், பொதுவாக மக்களின் அடிப்படை உரிமைகளையும், குறிப்பாகச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் மோசமாகப் பாதிக்கக் கூடிய வகையில் பாராளுமன்றம் எந்த ஒரு சட்டத்தையும் இயற்றுவதையும் அமுல்படுத்துவதையும்  தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் அரசியல் யாப்பினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

  கண்டி மன்றத்தின் சார்பில்
  ஒப்பம் இட்டவர்கள்
  பேராசிரியர் எம். ஏ. நுஃமான், ஜனாப் ஜே. எம். நிவாஸ்,
  பேராசிரியர் எஸ் எச். ஹஸ்புல்லா, பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக்,
  ஜனாப் எம். எம். நியாஸ், பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ்,
  கலாநிதி ஏ. எல். எம். மஹ்றூப். கலாநிதி ஏ. எஸ். எம். நௌபல்,
  கலாநிதி எம். இசற். எம். நபீல், ஜனாப் ஏ. ஜே. எம். முபாறக், ஜனாப் யு. எம் பாசில்
»»  (மேலும்)

3/14/2016

கிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் வெளிப்பாட்டுத் தன்மையை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்குமாறு கோரும் தனிநபர் பிரேரணை

uthuகிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் வெளிப்பாட்டுத் தன்மையை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்குமாறு கோரும் தனிநபர் பிரேரணையை நாளை நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று தெரிவித்தார்
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சுக்களினதும் 2016ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் சமத்துவம் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் சமூகங்களுக்கிடையே விரிசல்களை தவிர்த்து நல்லாட்சியின் செயற்பாடுகளை சகல சமூகங்களிடையே நீதியான முறையில் பகிரப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் 2016ம் ஆண்டில் 05 அமைச்சுக்களினதும் அபிவிருத்தி திட்டங்களிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் மாவட்ட ரீதியிலும் மூன்று சமூகங்களிடையே சமமான வகையில் பகிரப்பட்டுள்ளதையும் கிழக்கு மாகாண சபையில் முன்வைக்க கோரியே இத்தனிநபர் பிரேரனையை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
»»  (மேலும்)

சாதி மாறி காதல் திருமணம் செய்தவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை:மனைவி கவலைக்கிடம்

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.  இதில் கணவர் பரிதாபமாக இறந்தார். பெண் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டுத்தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக  கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர். உடுமலை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மூவர்  திடீரென அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர். துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி படுகாயமடைந்து மயங்கினர்.  அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் தம்பதியினரை காப்பற்ற முயன்றனர்.  அவர்களையும் அந்த நபர்கள் வெட்ட முயன்றதால பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் வெட்டி வீழ்த்தியதையடுத்து மூவரும் பைக்கில் தப்பினர்.

படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன் போன்ற பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வரும் நிலையில்,சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
»»  (மேலும்)

3/13/2016

இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்-அசுரா

இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்-அசுரா

பிரித்தானிய காலனித்துவ பிடியிலிருந்து இலங்கையின் பூரண சுதந்திரத்தின் அவசியம் குறித்து சிந்தித்து செயலாற்றிய தமிழ் தலைவர்களாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களையும், அதன் வரலாற்றின் ஊடாகவுமே நாம் இதுவரை அறிந்திருக்கின்றோம். ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் அரசியில்-சமூக சிந்தனை கொண்ட ஒருவரையும் தற்போது அறியக்கூடியதாக உள்ளதுnallaiah[1]1944களில் இலங்கைக்கான பூரண சுதந்திரம் வழங்குவதற்குரிய சட்ட அமுலாக்க விவாதம் ஒன்று இலங்கை அரசசபையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது அச்சட்ட அமலாக்க மசோதாவை ஆதரித்து விவாதித்தவராக மேற்படி இலங்கைக்கான பூரண சுதந்திரத்தை விரும்பியவராக திரு.வி.நல்லையா அவர்கள் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அவ்விவாவத்தில் அவர்பேசிய பல்வேறு விடயங்களில் இதுவும் ஒன்று: ‘’…. சுதந்திரத்தை நேசிக்கிறவன் என்ற முறையில் அதனைக் கேட்கும்போது வேறு எந்தப் பாதுகாப்பினையும் கேட்கலாம் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் கேட்கின்ற மிகக்கூடிய பாதுகாப்பு 50க்கு 50 ஆகும். இது பிரித்தானியர் இங்கிருந்து அந்த ஒழுங்கினை பாதுகாப்பதில் தங்கியிருக்கின்றது. சிறுபான்மையோர் தங்களது பாதுகாப்பை பேணுவதற்கு பெறக்கூடிய ஆகப்பெரிய உத்தரவாதம் பிரித்தானிய அரசை இந்த நாட்டில் வைத்திருப்பதுதான். பிரித்தானிய அரசு இங்கு இருப்பது எனக்கு விருப்பமில்லை. நாங்கள் கேட்கின்ற பிரதிநிதித்துவ விகிதாசாரங்களிலோ, பிற பாதுகாப்பிலோ அதிக நம்பிக்கை வைக்கமுடியாது. எங்கள் பாதுகாப்பு எங்கள் கையில்தான் இருக்கின்றது. எமக்கு பாதுகாப்பு வேண்டுமாயின் அதை எமது சொந்த பலத்திலும் எம்மை சூழ இருக்கும் ஏனைய இனத்தவரின் நல்லெண்ணத்திலும் இருந்தே பெறவேண்டும். ‘’  என்பதோடு திரு வி.நல்லையா அவர்களது உரைகள் யாவும் ஒடுக்கப்படும் சமூகங்களின் பல்வேறு சமூக நலன்களின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் உரைகளாகவே அமைந்திருக்கின்றது.
1943இல் இலங்கையின் அரசாங்கசபையையும், பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர் அமரர் வி.நல்லையா. இவர் கல்குடா தொகுதியின்  பாராளுமன்ற அங்கத்தவராயிருந்தவர்.  கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அமரர் வி.நல்லையா அவர்கள்  பாராளுமன்ற விவாதங்களில் உரையாற்றிய காத்திரமான சமூக விவகாரங்களில் மலையக மக்கள் தொடர்பாக ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
இந்திய தொழிலாளர்களும் பெருந்தோட்ட முதலாளிகளின் சுரண்டலும்:
 ‘’இந்திய தொழிலாளர்கள் இந்த நாட்டில் நடத்தப்படும் விதத்தை நோக்கும் எவருக்கும் பெருந்தோட்டக்காரரின் கொடும்படியிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் எந்த முயற்சியும் ஒரு போதும் எவராலும் செய்யப்படவில்லை என்பது தெளிவாகும். தொழிலாளர்களது, குறிப்பாக இந்திய தொழிலாளர்களது நலன்களையும் வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் பொறுப்பு இப் பெருந்தோட்ட முதலாளிகளிடமே முற்றாக விடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு கல்வி வசதி அளிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்கும் பொறுப்பும் உட்பட எல்லாமும் முதலாளிகளின் கையில்தான். அரசாங்கம் எதனையும் பொறுப்பெடுக்கவில்லை. எமது அரசாங்கத்திற்கு சமாந்திரமான இன்னுமொரு ஆட்சியின் கையில்- தோட்ட முதலாளிகளின் ஆட்சியின் கீழ்- இந்திய தொழிலாளர்கள் விடப்பட்டிருக்கின்றனர். முன்னைய அமைச்சும் அவரது குழுவும் இந்தக் கொள்கையை எந்த அளவிற்கேனும் மாற்றி இருக்கிறார்களா? இந்தியத் தொழிலாளர்கள் வாழும் முறையைச் சற்றே பார்ப்போம். இவர்கள் சிறைக்கைதிகளைவிட எந்தவகையிலாவது நன்றாக இருக்கிறார்களா? தோட்டத்தில் வேலை செய்யும் கூலியாட்களை யாரும் போய்ப் பார்ப்பதற்குதானும் உரிமை உண்டா? தங்களது உறவினர்களையோ நண்பர்களையோ தங்கள் வீட்டில் தற்காலிகமாகவேனும் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டா? ஐரோப்பிய தோட்ட முதலாளிகளிடமும் அவர்களுடைய தோட்ட அதிகாரிகளிடமும் முதலில் அனுமதி பெறாமல் இவர்களைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவார்களா? தோட்ட துரைமார்களின் பிடியில் இருந்து இந்தத் தொழிலாளர்களை விடுவிக்கும் பணியை இந்த அமைச்சின் குழு முதலில் மேற்கொண்டிருக்கவேண்டும்.

இவர்களது இருப்பிடங்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை. தோட்டத்துரைமாரும் ஏன் அரசாங்கமும் கூட விரும்பியபோது அவர்களை தமது வதிவிடங்களில் இருந்து வெளியேற்ற முடியும். ‘கூலி லயின்கள்’ என்று சொல்லப்படுகின்ற ஆரோக்கியத்திற்கு முரணான மிருகங்களின் கொட்டில்கள் போன்ற இந்த லயின்களில் தொழிலாளர்களை இருக்கச் சொன்னதே பெரிய பிழையாகும். இந்த லயின்கள் குடும்பங்கள் வாழ்வதற்கு தகுதியானவையல்ல.
முன்னர் நான் இதைப்பற்றி பேசிய போது நான் கூறியது தவறென தோட்டத்துரைமார்களின் பிரதிநிதிகளும், தொழிலமைச்சரும் சொன்னார்கள். ஒரு அறையில் ஒரு குடும்பத்திற்கு மேல் இருப்பதில்லை என்று எனக்குச் சொன்னார்கள். இது உண்மையல்ல என்று நான் அறிகிறேன். ஒவ்வொரு அறையிலும் நான்கு குடும்பங்கள் இருப்பதாக நான் விசாரித்த உத்தியோகத்தரிடம் இருந்து அறிந்தேன். இது தான் தற்போதைய நிலை. இந்தியத் தொழிலாளர்கள் நலனில் இந்த அரசாங்கம் இன்னும் சிறிது கவனம் எடுத்திருந்தாலும் அவர்களுக்கென்று வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை.
சர்வதேச தொழில் மாநாடு தொழிலாளர்களிடையே நிறத்தின் பெயரிலோ, சாதியின் பெயரிலோ, தேசியத்தின் பெயரிலோ பாராபட்சம் காட்டக்கூடாதென்று விதந்துரைத்திருக்கின்றது. இந்த விதந்துரையை பிரித்தானியக் குடியேற்றத் துறைச்செயலாளர் எங்கள் தொழிலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இந்த சிபாரிசை நடைமுறைபடுத்துவதற்கு இந்த அமைச்சு முன்வரவில்லை. இந்த அமைச்சு பல சம்பள நிர்ணய சபைகளை அமைத்திருக்கின்றது. 8 மணித்தியாலம் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு 58 சதம் என நிர்ணயிக்கின்ற இந்த சபைகளினாலே என்ன பிரியோசனம்? எங்களுடைய பொறுப்பிற்கு நாங்கள் சரியாக முகம் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தங்களது முதலாளிமாருடன் பேச்சு வார்த்தை நடத்த உரிமை உண்டு என்று நாங்கள் சொல்லுகிறோம். இந்த உரிமைகளினால் கிடைத்தது என்ன? ஒரு வளர்ந்த ஆண் வேலையாளுக்கு 8 மணித்தியாலத்திற்கு 58 சதம் கொடுக்கப்படுகிறது. இது தான் நாங்கள் இன்று அடைந்துள்ள நிலை. முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தை செய் என்று சொல்லிவிட்டு ஆறுதல் அடையாமல் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் வற்புறுத்தி இருக்க வேண்டும்.
இந்தியத் தொழிலாளர்களை நாம் நடத்தி இருக்கும் விதம் மிகவும் துரதிஷ்டமானது. இந்த நாட்டில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாயின் அது இந்தியத் தொழிலாளியின் உழைப்பினாலேயே என்பதை இந்த நாட்டில் எவரும் மறுக்கமுடியாது. இந்த நாட்டின் பொருளாதார வளத்திற்கு இந்த வகையில் பங்களித்திருக்கின்ற தொழிலாளர்களின் நலனில் முக்கியமாகக் கவனம் செலுத்துவது எங்களுடைய பெரிய கடமையாகும். மலேசியாவிலும் இந்தியாவிலும் இருக்கின்ற தொழிலாளர்களைவிட இங்கேயுள்ள தொழிலாளர்களின் நிலை மேலானது என்று அமைச்சர் கூறுவதில் அர்த்தம் இல்லை. எங்களுடைய நன்மைக்காக எங்களுக்கு வேண்டிய நேரங்களில் மேற்கத்தைய நாடுகளுடன் நாங்கள் எங்களை ஒப்பிடுகின்றோம். ஆனால் தொழிலாளர்களின் நிலமைகளைப் பற்றி பேசும்போது எதற்காக இந்தியாவிலும் மலேசியாவிலும் உள்ள கேவலமான நிலைகளுடன் ஒப்பிடவேண்டும்? ‘’
பிரித்தானிய காலனித்துவ பிடியிலிருந்து இலங்கையின் பூரண சுதந்திரத்தின் அவசியம் குறித்து சிந்தித்து செயலாற்றிய தமிழ் தலைவர்களாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களையும், அதன் வரலாற்றின் ஊடாகவுமே நாம் இதுவரை அறிந்திருக்கின்றோம். ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் அரசியில்-சமூக சிந்தனை கொண்ட ஒருவரையும் தற்போது அறியக்கூடியதாக உள்ளது.
*நன்றி : நூல் “அமரர் நல்லையா வாழும் மனிதம்”
அசுரா

நன்றி - தூ
»»  (மேலும்)