3/03/2016

ஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்

ஆதிவாசிகள் சமூகமான வேடர் சமூகத்தினை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆதிவாசிகளான வேடர் சமூகத்தின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் இலங்கையில் பழங்குடி மக்களாகும் ஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
எங்களுடைய பிறப்பு பதிவுகளில் இலங்கை தமிழர் என போடப்பட்டுள்ளது. நாங்கள் இலங்கை தமிழரல்ல. நாங்கள் இலங்கை வேடர்களாகும். இலங்கை வேடர் என்றே எங்களை அழைப்பதுடன் எங்களது பதிவுகளில் இலங்கை வேடர் என போட்டு அத்தாட்சிப்படுத்த வேண்டும். அதே போன்று தேசிய அடையாள அட்டையிலும் வேடர்சமூகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இங்கையில் நாங்கள் ஆதிவாசிகள் அல்லது ஆதிக்குடிகள். எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர் குறைந்தளவு கல்வியை கற்கின்ற போதிலும் எமது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதே போன்று உயர் கல்வியினை கற்பதற்கான வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
ஆதிவாசிகள் எனும் வேடர் சமூகம் என்ற வகையில் எமக்கு முன்னுரிமை வழங்கி கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதுடன் வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். 
எமது வேடர் சமூகத்தின் கிராமங்கள் துண்டாடப்படுவதால் எமக்கு கிடைக்கும் உதவிகள் மிகக் குறைவாகும். கிராமங்கள் பிரிக்கப்படும் போது நாங்கள் வேடர்கள் துண்டாடப்படுகின்றோம். இதனல் எமது நலன் பாதிக்கப்படுகின்றது. அதே போன்று எமது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமலுள்ளது. சட்டரீதியாக நாங்கள் ஆதிவாசிகள் வேடர் சமூகம் என்ற அந்தஸ்த்தை அரசாங்கம் எமக்கு தரவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை கூட பழங்குடியினரை அங்கீகரித்துள்ளது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். 

0 commentaires :

Post a Comment