3/08/2016

'வடக்கு கிழக்குக்கு வெளியே நிலச்சார்பற்ற அதிகார அலகு': மனோ விளக்கம்இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது, வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களுக்காக 'நிலச்சார்பற்ற அதிகாரசபை' ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தங்களின் நிபுணர் குழு முன்வைத்துள்ள யோசனை பற்றி ஆராய்ந்து வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி கூறுகின்றது.
இலங்கையில் வாழும் சுமார் 32 லட்சம் வரையான தமிழ் மக்களில் 16 லட்சம் பேர் வரையில் வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே வாழ்வதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஓர் அதிகார அலகு உருவாக்கப்படுவதன் மூலம் இந்த மக்களின் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
0 commentaires :

Post a Comment