4/27/2016

நானும் ரவடிதான் சம்பந்தரின் நகர்வு வெற்றியளித்தது

தமிழ் மக்களின் பாரிய நம்பிக்கையின் பெயரில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசைக்கொண்டு எவ்வித கருமங்களையும் சாதிக்க முயலாது  காலம்கடத்தி வருகின்றனர் கூட்டமைப்பினர்.அண்மைக்காலமாக இதுபற்றிய விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.இந்த கையாலாக தனத்தை மறைக்க சம்பந்தர் நானும் ரவுடிதான் வேஷமிட்டு அண்மையில் ஒரு நிகழ்வை நடத்தினார்.அது அவருக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல பலனை தந்துள்ளது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் அலுவலகம் சிங்கள தேசியவாத அமைப்புகளால் இன்று முற்பகல் சுற்றிவளைக்கப்பட்டது.
கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமொன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர இரா. சம்பந்தன் பலவந்தமாக புகுந்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் இந்த செயலுக்கு பிரதான கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்நிலையிலேயே, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி, இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு உட்பட பல சிங்கள தேசிய வாத அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பந்தன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என்றெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் உரத்துக் குரல் எழுப்பினர்.
குறிப்பாக தான் இராணுவ முகாமுக்கள் இருந்திருந்தால் சம்பந்தனை வெளியேவர விட்டிருக்கமாட்டார் என்றும், சுட்டுவீழ்த்தியிருப்பார் என்றும்  முன்னாள் இராணுவ சிப்பாயான சரத் மனமேந்திர குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment