4/08/2016

பன்மைத்துவம் தொடர்பான கருத்தரங்கு - சீரெப்

பன்மைத்துவம் தொடர்பான கருத்தரங்கு - சீரெப் 


பன்முகத்தன்மை சகவாழ்விற்கான செழுமை என்ற கருப்பொருளில் இன்டர் கல்சர் டயலாக் பெளண்டேசன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஓருநாள் அமர்வொன்றை ஏற்பாடு செய்தது. பல்கலைக்கழக சமூகம் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர். ஜுனைட் நளீமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி டீ. ஜெயசிங்கம் கலந்து கொண்டதுடார். அத்துடன் இன்டர் கல்ச்சர் டயலாக் பவுண்டேஷனின் பணிப்பாளர்களான கெரிம் எக்டமிர், உகூர் புலூசி ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதம பேச்சாளர்களாக இந்து கலாச்சார நாகரீக சிரேஷ்ட்ட விரிவுரையாளர் திருமதி எஸ். கேசவன், இஸ்லாமிய கற்கை நெறிகள் துறைத்தலைவர் எம்.ரீ.றிஸ்வி, கிரிஸ்தவ பீட இணைப்பாளரும் சிரேஷ்ட்ட விரிவுரையாளருமான அருட் தந்தை நவரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர். சர்வமத ஆசிகளை சுவாமி பிறப்பு பிரமானந்தா, மெளலவி தாஜுதீன், அருள் தந்தை அலக்ஸ் ராபட் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் விஷேட ஜாபகார்த்த சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உப வேந்தர் அவர்கள் நாடு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றது. இக்காலத்துக்கு தேவையான தலைப்பினை படித்த மக்கள் தரப்பிற்கு கொண்டு செல்ல இன்டர் கல்ச்சர் டயலாக் பெளண்டேசன் முன்வந்தமைக்காக பாராட்டுகளை தெரிவித்ததுடன் தொடர்ந்தும் இத்தகைய சமாதான சகவாழ்வு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு பல்கலைக்கழக சமூகம் எப்போதும் உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.


0 commentaires :

Post a Comment