5/09/2016

இலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதிக்க வேண்டும்

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக கவலைகள் அதிகரித்துள்ளன.இதனால், சில நிபந்தனைகளுடன் சட்டரீதியான வரைமுறைகளுக்குள் கருக்கலைப்பை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நாளொன்றுக்கு 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், கருக்கலைப்புகள் பல மடங்குகள் அதிகரித்துள்ளதாகவும் பிபிசியிடம் கூறினார்.

இப்போது ஆண்டுக்கு, 2 லட்சத்து 40 ஆயிரத்து 147 கருக்கலைப்புகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணம் என்றும் பேராசிரியர் கருணாதிலக்க தெரிவித்தார்.
குறிப்பாக, திருமணத்திற்குப் பின்னர் சிலர் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப கருக்கலைப்பு செய்துகொள்வதாலும், திருமணத்துக்கு புறம்பான உறவுகள் காரணமாகவும் கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சில நிபந்தனைகளுடன் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட விதத்தில் கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டால், சட்டவிரோத கருக்கலைப்புகளை குறைக்கமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment