6/01/2016

ஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி

  தில்லி யமுனை சமவெளிப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இழப்பீடாக செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.4.75 கோடியை வங்கி உத்தரவாதமாக ஏற்கக் கோரும் "வாழும் கலை' அமைப்பின் மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.Afficher l'image d'origine
 மேலும், இந்த மனுவைத் தாக்கல் செய்ததற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த தீர்ப்பாயம், ஒரு வாரத்தில் பாக்கித் தொகையை செலுத்துமாறும் அறிவுறுத்தியது.
 முன்னதாக, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமைமையிலான "வாழும் கலை' அமைப்பின் சார்பில் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
 பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மார்ச் 9, 11 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகைக்கான நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் மாற்றம் செய்து, வங்கி உத்தரவாதம் வடிவில் நிலுவைத் தொகையை செலுத்த அனுமதிக்க வேண்டும்.
 மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் இருந்தால் அது தொடர்பாக மதிப்பீடு செய்ய அறிவியல் முறையில் தகவல்களைச் சேகரிக்க நடைமுறையை உருவாக்கும் முன்மொழிவைத் தயாரிக்கும் பணியில் மனுதாரர் (வாழும் கலை அமைப்பு) ஈடுபட்டுள்ளார். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு நிரந்தரமானதோ அல்லது ஈடு செய்ய முடியாததோ அல்ல என்பதை தீர்ப்பாயம் ஏற்றுக் கொள்ள வகை செய்யும் அறிவியல்பூர்வ ஆதாரங்களை தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

0 commentaires :

Post a Comment