6/10/2016

சென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்

சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே கடல் நீர்மட்டம் உயர்ந்தும் சீற்றம் அதிகரித்தும் காணப்பட்டது. இதனால், கடலோரம் அமைந்துள்ள பல வீடுகள் அலையின் சீற்றத்தில் நொறுங்கின

0 commentaires :

Post a Comment