6/13/2016

பதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தரவும் இன்று வரை நடை முறைக்கு வரவில்லை

பதவி ஏற்றதும் ஜெயலலிதா பல கோப்புகளில் கையெழுத்து போட்டார்.
.
ஆனால் இவர் கையெழுத்து போட்ட எந்த உத்தரவும் இன்று வரை நடை முறைக்கு வரவில்லை.
.
மின்சார கட்டணம் நடைமுறைக்கு வரல போன முறை எப்படி வசூல் செய்தார்களோ அப்படிதான் இந்த முறையும் வசூல் செய்தனர்....
.
500 டாஸ்மாக் கடைகள் இன்னும் மூடப்பட வில்லை.
.
இரண்டு மணி நேர டாஸ்மாக் விற்பனை குறைப்பு சரியாக கடைபிடிக்க படுவதில்லை.
டாஸ்மாக் பார்கள் முன்னாடியே திறந்து வைத்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பகல் கொள்ளை நடக்குது.
.
விவசாய கடன்கள் முற்றிலும் தள்ளுபடி என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு பயிர் கடன் மட்டும் தள்ளுபடி என்று கூறி விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு.
.
சொன்னது எதுவும் செய்யல. பிறகு என்ன அவசரம் அரை மணி நேரத்துல பதவி ஏத்துக்கிட்டு அவசர அவசரமா கையெழுத்து போட்டாங்க 
  என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

0 commentaires :

Post a Comment