6/29/2016

கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன?

கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை ! அரியநேத்திரனிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர்அண்மையில் விசாரணை    மேற்கொண்டுள்ளனர்.

2004ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர்கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்புவரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால் வன்னிபுலிகள் மட்டகளப்பு வேட்பாளர்கள் பிளவின் பின்னர் கருணாம்மானுக்கு சார்புநிலை எடுப்பார் என அஞ்சி வெற்றிவாய்ப்பை பெறக்கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டனர்.இராஜன் சத்தியமூர்த்தி தேர்தலுக்கு முன்பே கொல்லப்பட்டார்.அவரது புதைக்கப்பட்ட உடலைக்கூட தோண்டியெடுத்து வன்னிபுலிகள் சின்னா பின்னப்படுத்தினர்.கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான புலிகளை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றியடைந்த கிங்ஸ்லி இராசநாயகம் வன்னிபுலிகளால் கொல்லப்பட்டார்.அவரை இராஜினாமா செய்ய வைத்த பின்னர் அவரை கொன்றனர்.அந்த இடத்துக்கே அரியநேந்திரனை புலிகள் நியமித்தனர். அதற்கு பின்னர் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான மூவர் ஏறக்குறைய சுமார் சுமார் ஒன்றரை வருட இடைவெளியில் ஒரே பிரதேசத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த கொலைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அதிகாரப்போட்டிகளும்,பழிவாங்கல்களும் நிறையவே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.

ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலையை தவிர மற்றைய இரு கொலைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மறக்கடிக்கப்பட்டு வருவதிலிருந்து இதனை புரிந்து கொள்ள முடியும்.இன்றுவரை ஒவ்வொரு வருடமும் ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலையை நினைவு கூருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவர்களின் சார்பு ஊடகங்களும் கிங்ஸ்லி இராசநாயகம்,இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் பெயர்களை மறந்தும் உச்சரிப்பதில்லை

0 commentaires :

Post a Comment