6/03/2016

மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் 50பேரையும், இரண்டு கட்டங்களாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதன் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை (03) 25பேரும் நாளை சனிக்கிழமையன்று (04) 25 பேருமாக, அனைத்து இராணுவத்தினரும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் 100பேரில் 50 பேர், ஒரு மாதத்துக்கு முன்னர், நீக்கப்பட்டிருந்தனர். ஏனைய 50 பேரையும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் நாளையும், அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தவர்களில், இராணுவத்தின் பிரிகேடியர் ஒருவரும், லெப்டிணன் கேணல் ஒருவருமாக, உயரதிகாரிகள் பலர் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்படுவதை அடுத்து, பிரமுகர் பாதுகாப்புக்காக விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய 50பேரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 commentaires :

Post a Comment