7/20/2016

சமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்

சாதிய விடுதலை இன்றி தேசிய விடுதலை இல்லை .ஆனால் ஒவ்வொரு கணப்பொழுதிலும் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடும் எமது தமிழ் சமூகம் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலான சாதிய ஒடுக்கு முறைகளையும் பாகுபாடுகளை தன்னுள் கொண்டுள்ளது என்பது வேதனைத்தரும் விடயமாகும்.சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் சாதிய வடிவங்களை பேணி வருகின்ற நம் தமிழர்கள் அதனை புகலிட நாடுகளுக்கும் எடுத்து சென்று பரப்பியதில் பேர் பெற்றவர்கள் ஆகும்.இந்த நிலையில் இந்த ஒடுக்குமுறை சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை கூட அடக்கிவாசிக்கும் நிலையில்தான் தமிழ் சிந்தனை மனோபாவம் இன்று வரை செயல்பட்டு வருகின்றது.Résultat d’images pour lutte poing

ஆனபோதிலும் குறிப்பாக வடக்கிலங்கையில் இந்த சாதிய கொடுமைகளுக்கு எதிரான ஒரு போராட்ட வரலாறு இருக்கின்றது என்பது முக்கியமானது.ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில் ஆயுதம் ஏந்திய வகையில் இந்த சமநீதிக்கான போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இதில் பலர் தங்களது உயிரையே தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு.

இந்த போராட்டங்கள் சார்ந்து இலங்கையில் இதுவரை காலமும் இடம்பெற்றுவந்திருக்கும் சாதிய விடுதலைக்கான முன்னெடுப்புகளின்போதும் தமது உயிர் உடமைகளை இழந்து தம் வாழ்நாள் முழுக்க போராடிய  போராளிகளை கெளரவ படுத்தும் முகமாகவும் அவர்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து நினைவுகூரும் முகமாகவும் இந்த  சமூக விடுதலை போராளிகள் நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.பிரான்சில் முதல் தடவையாக தலித் சமூக மேம்பட்டு முன்னணியினர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

»»  (மேலும்)

7/13/2016

தமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரவேண்டும்

Résultat d’images pour seeman


காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு கலவரம் ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியாகியுள்ளனர். பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் எடுத்துக்கூறினார்.
காஷ்மீரி்ல், 60 பட்டாலியன் துணைப்படையினர் உள்ள நிலையில், கூடுதலாக 800 துணை ராணுவப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவது காரணமாக, ஆப்ரிக்காவில் பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, தன்னுடன் வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை, இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே அனுப்பி வைத்துள்ளார்.


அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறுகையில், மனித உரிமைகளை இந்தியா மதிக்க வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வானி மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தில் இந்திய ராணுவம் அத்துமீறி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சுயமாக உறுதியாக போராட்டம் நடத்தும் ஆயுதங்களின்றி போராட்டம் நடத்தும் மக்களை துன்புறுத்தக்கூடாது எனக்கூறியுள்ளார்.

காஷ்மீர் மக்களை துன்புறுத்தக்கூடாது எனவும், அங்கு இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.இந்நிலையில் ஈழத்தில் போது வாக்கெடுப்பு நடத்த கோரும் தமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என  கோரவேண்டும்.

»»  (மேலும்)

7/12/2016

வெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா?-சுகு- ஸ்ரீதரன்

(ஆயிரம் ஆயிரம் போராளிகளும் பொதுமக்களும் எந்த பிரதிபலனும் பார்காமல் மரணித்த பாரிய இழப்புக்களைச் சந்தித்த மண்ணில் அயோக்கியர்கள் திருடர்கள் பெருமளவிற்கு தலைவர்களாக மிச்சமாகியிருக்கிறார்கள்.)-சுகு- ஸ்ரீதரன்

பொருளாதார மையம் எங்கு அமையவேண்டும் என்பதே இன்று வடக்கில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களின் பிரதான பட்டி மன்றம்.
தீவிர குடுமிபிடிச்சண்டையில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் மக்கள் நலன் பற்றி துளியளவு அக்கறையும் இல்லாதவர்கள்.
ஜனநாயக உணர்வு இல்லாதவர்கள் வெகுஜனங்களின் மக்கள் அமைப்புக்களின் கருத்துக்களைச் செவிமடுப்பார்கள் என்றில்லை....
வடக்கில் சொல்லிக் கொள்ளும் படியாக பொருளாதார மையங்கள் எதுவும் இல்லை.
ஏற்கனவே அச்சுவேலியில் 3 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட உள்ளக கட்டமைப்பு வசதிகளை வினைத்திறனுடன் கையாள்வதற்கான ஆற்றலும் அரசியல் பொருளாதார மட்டங்களில் காணப்படவில்லை.
தற்போது இடத்தை தெரிவு செய்வதற்கு மண்டை உடைக்கிறார்கள்.
மக்களுக்கு எது பிரயோசனமானது தூர நோக்கல் எங்கிருந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கவேண்டும் என்பது பற்றிய பிரக்ஞை இந்த பிரதிநிதிதிகளுக்கு புரிவதும் இல்லை புரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை.
எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று கருதுபவர்களைத்தான் மக்களும் அனேக சந்தர்ப்பங்களில் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள்.
உண்மையில் இந்த பொருளாதார மையம் அமைக்கும் இடத்தை தெரிவு செய்யும் விடயம் மாகாண சபையிடம் விடுவிக்கபடவேண்டும்.
மத்திய அரசு இதில் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்கக் கூடாது.
மாகாண அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தபடவேண்டும்.
அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான விருப்பங்களை வெளிப்படுத்த வேண்டும்.
கரவுகளுடன் அணுகுவது சமூகங்களை நாடளாவிய அளவில் ஒன்றிணைக்க உதவாது.

மாகாண சபையினரும் மக்களின் நலன் கருதி ஒருமித்துச் செயற்பட்டிருக்க வேண்டும்.
எங்கு பின்தங்கல் தனிமை பாரிய அளவில இருக்கிறதோ அங்கிருந்து தொடங்கவேண்டும். மாங்குளம் மையமானதும் தொடர்புகளுக்கு வசதியானதுமாகும். விஸ்தரித்துச் செல்வதற்கும் ஏறபுடைது. வடக்கு மாகாண ஆட்சி கட்டமைப்பை குடா நாட்டிற்கு வெளியே மையப்படுத்தவும் உதவும்.
புதிய பேண்தகவு நகரங்களை உருவாக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மிகச் சாதாரணமான ஒரு காரியத்தை செய்வதில் இவ்வளவு பிசகுப்படுபவர்கள் வேறு எதைத்தான் செய்வார்கள்.
விதிவிலக்காக சிலர்தான் இருக்கறார்கள்.
மற்றப்படி எரிகிற விட்டில் பிடுங்குபவர்கள் என்பது நெருடலான உண்மை
ஒருசிறிய பொருளாதாரமையத்திற்கான இடத்தை தெரிவு செய்ய வக்கில்லாதவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் என்னும் போது வெட்க உணர்ச்சி பிடுங்கித் தின்னுகிறது.
ஆயிரம் ஆயிரம் போராளிகளும் பொதுமக்களும் எந்த பிரதிபலனும் பார்காமல் மரணித்த பாரிய இழப்புக்களைச் சந்தித்த மண்ணில் அயோக்கியர்கள் திருடர்கள் பெருமளவிற்கு தலைவர்களாக மிச்சமாகியிருக்கிறார்கள்.
மக்களும் அறிந்தோ அறியாமலே இவர்களைத் தான் தெரிவு செய்கிறார்கள் .
நாடளவிய அளவிலும் பிராந்திய மட்டத்திலும் பரந்து பட்ட சமூக பொருளாதார சுற்றாடல் பற்றிய பிரக்ஞை அக்கறை -அறிவு கொண்டவர்களின் பங்களிப்பு அவசியம்

நன்றி முகநூல்
»»  (மேலும்)

7/11/2016

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை: இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பகுதியல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பந்தமாக விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய விசேஷ நீதிமன்றங்கள் அமைக்கப்போவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை எமது நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட எந்தவொரு தரப்பிற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி சிறிசேன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, போர் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள கட்டமைப்பிற்குள் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இவ்வாறான யோசனையொன்று ஜெனிவா மனித உறிமை பேரவையினால் முன்வைக்கப்பட்ட போதிலும் இலங்கை அரசியல் சாசனத்திற்கு அமைய அதனை மேற்கொள்ள முடியாதென்று அரசாங்கம் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.
அதன் பின்னர் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணை கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு ஜெனிவா மனித உரிமை பேரவையினால் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

இலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அண்மையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வாட் வரி (மதிப்பு கூட்டப்பட்ட வரி) அதிகரிப்பினை உடனடியாக நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Résultat d’images pour vimal veeravansa


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வாட் வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஸ்ரீபவன் உட்பட முன்று நீதிபதிகள் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட வரி அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானதென்று தீர்ப்பளித்தனர்.
இதன்படி உடனடியாக சம்பந்தப்பட்ட வரி அதிகரிப்பினை நிறுத்துமாறு நீதிமன்றம் அசரசாங்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்தது.
இந்த மனு மீதான மேலதிக விசாரணை வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
»»  (மேலும்)

மைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் காணாமல் போன தமிழ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று நிகழ்வுகளில் இன்று(10/07/2016)ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டார்.Résultat d’images pour  presidet  srilanka
இதில் 202,பழமைவாய்ந்த மட்டுநகர் மத்தியகல்லூரியில் நிறுவப்பட்ட ஞாபக கோபுரம் மற்றும் மலர் வெளியீடும் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் முற்றாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு சிங்களமொழிக்கும் ஆங்கில மொழிக்கும் மட்டுமே நிகழ்வுகளும் உரைகளும் இடம்பெற்றன.
குறிப்பாக வரவேற்பு நடனம் தனிச்சிங்கள நடனமாகவும் வரவேற்புரை தலைமைஉரைகள்ஆங்கிலத்திலும் இடம்பெற்றன.
.

100வீதமான தமிழ்பேசும் மாணவர்களை கொண்ட மட்டுநகர் மத்தியகல்லூரியில் 202வருடங்கள் கடந்த நிலையில் முற்றாகவே ஐனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் தமிழ் ஓரம்கட்ட பட்டுள்ளது.

ஆனால் ஒருவர் தவறாது இந்நிகழ்வில் கலந்துகொண்டு "உள்ளேன் ஐயா" "உள்ளேன் ஐயா"என்று ஜனாதிபதிக்கு தங்கள் முகத்தை காட்டிவிடுவதற்காக குறுக்கும் மறுக்கும் ஓடித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இது பற்றி இன்றுவரை வாய்திறக்கவில்லை.

மாறாக இதுவே முன்னைய ஆட்சிகாலத்தில் நடந்திருந்தால் வானுக்கும் மண்ணுக்குமாக இவர்கள் எகிறி குதித்திருப்பர் என்று அங்கு இருந்த பழைய மாணவர்கள் பேசிக்கொண்டனர்.ஆமாம் மைத்திரி உடைத்தால் மண்குடம். மகிந்த உடைத்தால் பொன்குடம்.
»»  (மேலும்)

7/10/2016

பெருமாள் கணேசன் விவகாரம் -

Perumal Ganesanஇலங்கை ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை
வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு - கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்ததன் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் - அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருப்பதாக - அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அநீதி கண்டனத்துக்குரியது.
இத்தகைய செயற்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகளின் மற்றுமொரு பரிமாணமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், சமூகத்தில் பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகக்கூடிய பொறுப்பற்ற செயற்பாடுகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட எத்தனித்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.
அரசியல் அதிகாரங்கள் தேவேயற்ற விதமாக கல்வியில் குழப்பங்களை உருவாக்க முயலுமாயின் - அது வடமாகாண கல்வியில் இனியும் மீளமுடியாத பின்னடைவை உருவாக்கிவிடும். எனவே - இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு - பாதிக்கப்பட்ட அதிபருக்கு நீதியான தீர்வை வழங்கவேண்டும்.
ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.
»»  (மேலும்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் வரும் 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.Résultat d’images pour methodist central college batticalo
 இலங்கையின் முதலாவது மெதடிஸ்த ஆங்கில பாடசாலை என பெருமை பெற்றதும் இலங்கையில் 200 வருடங்கள்  பழமைவாய்ந்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202வது ஆண்டு நிறைவின் பிரதான நிகழ்வு எதிர் வரும் 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார் .

இதன் போது கல்லூரி வளாகத்தில்  ஸ்தாபிக்கப்பட்டுள்ள கல்லூரி ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட் அடிகளாரின்   நினைவு தூபியினையும் திறந்து வைக்கவுள்ளார்

இந்நிகழ்வினை முன்னிட்டு மத்திய கல்லூரியின்  அதிபர் விமல்ராஜ் தலைமையில் கல்லூரியில் பல   முன்னேற்பாட்டு புனர்நிர்மான பணி நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

இந்த முன்னேற்பாட்டு புனர்நிர்மான பணி நடவடிக்கைகளில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து முன்னேற்பாட்டு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
»»  (மேலும்)

7/09/2016

தொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து அடுத்த மாநாடு நோக்கிய பயணம் .....

1965 ஆம் ஆண்டு அமர்ர். வி.கே.வெள்ளையன் எனும் ஆளுமையினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் தன்பாதையில் பல மேடு பள்ளங்களையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து கடந்த (2015) ஆண்டு தலவாக்கலை நகரில் தனது 'பொன்விழா' வை கொண்டாடியது..
2006 ம் ஆண்டு முதல் சங்கத்தின் தலைவராக அன்றைய மாகாண சபை உறுப்பினரும் இன்றைய அமைச்சருமான பழனி திகாம்பரம் துணிச்சலான தீர்மானங்களை எடுத்து வழிநடத்தி வருகின்றார்.
கடந்த பத்தாண்டுகளைக் கடந்து பார்க்கையில் இன்று 2016 ல் அமைச்சரவை அந்தஸ்துடனான அமைச்சர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், பத்துக்கு மேற்ப்ட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் (தற்சமயம் சபைகள் கலைக்கப்பட்டுள்ளது) என அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதுடன் , இதே காலப்பகுதியில் மலையகத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் ஒன்றிலும் இணைந்து பயணித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 'ஜனநாயக மக்கள் கூட்டணி' யிலும் (தொழிலாளர் தேசிய சங்கம் + மேலக (ஜனநாயக ) மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி ) 2011 ம் ஆண்டு 'மலையக கூட்டமைப்பிலும்' (தொழிலாளர் தேசிய சங்கம் + மலையக மக்கள் முன்னணி ) 2015 ஆம் ஆண்டு முதல் 'தமிழ் முற்போக்கு கூட்டணி' யிலும் ( தொழிலாளர் தேசிய சங்கம் - முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ) தொழிலாளர் தேசிய சங்கத்தின் வகிபாகம் முக்கியத்துவமிக்கது.
இத்தகைய வளர்ச்சிப்பாதையில் தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் அதன் அரசியல் அங்கமான தொழிலாளர் தேசிய முன்னணியினதும் 'தேசிய மாநாடு' 2016 நவம்பரில் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி பிரதேச மட்டத்தில் சங்கத்தினதும் முன்னணியினதும் செயற்குழு அங்கத்தவர் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன.
.
»»  (மேலும்)

7/08/2016

வாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்

வாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்
»»  (மேலும்)

பெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது

Résultat d’images pour lutte poingகிளிநொச்சியிலுள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபராகும் தகுதியுடையவராகவும் அப்பணியை மேற்கொள்வதற்கான கல்விவலயத்தின் அனுமதியும் பெற்ற பெருமாள் கணேசன் அவர்கள்  யாழ்மேலாதிக்க அரசியல் அதிகாரப் பின்பலத்தால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையகத் தமிழரான பெருமாள் கணேசன் அவர்கள் கிளிநொச்சி வாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.  கல்விப்புலமை நிமித்தமாக அடையக்கூடிய அவரது உயர்பதிவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது.

தொடர்ந்தும் கல்விபணியகத்தின் உயர்மட்ட பதவிகளை தீர்மானிக்கும் சக்திகளாக  யாழ்மேலாதிக்க சாதியினராகவே இருந்து வருகின்றனர்.  அதன் காரணமாக யாழ்மாவட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் உயர்பதிவிகளை அடைவதற்காக பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டியுள்ளது.

தமிழ்மொழி பேசும் சமூகம் எனவும், தமிழ்தேசியம் என்றும் பேசப்பட்டுவரும் ஒற்றைக் கருத்தியிலானது. எம்மிடையே நிலவிவரும் சாதியப்பாகுபாடுகளையும், சமூகப் பாராபட்டசங்களையும் புரிந்துகொள்ளவும் அதற்கான மாற்று வழிமுறைகளையும் கண்டுகொள்ள தடையாகவே இருந்து வருகிறது.

எனவே தமிழ்த்தேசியத்திற்கான தலைமைகளை தேர்ந்தெடுக்கும் நாம் தொடர்ந்தும் எசமானர்களையே தேர்ந்தெடுத்து அரசியல் அதிகாரத்தையும் கையளித்து வருகின்றோம். எமது தேர்தல் பிரதிநிதித்துவமானது தமிழ்மொழி பேசும் மக்களுக்கானதாகவோ, தமிழ்த்தேசியத்திற்கான பிரதிநிதிகளாகவோ இருக்கமுடியாது. சாதியரீதியாக பிளவுண்டிருக்கும் சமூகத்திற்கு மக்களாலான பிரதிநிதித்துவமே அவர்களுக்கான சமூக உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாக இருக்கும். அதன்காரணமாகவே தலித்சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி சமூகவிடுதலைப்போராளிகள் முன்பே வலியுறுத்தி வந்துள்ளனர்.


அந்தவகையில் மலையக சமூகத்தின்மீதான யாழ்மையவாத சிந்தனை என்பதும் சாதிய பாராபட்சத்திற்கு நிகரான ஒரு சிந்தனையாகவே இருந்துவருகிறது. எனவேதான் வன்னி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த்தேசியத்திற்கான அரசியல் எசமானர் ஒருவரின் பின்புல அதிகாரம் மலையகத்தை சேர்ந்த பெருமாள் கணேசன் அவர்களின் தலைமை ஆசிரியர் பணிக்கு தடைவிதிக்கும் பலத்தை கொண்டதாக இருக்கிறது. வன்னி மாவட்டமானது கணிசமான மலையக மக்கள் வாழும் பகுதியாக இருக்கும்போது, அங்கு தமிழ்த் தேசியத்திற்கான பிரதிநிதித்துவத்தால் மலையக மக்கள் பயன்பெறுவது சாத்தியமற்றுப்போகின்றது.  தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் பணிபுரியும் தலித்துக்களுக்கும், மலையக மக்களுக்கும் இங்கே ஒன்றை நாம் வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது. தமிழ்த் தேசியக்கட்சியுடன் இணைந்து நீங்கள் அரசியல் செய்யும் பட்சத்தில் சட்டம் இயற்றும் வல்லமை அற்றவர்களாக தொடர்ந்தும் பிரதிநிதிகளாக மட்டுமே தேர்தெடுக்கப்படுவீர்கள்.

எனவே பெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் அவர்களுக்கான தனித்துவமான அரசியல் பிரதிநித்துவத்திற்கான அவசியத்தையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ்
»»  (மேலும்)

நல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடுவதற்கு பதிலாக ஏழைகளை குறி வைக்கின்றது.

அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடுவதற்கு மாறாக மறைமுக வரியான வற் வரி போன்றவற்றை அதிகரித்து ஏழைகளை மேலும் ஏழ்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வற் வரி என்பது மறைமுகமான வரியாகும்.. சாதாரணமாக வற் வரி அதிகரிக்கப்படும் போது, பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் வற் வரி அதிகரிப்பின் மூலமாக மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வது இலக்காக அமைந்துள்ளது. ஆனாலும் இந்த வற் வரி அதிகரிப்பின் காரணமாக செல்வந்தர்களை விட ஏழைகளே பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

உழைக்கும் பணத்துக்கமைய வரி செலுத்தக்கூடிய நிலையில் மக்கள் உள்ளனரா என்பதை பற்றி அரசாங்கம் சற்று சிந்திக்க வேண்டும். அரச துறையில் சுமார் 120,000 பேர் வரை தொழில் புரிகின்றனர். நாட்டில் பணிபுரியும் நபர்களில் சுமார் 500,000 பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இதன் மூலம் மிகவும் குறைந்தளவான மக்கள் மாத்திரமே வரி செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

7/07/2016

இலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு

ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, இன்று நிறுவியதுடன் அதில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் அவர் காணப்படுவார். நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும் கல்வியமைச்சராக டளஸ் அழகபெரும, வெளிவிவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியகூட்டமைப்பு வடக்கு கிழக்கு அரசியல் விடயங்களுக்கு அப்பால் நாட்டின் ஏனைய பிரதேசங்கள் சார்ந்து ஒரு சரியான எதிர்க்கட்சியாக செயல்பட தவறியிருக்கின்ற இந்நிலையில் இந்த ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது நிழல் அமைச்சரவையை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
»»  (மேலும்)

7/05/2016

உள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்பே பெப்ரல் அமைப்பு

அரசாங்க தரப்பினர் உள்ளூராட்சி மன்றதேர்தல் குறித்து தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவில்லை. எனவே உள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் செய்யப்படுதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இவ்வார இறுதிக்குள் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சுயாதீன மற்றும் நீதியான தேர்தலுக்கான அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு தரப்பினரை  பிரதிவாதிகளாக குறிப்பிட்டே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்  ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
மேலும், தற்போதைய தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் இன்று நடக்கும் நாளை நடக்கும் என வெவ்வேறு திகதிகளை அறிவித்து வருகின்றமையினால் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் தான் தற்போது நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே நீதிமன்றத்திற்குச் செல்கின்றோம் என்றார்.
»»  (மேலும்)

மாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர் நீதிமன்றம் -

தமிழ்ப் பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான பெருமாள் முருகன் எழுதி 2010ஆம் ஆண்டில் வெளியான 'மாதொருபாகன்' என்கிற நாவல் திருச்செங்கோட்டின் பிரபல கோவில் திருவிழாவையும், ஹிந்து மதக்கடவுளரையும், இந்து பக்தர்களையும் இழிவு செய்வதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.எழுத்தாளர் பெருமாள் முருகன்
'மாதொரு பாகன்' நாவலுக்குத் தடைவிதிக்க வேண்டும், எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த எஸ்.கே. கவுல், புஷ்பா சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, 'மாதொரு பாகன்' நாவலுக்குத் தடை விதிக்க முடியாது என்றும் மாவட்ட நிர்வாகம் பெருமாள் முருகனிடம் எழுதி வாங்கிய ஒப்பந்தம் செல்லாது என்றும் கூறினர்.
பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

எழுத்தாளர்களுக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பளிக்கும் விதிமுறைகளைச் செயல்படுத்துவது குறித்து அரசு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
2010ஆம் ஆண்டில் மாதொரு பாகன் நாவல் வெளியிடப்பட்டது. திருசெங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவையும் குழந்தையில்லாத பெண்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் இந்து மதத்தையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் இழிவுபடுத்துவதாக பல்வேறு அமைப்புகள் 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தலைமையில் 2015 ஜனவரி 12ஆம் தேதி ஒரு சமரசக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பெருமாள் முருகனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டது.
இதையடுத்து, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மரணமடைவதாக தனது முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் அறிவித்தார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பெருமாள் முருகனும் அவரது மனைவியும் சென்னைக்கு மாற்றல் பெற்று வந்தனர்.

»»  (மேலும்)

'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு  கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான  மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

சிகிச்சைக்குப்பின் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ராம்குமாரின் சார்பாக இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், தனக்கும் சுவாதியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்துள்ள ராம்குமார், கைது செய்யப்பட்டபோது தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினருடன் வந்தவர்கள்தான் தன்னை பிளேடால் கழுத்தை அறுத்ததாகவும் சொல்லியுள்ளார்.
»»  (மேலும்)

தங்கத்துரை அண்ணன்-Balasingam Sugumar

தங்கத்துரை அண்ணன் Résultat d’images pour lamp
தங்கத்துரை அண்ணன் இறந்து 19

வருடங்கள் கடந்து விட்டன ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படியே உள்ளது.இதே நாளில்தான் (05.07.1997)தங்கத்துரை அண்ணன் உட்பட சண்முகாவித்தியாலய அதிபர் இராஜேஸ்வரி,கூனித்தீவின் மூத்த அதிபர் ஜீவரத்தினம் என பல கல்வியாளர்களும் படுகொலை செய்யப் பட்ட நாள்.
அண்ணன் தங்கத்துரை அடிப்படையில் இடதுசாரி கொள்கையில் நாட்டம் கொண்டவர் கொழும்பில் வேலை செய்கிற போது சமஜமாஜி தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர் இலங்கையின் பல இடது சாரி தலவர்களுடனான நட்பு அவருக்கிருந்தது.
மூதூர் தொகுதி அரசியல் பிரதிநிதித்துவம் தங்கதுரை அண்ணனுக்கு முன்பு மூதூரை சாராதவர்களாலேயே ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.1970ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் மூதூர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவராக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிறார்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் இயங்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் தங்கத்துரை என்றால் அது மிகையன்று.
மூதூர் தொகுதியில் இன்று வரை அவர் சாதனையயை மிஞ்சியவர் எவருமிலர்.மூதூர் தொகுதியின் படித்த இளைஞர்கள் அவர் காலத்திலேயே பெருமளவில் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொண்டனர்.பல அபிவிருத்தி திட்டங்கள் அவர் காலத்திலேயே மேற் கொள்ளப்பட்டன.
1977ல் புதிய தேர்தல் தொகுதி வரைவில் முல்லைத்தீவு தொகுதியை வடமாகாணத்தில் பெற்றுக் கொண்டு மூதூர் தொகுதியயை தாரை வார்த்தது தமிழர் கூட்டணி.இரட்டை அங்கத்தவர் முறை நீக்கப் பட்டு சேருவில தொகுதி உருவாக்கப் பட்டிருந்தது.
திருகோணமலை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் மீறி சம்பந்தருக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப் பட்டது.சொல்லப் பட்ட காரணம் சம்பந்தர் அப்புக்காத்து என்பது.பின்னாளில் அதே நெஞ்சுரத்துடன் படித்து சட்டத்தரணியாகிறார் அண்ணன் தங்கத்துரை.
1970ம் ஆண்டு நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம் அண்ணன் தங்கத்துரை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்துக்கு சேனையூர் வருகிறார் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி என தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தன.ஆனாலும் மூதூர் தமிழ் மக்கள் தங்கத்துரை அண்ணன் பின்னாலேயே அணி திரண்டனர்.
சேனையூர் பிள்ளையார் கோயில் முன்றலில் முதல் கூட்டம் பல முன்னணி தலைவர்களுடன் தந்தை செல்வாவும் கலந்து கொள்கிறார் நானும் அக்கூட்டத்தில் பிரசார உரையாற்றுகிறேன்.கட்டைபறிச்சான் கனகசிங்கம் ஆசிரியர்,என் ஆசிரியர் செ.விபுணசேகரம் ஆகியோர் பிரசார களத்தில் அணிசேர்கின்றனர் அத்தோடு என் மாமா நாகேஸ்வரன்,நண்பன் இரா.இரத்தினசிங்கம் என அண்ணன் தங்கத்துரைக்காக பல மேடைகளில் பேசுகிறோம்.
சம்பூரில் குழந்தவேல் மாஸ்ரர்,மணி,சித்திரவேலாயுதம்,மூதூரில் பூபா.மதுரநாயகம்,புண்ணிய மூர்த்தி,குலேந்திரன்,அன்ரனி டொக்டர் பள்ளிக்குடியிருப்பில் இரத்தினசிங்கம்,மல்லிகைத்தீவில் பாலசிங்கம் ,சிற்றம்பலம்,நடேசபிள்ளை,பட்டித் திடலில் யோகேந்திரம்,கவிஞன்,கங்குவேலியில் கிருபை, என மூதூர் தொகுதி எங்கும் அண்ணன் தங்கத்துரையின் வரவு அரசியலில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
என் அப்புச்சி தீவிர தமிழரசுக் கட்சி வெறியர் என்று சொல்லலாம் அண்ணன் தங்கத்துரைக்காகாக மிக தீவிரமாக செயல் பட்டார் எங்கள் வீட்டுக்கு நன்றி சொல்ல வந்த போது அப்புச்சி கையைப் பிடித்து நன்றி சொன்ன காட்சி பசுமை நினைவாய் உள்ளது.
1972ல் குடியரசு யாப்புக்கு எதிரான உண்ணாவிரத போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மூதூர் தொகுதியெங்கும் இளைஞர்களை அணி திரட்டியவர்,அண்ணன் தங்கத்துரை. அவர் மூட்டிய கனலே பின்னாளில் இயக்கங்கள் மூதூர் பிரதேசத்தில் வெற்றிகரமான செயல் பாட்டிற்கு தளம் அமைத்தன எனலாம்.
1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் அண்ணன் மிகப் பெரிய வெற்றி பெறுகிறார்.அந்த நாட்களில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்துக்காக அவருடன் பயணித்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.
மூதூர் பிரதேசத்தில் ஆரம்ப நாட்களில் ஈழ விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியில் முக்கிய ஆதரவு தளமாக அவர் இருந்தார் குறிப்பாக ஈழப்புரட்சி அமைப்பின் தோழர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.இறுதி வரை எத்தனை இடர்கள் வந்த போதும் தன் கட்சிக்கு விசுவாசமாயிருந்த ஒருவர் கொண்ட கொள்கை மாறா தலைவர் அவர்.
அவர் காட்சிக்கு இனியன் கடும் சொல் பேசா பண்பாளன் ,எப்போதும் சிரித்த முகம்.அவர் வாயில் முடியாது என்ற வார்த்தை வரவே வராது.எல்லோருடனும் சகஜமாக பழகும் சுபாவம்.அகம்பாவமற்ற அரசியல்.மற்றவரை மதிக்கும் பண்பு அதிகாரத் தொனியற்ற தோழமை அரசியல் .
இறுதியாக 1995ல் தோழர் பற்குணத்தின் மரண வீட்டில் சந்தித்தமை நீண்ட உரையாடல் திருகோணமலையில் தனி பல்கலைக் கழகம்,மூதூரில் ஒரு தொழில் நூட்ப கல்லூரி என பல கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.
கொட்டியாரத்தின் அரசியல் தலை மகனுக்கு தோழமை மிக்க அஞ்சலிகள்.

*நன்றி முகநூல் Balasingam Sugumar


»»  (மேலும்)

வரிச்சுமை நல்லாட்சியின் மறுபெயர்

ரணில் -மைத்ரி அரசின் மக்களுக்கெதிரான வரி விதிப்பை எதிர்த்து முன்னிலை சோசலிசக் கட்சி , நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.இன்று கேகாலை நகரில் நடந்த வரி விதிப்புக்கெதிரான விழுப்புணர்வுப் போராட்ட படங்கள்  
»»  (மேலும்)

எமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டது

  கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளுடன் இயங்கிவரும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலண்டன் ஈஸ்ட்காம் கவுன்சிலரும் துணை மேயரும் சமூக சேவகருமான திரு ‪#‎போல்_சத்தியநேசன்‬ அவர்கள் கலந்துகொண்டதோடு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து இலண்டன் கிளை முக்கிய உறுப்பினர் திரு வசி அவர்களால் போல் சத்தியநேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
சட்ட ஆலோசகரும் சமூக சேவகருமான இராகவன் அவர்கள் தலைமைதாங்கி நிகழ்ச்சி நிரலை ஒழுங்குபடுத்தி தலைமையுரை நிகழ்த்தினார் .அதனைத்தொடர்ந்து திரு:நந்தன், திரு:பாலன் மற்றும் எமது அமைப்பின் ஆலோசகரும் லண்டன் இணைப்பாளருமான திரு:ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். திரு .திருக்குமார் அவர்கள் நன்றியுரை கூற இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
www.vaasam.org
»»  (மேலும்)

7/04/2016

நல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடைப்பது போல் கூண்டிலடைப்பேன் என்று சொன்ன சந்திரிகா எங்கே?.

Résultat d’images pour santhirika  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத் தோற்றுவித்திருந்தது.

ஆகவே அவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. அக்கடிதம் தொடர்பில் ஞானசார தேரர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ' முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்றை நபி(ஸல்) அவர்களூடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு ' தெரிவித்திருந்தார்.

அவர் இவ்வாறு இஸ்லாத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்துகள் முஸ்லிம் சமூகம் உட்பட பல்வேறுபட்ட தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக தொடர்ந்து தெரிவிக்கும் மத நிந்தனைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில்  உட்பட பொது அமைப்புகளும் ஜனாதிபதிக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.


தேர்தலுக்காக நல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடைப்பது போல் கூண்டிலடைப்பேன் என்று சொன்ன சந்திரிகா இப்போது எங்கே? என்று முஸ்லிம்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

»»  (மேலும்)

7/02/2016

ரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி

Résultat d’images pour ranil ரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி,  பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.
1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஆளுநர், தனது கடமைகளை 4 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொள்வார்.
»»  (மேலும்)