8/09/2016

கைதான பசிலுக்கு பிணை

திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைதான பசில் ராஜபக்‌ஷவுக்கு பிணை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (08) கடுவெல நீதிமன்றுக்கு, உயர்நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான் பொருளாதார அமைச்சராக இருந்த வேளையில் திவி நெகும (வாழ்வு எழுச்சி) திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த ஜூலை 18 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் (FCID) பசில் ராஜபக்‌ஷ கைதாகியிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் கித்சிறி ரணவக்கவுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 01 ஆம் திகதி குறித்த பிணை மனு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை ஓகஸ்ட் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் இது தொடர்பில் எவ்வித எதிர்ப்புகளோ, ஆட்சேபணைகளோ இருப்பின், ஓகஸ்ட் 05 இற்கு (வெள்ளிக்கிழமைக்கு) முன்னர் அதனை சமர்ப்பிக்குமாறு, சட்ட மாஅதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment