8/18/2016

பல்லாண்டு வாழ்க

வரலாற்று புகழ் மிக்க கிழக்கு மாகாண சபையின் மூலகர்த்தாவும்  கிழக்கு மாகாண சபையின்  முதலாவது முதல்வருமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின்41வது பிறந்த நாளான இன்றாகும்.அவரது பிறந்த நாளை ஒட்டி மட்/மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கட்சி போராளிகளும் தொண்டர்களும் பொது மக்களும் பாதசாரிகளுக்கு குளிர் பானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அக்கட்சியின் மகளிர் அணியினர் கல்லடியில் தாக சாந்தி நடாத்தி கொண்டாடினர்.  மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் இளைஞர் அணியினரும் தாக சாந்தி நடாத்தி கொண்டாடினர்.

சந்திரகாந்தன் ரணில்-தமிழரசுக்கட்சி கூட்டரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அரசியல் பழிவாங்கல் காரணமாக கடந்த பத்து மாதங்களாக எவ்வித விசாரணையும் இன்றி பிணையும் மறுக்கப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment