8/19/2016

மைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எம்.பி. ராஜிநாமா

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அளஹப்பெரும, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான டலஸ் அளஹப்பெரும கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இந்த பின்னணியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் முறுகல் நிலை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த டலஸ் அளஹப்பெரும, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பறிக்க கட்சித் தலைமை எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக தெரிவித்தார்.
இன்று சுதந்திரக் கட்சி தனது முக்கிய கோட்பாடுகளுக்கு மாறாக செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய டலஸ் அலஹப்பெரும, அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே தனது மாவட்ட அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்ய தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment