8/26/2016

தனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ்லிம் சமூகம்

முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷ்வை ஆதரிப்பதற்கு காரணம் தவிசாளர் சேஹு தாவூத் என்றே இதுவரை நம்பி இருந்ததினால் அவர்மீது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்து இருந்ததுடன் தாருஸ்ஸலாம் விவகாரத்திலும் அவரது கடிதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.Résultat d’images pour slmc
செயலாளர் ஹஸன் அலி பொதுவாகவே மக்கள் சார்பான நிலைப்பாட்டை கொண்டவராக செயல்பட்டு வந்ததால் மக்கள் மத்தியில் தவி...சாளர் மீதுள்ள அதிருப்தி அளவுக்கு ஹசன் அலி மீது இருக்கவில்லை.
தேசியப்பட்டியலுக்காகவே தலைவருடன் முரண்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருவர்மீதும் இருந்த போதும் பிரதிநிதித்துவ அரசியலில் இனிமேல் ஈடுபதில்லை எனக்கூறி தவிசாளர் தனது தலைவருடனான முரண்பாடை தூய்மைப்படுத்த முனைந்தாலும் மஹிந்தவுக்கு கட்சியை தாரை வார்த்தவர் என்பதால் தவிசாளரின் எந்த நடவடிக்கையையும் மக்கள் சரிகாண விரும்பவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தில் பரிமாறப்பட்ட கருத்துக்களில் இருந்து ஒரு விடையம் தெளிவாகியுள்ளது.
மஹிந்தவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதற்கு தலைவரின் தனிப்பட்ட காரணங்களே இருந்திருக்கின்றன என்பது அப்பட்டமாக வெளியாகியுள்ளது.
மொத்தத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதில் இருந்து பொது பல சேனையின் அடாவடித்தனங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது வரையான அனைத்துக்கும் தனிநபர்களின் குற்றங்களை மறைப்பதே பிரதான காரணியாய் இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தன்னை பணயக்கைதியாக வைத்து அரசியல் செய்ய இனி எவரையும் அனுமதிக்கப்போவதில்லை என தலைவர் மேடைகளில் கூறித்திரிந்ததெல்லாம் தவிசாளர் மீது மக்களின் எதிர்ப்பை உண்டுபண்ணுவதற்கே என்பது புலனாகிவிட்டது.
யாரின் மானத்தை காப்பாற்ற யார் சொல்லி மஹிந்தவுடன் இணைய நேர்ந்தது என்பதை தலைவரை சுட்டிக்காட்டி தவிசாளர் உயர்பீட கூட்டத்தில் கேட்டதிலிருந்தே நீண்டகாலமாய் தவிசாளர் மீதிருந்த பழி நீங்க ஆரம்பித்துள்ளது.
என்றாலும் தனிப்பட்ட குற்றங்களை மறைப்பதற்கும் தப்பித்துக்கொள்வதற்கும் முஸ்லிம் சமூகத்தை நெருப்புக்கங்குகளையும் விட மோசமான அரசியல் சூழலுக்குள் தயவின்றி தள்ளிவிடக்கூடிய தலைவர்களை நம்பிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலம் முஸ்லிம்கள் இந்நாட்டில் பாதுகாப்புடன் வாழ முடியும்?
=அரசியன்=

*நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment