8/30/2016

மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்மானம்

மேற்கு வங்கம் என்று அழைக்கப்படுவதில், மேற்கை விடுத்து வங்காளம் எனவும் அல்லது உள்ளூர் மொழியான வங்க மொழிப்படி “பங்களா” எனவும் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலகம் முழுவதும் இதன் மக்கள் வங்க மொழியினர் என்று அறியப்படுவர்; மேலும் எளிமையான பெயரில் வரலாற்று மற்றும் கலாசார அதிர்வுகள் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் புவியியல் அமைப்பு 70 வருடங்களுக்கு முன் பிரிக்கப்பட்டது; அதில் பெரிய கிழக்கு பகுதி பாகிஸ்தானுடன் இணைந்தது, பின்னர் அதுவே வங்கதேசமாக மாறியது.
முன்வைக்கப்பட்ட பெயர் மாற்றம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment