8/14/2016

மட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடைப்பிடிக்கும் படுகேவலமான அரசியல் - தம்பிமுத்து மாசிலாமணி


Afficher l'image d'origine

(ஓய்வு பெற்ற  கல்வியதிகாரியும்  முன்னாள் கிழக்கு மாகாண சபை (ஐக்கிய தேசிய கட்சி) உறுப்பினருமாகிய தம்பிமுத்து மாசிலாமணி அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்களை சுருக்கமாக தருகின்றோம் முழுமையான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது) 
*நடந்த 1983 கலவரம் ஒரு இனப்படுகொலையே! அதற்கான பொறுப்புக்கூறலில் இன்னும் அரசு ஈடுபடவில்லை  ஏன்?

*இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கு வழிகாட்டியாய் இருந்தவர்கள் யார்?

*மட்டக்களப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்தால்தான் உயிர்வாழலாம் என்னும் நிலையில் இளம்விதவைகள்!

*தமிழ் தேசியக்    கூ ட்மைப்பினர் யோசேப் பரராஜசிங்கத்தின் கொலை விசாரணையில் காட்டும் அக்கறை ஏன் தங்கத்துரை போன்றோரின் கொலையில் காட்டுவதில்லை?

*மட்டக்களப்பு மங்களராமைய விகாராதிபதி பல காணிகளை பிடித்து சிங்கள மக்களை குடியேற்ற முயன்று வருகின்றார்.இதையிட்டு அறிக்கை அரசியல் செய்வதை தவிர எந்தவிதமான உபயோகமான செயல்பாடுகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஈடுபடுவதில்லையே ஏன்?*மகிந்த ஆட்சிக்காலத்தில் வெள்ள  நிவாரணமாக ஒதுக்கப்பட்ட ஒன்பது கோடி ரூபாய்களிலும் தொடர்ச்சியாகவும் மட்/அரசாங்க அதிபர் ஊழல்களில் ஈடுபட்டுவருகின்றார்.முஸ்லீம் அமைச்சர்களின் காணி அபகரிப்புகளுக்கு துணை போகின்றார். ஆனால் அவரை இடமாற்றவேண்டும் என்னும் கோரிக்கையை  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடுத்து வருகின்றனர்.

.*பிள்ளையானின் ஆட்சிகாலத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக விமலவீர திஸாநாயக்க இருந்தபோது எமது கல்வி சமூகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் இப்போது தண்டாயுதபாணி உள்ளபோது கிடைப்பதில்லை!

*கிழக்குமாகாணத்தில் அண்மையில் 19 பாடசாலைகள் அபிவிருத்திக்காக தெரிவாகின.அதில் 18 முஸ்லீம் பாடசாலைகள்,ஒன்றுமட்டுமே தமிழ் பாடசாலை ஆகும்.கிழக்கு கல்வியமைச்சர் தண்டாயுதபாணி எதற்காக இருக்கின்றார்?

*பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கடுமையான எதிர்க்கட்சியாக செயல் பட்டோம்,  எங்களுக்கான நிதிகளை முழுமையாக மக்களுக்காக செலவிட்டோம். போதாமைக்கு மேலும் நிதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் பிள்ளையானின் திறமையை  மெச்சத்தக்கது.

*"முஸ்லீம் வரப்போகின்றான்" "முஸ்லீம் வரப்போகின்றான்" என்று மக்களிடையே இனவாதத்தை பரப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் அனைத்தையும்  முஸ்லீம் அரசியல் வாதிகளில் கைகளில் ஒப்படைத்திருக்கின்றனர்.

*மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக தமிழர் இல்லை என்னும் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி சாணக்கியனை நியமித்தார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு முரண்டு பிடித்தனர். இது வரலாற்று தொடர்ச்சியாக நடப்பதுதான்.அது தேவநாயகம் இருந்தபோதும் இராஜதுரை இருந்தபோதும் நடந்ததுதான்.ஏன் தமிழர் என்பது யாழ்ப்பாண தமிழர் மட்டும்தானா?

*ஒவ்வொரு தேர்தலிலும் (கடந்த தேர்தலில் எனக்கு நேரடியாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையாலும்) சொல்லப்பட்டு வருகின்ற ஒரு செய்தி என்னவென்றால் தமிழ் தேசிய கூட்மைப்பை தாக்கி அரசியல் செய்ய வேண்டாம் என்பதேயாகும்.

*அதனால் நாங்கள் இதுவரை இவர்களை பற்றி பேசவில்லை.ஆனால் மக்களுக்கெதிரான அதிலும் மட்டக்களப்பு மக்களின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடைப்பிடிக்கும் படுகேவலமான அரசியலைப்பற்றி பேசவேண்டிய தேவை இன்று எழுந்துள்ளதால் இவற்றை பேச துணிந்தேன்.என்கின்றார்.


நன்றிவீடியோ * தமிழ் நெட்0 commentaires :

Post a Comment