8/27/2016

லண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவிழா பகிஷ்கரிக்கப்படுகின்றது?

லண்டனில் வாழும்   பத்மநாப ஐயர் என அறியப்படும்    பத்மநாபர் அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகின்றது. அவரது இலக்கிய சேவையை பாராட்டி    480 பக்கத்தில் பவள விழா மலர்  ஒன்றும் வெளியாகின்றது. இவரது பெயரில் உள்ள சாதி அடையாளத்தை ஒட்டி கடந்த காலங்களில் புகலிட இலக்கிய பரப்பில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.எனினும் அவர் அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.இப்போது இவரது பவள விழாவில் இந்த விடயம் பூதாகாரமாக மாறியுள்ளது
.

மலர் தொகுப்பாளர்களான  மு.நித்தியானந்தன்,ஓவியர் கே. கிருஸ்ணராஜா  இருவரும்  "நூலை ஆராதித்தல்  பத்மநாபம் 75' என்று பெயர் மலருக்கு பெயரிட்டுள்ளனர்.ஆனால் "நூலை ஆராதித்தல் : பத்மநாப ஐயர்  75' என்று வரவேண்டுமென பத்மநாபர் வாதிட்டுள்ளார். தொகுப்பாசிரியர் இருவரும் "இன்றைய சூழலில் ”ஐயர்” என்று வந்தால் உங்களுடைய பெயர்தான் இலக்கிய உலகில் அடிபட்டுப்போகும், தொகுப்பாசிரியர்களாகிய நாங்கள்தான் பதில் சொல்லவேண்டிவரும்" என்று எடுத்து சொல்லியும் அவர் தனது சாதி அபிமானத்தை விட்டுக்கொடுக்க வில்லை என தெரிய வருகின்றது. 

இதன் காரணமாக "நூலை ஆராதித்தல்  பத்மநாப ஐயர்  75"என்றே பவளவிழா மலர் அச்சாகியுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வை பலர் பகிஷ்கரிப்பதாகவும் தொகுப்பாளர்களான மு.நித்தியானந்தன்,ஓவியர் கே. கிருஸ்ணராஜா  இருவரும் விழா நடக்கும் வேளையில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு விட்டதாகவும் அறியமுடிகின்றது. மேலும் அவரது தனிப்பட்ட வாழ்வில் எப்படி அவர் சாதிமானாக வாழ்கின்றார் என்கின்ற தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. ஆனாலும் அவற்றை நாம் தற்போது பிரசுரிக்கவில்லை.(எமக்கு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் இக்குறிப்புக்கள் வெளியிடப்படுகின்றன மாறாக சம்பந்தப்பட்டோர் ஏதாவது திருத்தங்களையோ மறுப்புகளையோ எமக்கு தெரிவித்தால் அவை எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்-*உண்மைகள் நிர்வாகம் )

5 commentaires :

karuppupradhigal said...

பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள்தான்...

karuppupradhigal said...

பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள்தான்...

Anonymous said...

இவரது பெயர் பத்மநாப ஐயர், பத்மநாபர் அல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

“பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள்தான்…” என்று “கறுப்புப் பிரதிகள்" சொல்வது ஓர் சாதி வெறிக் குறிப்பே. இது போன்ற குறிப்புகளாலேயே தமிழ்க் கலாசாரம் அழிகின்றது.

Anonymous said...

“லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகின்றது. லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகின்றது.” என “உண்மைகள்” எழுதிய வரிகள் பொய்களே. தமிழ் இலக்கிய உலகில் மிகவும் அறியப்படடவர் பத்மநாப ஐயர். இவரிடம் எழுத்து இல்லை. நிறையைத் தமிழ் எழுத்துக்களை ஆவணமாகச் சேகரித்தவர் இவர். இவரை ““லண்டனில் வாழும் பத்மநாப ஐயர் என அறியப்படும்….” என எழுதுதல் “உண்மைகள்” இனது எழுத்தின் தப்பாகக் கருதப்படலாம்.

Post a Comment