8/14/2016

மோடிக்காக அரசு இல்லை : ராகுல் தாக்கு

   நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதே போன்று காஷ்மீர் பதற்றம் நிலை விவகாரத்தில் அரசு மவுனம் காத்து வருவதற்கும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் வைத்துள்ள செக் சரியானது. மோடிக்காக அரசு இல்லை. மோடியால் அரசு இல்லை என தெரிவித்துள்ளார். 

0 commentaires :

Post a Comment