9/06/2016

சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா

Uthayam Swiss's Profile Photo

சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 11 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் Gemein chafts Zentrum Affoltern Bodena cker 25,8046 Zeurichஎனும் இடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இளையராகம் கரோக்கே இசைநிகழ்ச்சி குழந்தைகளின் போட்டி கவிதைகள் கலைஞர்கள் கௌரவிப்பு பரதநாட்டியஅபிநயம் சிறுவர்களுக்கான நடனங்கள் சினிமாப்பாடல்களுக்கான அபிநயம் என்பன இடம்பெற இருப்பதுடன் இப்போட்டிநிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்குப் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட இருப்பதாக செயலாளர் வி .ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு 0763452395 /0792415602 /0797975135 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு விபரங்களை அறிந்துகொள்ளமுடியும் எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

உதயம் அமைப்பானது சுவிஸ் வாழ் கிழக்கு உறவுகளின் உதவியுடன் கிழக்கு மாகாண மக்களின் கல்வி சமூக பொருளாதார விடயங்களில் மெச்சத்தக்க பங்களிப்பை செய்து வரும் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment