9/13/2016

சம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் திருநாவுக்கரசு கோபிகன்சம்பூர் நிலக்கரி அனல்மின் நிலையம் கைவிடப்பட்டது- உத்தியோக அறிவிப்பு.

இன்று காலை உச்சநீதிமன்றிலே மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளரினால் சம்பூர் நிலக்கரி அனல்மின் நிலையம் கைவிடப்பட்டுவிட்டதாக உத்தியோக ரீதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச் செய்தியை இந்த நீண்ட போராட்டம் தோறும் வியர்வை சிந்தி உழைத்த அத்தனை தோழர்களுக்கும் போராடிய மக்களுக்கும் அறிவிக்கின்றேன்.

ஒரு மக்கள் போராட்டம் இலங்கையிலே அரசின் காதுகளுக்குச் சென்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்தின் ஒவ்வொரு படிக்கற்களளையும் வலுவாக்க இரவு பகல் பாராது உழைத்திருக்கிறோம். இலங்கை முழுவதுமிருந்து எம்முடன் சமூக அக்கறை கொண்ட ஏராளமான தனி மனிதர்களும் அமைப்புக்களும் இப்போராட்டம் முழுவதும் கூடவே பயணித்திருக்கின்றார்கள்.
வெயிலையும் மழையையும் பாராது உணவின்றி தண்ணீரின்றி எம்மக்கள் வீதிகளில் நின்று இந்த நாளுக்காக தொண்டை வரள வரள கோசமிட்டிருக்கின்றனர். அவர்களை எள்ளி நகையாடி கடந்து சென்ற எல்லா உள்ளங்களையும் இச்செய்தி சென்று சேரட்டும். அடுத்த முறை மக்கள் போராட்டத்தை நகைப்பதற்கு முன்பாக அவர்கள் தலைகள் வெட்கிக் குனியட்டும்.

புலம் பெயர் சூழலிலிருந்து எமக்கான தார்மீக ஆதரவை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களையும் கொழும்பில் இம்மாற்றத்திற்கென குரல் கொடுத்த அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவு கூருகிறோம்.
நன்றிகள் சொல்வதெற்கென நீண்ட பட்டியல் காத்திருக்கின்றது. அவற்றை பின்னர் பதிவிடுகிறேன். இது முதல் வெற்றி மட்டுமே. எம்மக்களிடம் இருந்து அடாவடியாகப் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டாக வேண்டும். இந்த நாட்டிலே உழைக்கும் ஏழை மக்களை மையப்படுத்தி நடைபெறும் அனைத்து அடக்குமுறைகளுக்காகவும் போராடுகின்ற ஒரு அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். நீண்ட பயணத்துாரம் இருக்கிறது செல்வதற்கு. இந்த வெற்றியை ஒரு இழைப்பாறலாக எடுத்துக் கொண்டு முன்னேறுவோம்.


நன்றி.

0 commentaires :

Post a Comment