9/01/2016

ஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு

ஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் பொதுக்கிணறுகள் அமைக்கும் செயற்திட்டம் ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கமைய ஐ.எஸ்.ஆர். சீ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. கட்டார் சரிட்டி நிறுவனத்தின் நிதியுதவியில் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேற்பட்டி திட்டம் ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவன திட்ட இணைப்பாளர் ஜுனைட் நளீமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி மீள்குடியேற்ற எல்லைக்கிராம மக்கள் குடிநீருக்கான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 commentaires :

Post a Comment