11/14/2016

கிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளாக பார்க்கும் அபாயம்! பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை, ஒரு இனம் இன்னுமொரு இனத்தினை எதிரிகளாக பார்க்கும் நிலை மீண்டும் ஒரு தடவை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். Afficher l'image d'origine
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் கு.நந்தகோபனின் 08வது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை (14-11-2016)அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது நந்தகோபனின் படத்திற்கு ஒளியேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டது.
கிழக்கு மாகாணத்தில் இனத்துவம் பேணப்படுகின்றதா,சமத்துவமான நிதிப் பங்கீடுகள் நடைபெறுகின்றதா?
கிழக்கு மாகாணத்திற:கு வருகின்ற நிதிகள் முறையாக செலவு செய்யப்படுகின்றதா?
கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் என்ன?முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று மேற்கொள்ளப்படுகின்றதா?என்பது கேள்விக்குறியாகவுள்ள விடயமாகும்.
இது தொடருமானால் எதிர்காலத்தில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை ஒரு இனம் இன்னுமொரு இனத்தினை எதிரிகளாக பார்க்கும் நிலை மீண்டும் ஒரு தடவை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எங்களிடம் உள்ளது.
அண்மைக்காலமாக இன முரண்பாடுகளை தூண்டும் வகையிலான கருத்துகள் அதிகளவில் வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது.
ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் இனகுரோதங்களை தூண்டி அதற்கூடாக அரசியல் செய்யமுனைகின்றனர்.2008 தொடக்கம் 2012 காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தினை சுபீட்ச நிலைக்கு கொண்டு செல்ல தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டு வந்த செயற்பாடுகள் 2012க்கு பின்னர் அதன் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அனைவரும் காண முடியும்.
சந்திரகாந்தனால் அமைக்கப்பட்ட பாரிய பொதுநூலகத்தினை இன்னும் பூர்த்திசெய்ய முடியாத வகையிலேயே இருக்கின்றது.
2008ம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தினை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பல்வேறு கனவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு பூச்சிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
2008ம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திடமான முடிவினை எடுத்திருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் போன்று கிழக்கில் ஏற்பட்டிருக்காது என்று கூறமுடியாது.
சந்திரகாந்தன் எடுத்த தீர்க்கதரிசனமான முடிவு கிழக்கு மாகாணத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டு கருத்தை கருத்தால் வெல்லும் ஜனநாயக பாதை திறந்து விடப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் வேண்டாம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சிந்தித்த ஒரு தலைவர் இன்று பயங்கரவாத சட்டத்தின் மூலம் சிறை வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார் .

0 commentaires :

Post a Comment