12/16/2016

வழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதி-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இன்று வெள்ளிக்கிழமை, இராஜிநாமாச் செய்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் பொருட்டே, சல்மான் இராஜிநாமச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் - செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை  நடைபெற்றது.
இதன்போது, ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒருமாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டைக்கூட்டி, அதன்மூலம் - முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதியளித்திருந்தார் எனத் தெரியவருகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஹசனலியுடன் இவ்வாறானதொரு சமரசத்துக்கு மு.கா. தலைவர் வந்துள்ளார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா.தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர்.

கடந்த காலங்களில் ஹசனலி கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டமை குறித்து முஸ்லீம் காங்கிரசின் முக்கியஸ்தர் பசீர் சேகுதாவூத் உட்பட பலர் ஹக்கீமுக்கு எதிராக குரல் எழுப்பிவருவது தெரிந்ததே.

0 commentaires :

Post a Comment