2/08/2017

நாட்டிலுள்ள அனைத்து சோதிடர்களை கைது செய்ய நல்லாட்சி அரசு முடிவு?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 27 ஆம் தேதிக்குள் உயிரிழந்து விடுவார் என தவறாகக் கணித்த ஜோதிடரை இலங்கை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறிசேன                          

முன்னர் இலங்கைக் கடற்படையில் பணிபுரிந்து வந்த விஜித ரொஹானா விஜெமுனி என்னும் அவர், ஜனவரி 27 ஆம் தேதிக்குள் அதிபர் சிறிசேன அபாயகரமான விபத்தை சந்திக்க நேரிடும் அல்லது நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக் கூடும் என்று கூறும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
பின்னர் அந்த தேதியை அவர் அக்டோபர் மாதம் வரை தள்ளி வைத்தார்.
வழக்கறிஞர்கள் அது ஒரு அவதூறு கூற்று என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஜோதிடர் முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை தாக்கிய குற்றச்சாட்டில் சிறிது காலம் சிறையில் இருந்து பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜிவ் காந்தி 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொழும்பு சென்றபோது, அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய இலங்கை படையினரில் ஒருவராக இருந்த விஜெமுனி அணிவகுப்பில் இருந்து வெளியே வந்து ராஜிவ் காந்தியை துப்பாக்கியால் தாக்க முயன்றார்.                


அப்படிப்பார்த்தால் எந்த சோதிடன் சொல்வது பலிக்கின்றது? எல்லா சோதிடர்களுக்கு பொய்யையும் புரட்டையும்தானே வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். ஜனாதிபதி விடயத்தில் பொய் சொன்னான் என்பதற்காக விஜெமுனி கைது செய்யப்பட்டால் லட்சோப லட்ஷம் சாமானியர்களை நாள்தோறும் ஏமாற்றி பிழைக்கும் நாட்டிலுள்ள அனைத்து சோதிடர்களை கைது செய்ய வேண்டுமே? 0 commentaires :

Post a Comment