3/27/2017

.பிள்ளையானுக்கிருக்கும் தில்லு சம்மந்தருக்கில்லை.

Résultat de recherche d'images pour "chandrakanthan" Image associéeகல்குடாவில் மது பான உற்பத்திசாலை உருவாவதை அறிந்து அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது அங்கிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஒருவரின் சகோதரர் தொடக்கம் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியிருக்கின்றார்கள்.

மத்திய வங்கி ஊழல் பேர்வழி  அர்ஜுன் மகேந்தரனின் மருமகனான அலோசியஸ் என்பவரே இதற்கான முதலீடு செய்து இந்த மதுபான உற்பத்தி சாலையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வரியில்லாமல் பொருட்களை இறக்குமதி செய்தவற்கு வரி விலக்கு செய்துள்ளது.

பிள்ளையான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மது பான நிலையங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில்லை.என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது அதனை மத்திய அரசுக்கு அனுப்பி நெருக்கடி கொடுக்க முடிந்தது.

ஆனால் தமிழ் தேசிய கூ ட்டமைப்பினர் -முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு மாகாணத்தில் இருக்கின்றது.ரணில்- மைத்திரி- சம்பந்தன் கூட்டு மத்தியில் இருக்கின்றது. மதுபான நிலையமல்ல ஒரு  தொழில்சாலையே மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படுகின்றது.


இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பால் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.
 

0 commentaires :

Post a Comment