5/31/2017

காபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். Des forces de sécurité afghanes sur le site de l'explosion à Kaboul.

ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள்.
குண்டுவெடிப்பில் சிக்கியவர்கள் அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு காரணமாக, அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சிதறின.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
»»  (மேலும்)

5/30/2017

மூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோருகிறார் கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளிக் கூட மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம் தொடர்பாக போலிஸ் சிறப்புக் குழுவின் விசாரணை தேவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மாகாண துணை போலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளிக் கூட மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்


சம்பவம் தொடர்பாக துணை போலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்ட முதலமைச்சர் உண்மையான குற்றவாளி விரைவாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளதாக முதலமைச்சர் செயலக ஊடகப் பிரிவு கூறுகின்றது .
அந்த பிரதேசத்திலுள்ள அரசு பள்ளிக்கூடமொன்றில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு சென்றிருந்த 6 - 8 வயதுடைய மூன்று மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான மூன்று மாணவிகளும் தற்போது திருகோணமலை பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகத்தின் பேரில் பள்ளிக்கூட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அயல் பிரதேசத்தை 2 தொழிலாளர்கள் உட்பட 4 பேர் போலிஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விந்து அணு மாதிரிகள் மீட்கப்பட்டதாக போலிஸார் நீதிமன்ற அறிக்கையில் தெரிவித்த நிலையில் அதனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை முன் வைக்குமாறு மூதூர் நீதிமன்றத்தினால் போலிஸாருக்கு கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் தேடபட்டு வருவதாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அந்த பிரதேச தமிழ் பள்ளிக் கூட மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
»»  (மேலும்)

மாகாண சபை உறுப்பினர் ஜனாவின் "மரித்தோர் ஊர்தி"  சேவை- வாழ்த்துக்கள்

Image may contain: outdoor

கிழக்கு மாகாண கிராமங்களில் இருந்து சுகவீனம் காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வந்து மரணமடையும் ஏழைகளின்        
குடும்பங்கள் மரணமடைவர்களுக்கு சிறுதொகைப்பணத்திற்கு பெட்டி எடுத்துவிடுவார்கள். ஆனால் அதை தங்களது இடத்திற்கு கொண்டுசெல்வதற்கு பெருந்தொகைப்பணம் தேவைப்படுகின்றது . சிலர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

முஸ்லிம்கள் தங்களது பள்ளிவாசல்களில் ஜனாசா வண்டி என்று வைத்து ஏற்றிக்கொடுக்கின்றனர்.இவற்றை நேரடியாக பார்த்து கவலையடைந்தது மாத்திரமல்லாமல் பலருக்கு உதவியும் செய்த நான், இதற்கு... ஒரு தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையில் GK அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கி நேற்றிலிருந்து (29.05.2017) இலவசமாக இந்த சேவையை செய்ய தொடங்கியிருக்கின்றோம்.இது தற்போதைக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு கொடுப்பதற்காக மட்டும்தான் என்பதுடன் , எதிர்காலத்தில் சேவை விரிவடையலாம்.
தொர்புகளுக்கு-------0766060299l

தயவு செய்து இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . ஏனெனில் சேவையை பெறுவதற்கு இச்செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும்.

முகநூல்கோ * கோவிந்தன் கருணாகரன் (ஜனா)


»»  (மேலும்)

5/28/2017

வாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டடம்

Image associée  வாழைச்சேனை  கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டடம் இஸ்லாமிய வர்த்தகர் வர்த்தகர் ஒருவரால் (Satham Food City Owner) அமைக்கப்படுகின்றது. காணிப்பிணக்கு தொடர்பில் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் வழக்கு நடைபெற்று வருகிறது. மறுபுறத்தில் வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் சிகாப்தீன் வீடு மற்றும் நகர அபிவிருத்திக்கான சட்டத்தை மீறும் வகையில் கட்டட அனுமதி வழங்கி கட்டட வேலை இடம்பெற்று வருகிறது. பிரதேச செயலாள...ர் வாசுதேவன் கூற்றுப்படி கட்டட அனுமதிக்கு அவர்களது கருத்துப் பெறப்படவில்லை. மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியும் பெறப்படவில்லை.

இந்நிலையில் அமைக்கப்பட்டுவரும் கட்டடம் வீதி எல்லைக்குள் அமைவதனால் அதை நிறுத்தக் கோரியும் தமது எல்லைக்குள் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றப் பணித்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்றைய தினம் 25.05.17 கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கல்குடா மற்றும் வாழைச்சேனை மக்களுக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தும் இல்லாத நிலையில் பொது அமைப்புகளின் கவனத்துக்கு இந்தப் பிரச்சனை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை ஊடகங்களில் வெளிக்கொணர்வதன் மூலம் இனங்களுக்கிடையே பிணக்குகளைத் தோற்றுவிக்கும் இனநல்லிணக்கத்துக்கு எதிரான இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்
»»  (மேலும்)

இலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.  இலங்கை வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 122-ஆக உயர்வு

மேலும், இந்த அனர்த்தங்களினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தகவல்களின்படி 1 இலட்சத்தி 14 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்தி 42 ஆயிரம்229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குடும்பங்களில் தமது வாழ்விடங்களை வெளியேறிய 24 ஆயிரத்து 603 குடும்பங்களை கொண்டஒரு இலட்சத்து ஓராயிரத்து 638 பேர் 319 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் அரசு பேரிடர் மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி.
மேல் , தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்தம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரிப்பு காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை பிந்தைய தகவல்களின்படி 122-லிருந்து 146-ஆக கூடியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 97-லிருந்து 112-ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் 42 பேரும், கம்பகா மாவட்டத்தில் 03 பேரும் என 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டம் -11 பேர் , காலி மாவட்டம் - 08 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டம் - 05 பேர் என தென் மாகாணத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் கடும் பாதிப்புக்குள்ளான இம் மாகாணங்களில் 97 பேர் தொடர்பான தகவல்களை 48 மணித்தியாலங்கள் கடந்தும் அறியமுடியாத நிலை தொடருகின்றது.
களுத்துறை மாவட்டத்திலே கூடுதலானோர் காணாமல் போயுள்ளனர். அம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் தொகை 68 என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல் கூறுகின்றது. ரத்தினபுரி மாவட்டம் -05 , கேகாலை மாவட்டம் -02 , மாத்தறை மாவட்டம் - 17 , காலி மாவட்டம் -05 என்ற எண்ணிக்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் பேரிடர் முகாமைத்துவ மையத்தில் பதிவாகியுள்ளது.
»»  (மேலும்)

5/27/2017

நிவாரணப் பணி-மட்டக்களப்பு

இலங்கயில் வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக 15. மாவட்டங்களில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழப்பு மற்றும் 100க்கணக்கானவர்களை காணவில்லை லட்சக்கணக்கானவர்கள் உடமைகளை இழந்து இடம்பெயந்து இருக்கும் பொதுமக்களுக்கு உதவிக்கரம் கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு- கல்லடிஉப்போடை கிராம உத்தியோகத்தர் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
.No automatic alt text available.Image may contain: 1 person, outdoor
»»  (மேலும்)

தமிழகத்தில் நக்ஸல்பாரி இயக்கம்-50

1967 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நக்ஸல்பாரி என்ற கிராமத்தில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினோரு பேர் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டம் ' உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற முழக்கத்தை முன்வைத்து நாடெங்கும் ஓர் அரசியல் இயக்கமாகப் பற்றிப் படர்ந்தது.
மேற்கு வங்கத்தில் துவங்கியதென்றாலும் அந்த இயக்கத்தின் அதிர்வுகளைக் கேரளாவிலும் ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும்கூட உணரமுடிந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முதலில் நக்சல்பாரி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டிலோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியவர்களோடு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கூர் தீட்டப்பட்ட இளைஞர்களும் இணைந்துகொண்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உள்ளீடாக இருந்த மைய அரசு எதிர்ப்பும், 1967 ல் ஆட்சிக்கு வந்த திமுக, விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனகளைத் தீர்க்கத் தவறியதும் அதற்குக் காரணங்களாய் அமைந்தன.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்டுவதென்பதே தமது நோக்கம் என நக்ஸல்பாரி இயக்கத்தவர் அறிவித்துக்கொண்டனர். இங்கே நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் 'தேர்தல் பாதை, திருடர் பாதை'என்று விமர்சித்தனர்.
நக்சல் அமைப்பின் ஆதாரவாளர்கள்                          
தமிழகத்தில் நக்ஸல்பாரி இயக்கம்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதலாளித்துவ கட்சிகளைவிட அதிகமாக நக்ஸல்பாரி இயக்கம் பிளவுகளைச் சந்தித்தது ஒரு முரண் நகை என்றே சொல்லவேண்டும். அந்தப் பிளவுகளால் உருவான இயக்கங்களை தேர்தலில் போட்டியிடுகிறவர்கள், போட்டியிடாதவர்கள் என இரு பிரிவுகளாக நாம் வகைப்படுத்தலாம்.
தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்ட சிபிஐ எம்எல் என்ற பெயரில் இயங்கும் ஒரு கட்சி இப்போது மைய நீரோட்ட இடதுசாரிக் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக்கொண்ட பல்வேறு பிரிவுகள் இப்போது மாவோயிஸ்ட் என்ற பெயரில் ஒரே கட்சியாக உருவெடுத்துள்ளது.
நக்ஸல்பாரி போராட்டம் வெடித்தபோது அது தமிழ்நாட்டில் கோவைப் பகுதியிலும், தஞ்சைப் பகுதியிலும்தான் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரான அப்புவின் மறைவும், நக்ஸல்பாரி தலைவர்களின் அறைகூவலை ஏற்று அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் அது தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பரவுவதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.
விவசாயி (கோப்புப்படம்)                          
நக்ஸல் இயக்கத்துக்கு புத்துயிரூட்டிய அவசரநிலை
ஆனால் இந்திராகாந்தி அம்மையாரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையும் அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதும், சிறைச்சாலைகளில் நடைபெற்ற சித்ரவதைகளும் நக்ஸல்பாரி அரசியலுக்கு புத்துயிரூட்டின.
அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு மீண்டும் தலையெடுத்த நக்ஸல்பாரி இயக்கம் வேலூர், தருமபுரி மாவட்டங்களைக் களமாகக்கொண்டு செயல்படத் தொடங்கியது.
1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜோலார்பேட்டையில் நடந்த நக்ஸல்பாரிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீஸார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆரின் ஆணைப்படி வேலூர், தருமபுரி மாவட்டங்களில் 19 நக்ஸல்பாரிகள் போலீஸாரால் போலி 'என்கவுண்டர்களில்' கொல்லப்பட்டனர்.
நக்ஸல்பாரி இயக்கம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்களில் சாதகமானவை எனக் குறிப்பிடவேண்டுமென்றால் மனித உரிமைகள், விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகள், தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் ஆகியவை குறித்து அது உருவாக்கிய விழிப்புணர்வைக் கூறலாம்.
அவசரநிலைக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மனித உரிமை இயக்கம் ஆரம்பமாகிவிட்டது என்றபோதிலும் தருமபுரி என்கவுண்டர்களுக்குப் பிறகுதான் அது தீவிரமடைந்தது.
இன்று தமிழ்நாட்டில் காவல்நிலைய கற்பழிப்புகளும், லாக் அப் மரணங்களும் குறைந்துள்ளதென்றால் அதற்கு அப்போது ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகளே காரணம்.
தஞ்சாவூர் விவசாயி (கோப்புப்படம்)              
'கீழ்வெண்மணி சம்பவத்திற்கு நியாயம் வழங்கிய நக்ஸல்பாரி'
கூலி உயர்வு கேட்டதற்காக கீழ்வெண்மணியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ, நீதிமன்றமோ நியாயம் வழங்கத் தவறியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையைத் தந்தவர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
அதன் பிறகுதான் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையின்கீழ் ஒடுங்கிக் கிடந்த விவசாயத் தொழிலாளர்கள் சற்றே மூச்சுவிட முடிந்தது.
நக்சல்பாரி அரசியலின் முன்னோடிகளிடையே சாதிப் பிரச்சனை குறித்த புரிதல் அவ்வளவாக இல்லையென்றே சொல்லலாம்.
தத்துவார்த்த ரீதியில் சாதியை மேல் கட்டுமானத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் பார்த்தனர். பொருளாதார அடித்தளத்தை மாற்றிவிட்டால் மேல் கட்டுமானத்தில் உள்ள சாதி பிரச்சனையும் தானாகவே தீர்ந்துவிடும் என்பதுதான் அவர்களது நிலைபாடு. ஆனால் அதில் விதிவிலக்காக இருந்தவர் பாலன்.
நக்ஸல்பாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பாலன் அவர் செயல்பட்டுவந்த தருமபுரி பகுதியில் தேநீர்க் கடைகளில் இருந்த தனிக் குவளைகளை உடைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் புகழ்பெற்றவர்.
தலித் அல்லாதவரான பாலன் தீண்டாமைக்கு எதிராகச் செயல்பட்டதால் அப்பகுதி தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்க்கும் போராட்டங்களில் தலித் அல்லாதவர்கள் முன்னே நிற்கவேண்டும் என்பதற்கு பாலன் தான் உதாரணம் .
' பாலன் மாடலை' நக்ஸல்பாரி இயக்கம் வேறெங்கும் செயல்படுத்தவில்லை. அது பாலனோடு ஆரம்பித்து பாலனோடு முடிந்துவிட்டது என்றபோதிலும் இன்று மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் நடத்தும் போராட்டங்களுக்கு துவக்கமாக அமைந்தது பாலனே என்பதை மறுக்கமுடியாது.
நக்சல்பாரி இயக்கம் தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களில் பாதகமான ஒன்றை இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம்.
அதுதான் ஆயுதப் போராட்டத்தோடு ஒன்றிணைந்த தமிழ் இனவாதம். வேலூர், தருமபுரி பகுதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்கரவாதத்தால் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடந்த நக்ஸல்பாரி இயக்கத்தவர் சிலருக்கு 1980 களின் முற்பகுதியில் இலங்கையில் தமிழர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்திய அரசால் ஈழப் போராளிகளுக்கு அமைத்துத் தரப்பட்ட ஆயுதப் பயிற்சி முகாம்களும் 'நல்வாய்ப்புகளாக' அமைந்தன.
நக்சல் அமைப்பின் ஆதாரவாளர்கள்                          
ஈழப் போராளிகளோடு அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் நவீன ஆயுதங்களை மட்டுமின்றி தனிநாடு கோரும் எண்ணத்தையும் அறிமுகப்படுத்தியது. அதையொட்டி நக்ஸல்பாரி அரசியலின் அடுத்த அலை 'தனித் தமிழ்நாடு' கோரும் இனவாதமாக மேலெழுந்தது.
தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கான பயிற்சி முகாம்கள் மூடப்பட்டதும் காவல்துறையின் அடக்குமுறையும் தனித் தமிழ்நாடு கோரும் இயக்கங்களை இப்போது கட்டுப்படுத்தியிருந்தாலும், 1980 களின் பிற்பகுதியில் உருவான இனவாத உணர்வு பல்வேறு குழுக்களைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள் மறுக்கப்படுவதும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் தொடர்வதும் அந்த இனவாதம் தழைக்க நீர் வார்த்துக்கொண்டிருக்கின்றன.
தொகுத்துப் பார்த்தால் நக்சல்பாரி இயக்கத்தின் ஆயுதப் போராட்ட அரசியல் மக்களுக்குக் கேடாகவே முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூர், தருமபுரி மாவட்டங்களில் மட்டுமல்ல, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இப்போது மாவோயிஸ்டுகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கும் ஆதிவாசி மக்களுக்கும்கூட அது துயரத்தைத்தான் பரிசாகக் கொடுத்திருக்கிறது.
பயங்கரவாதத்துக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு அழிந்துபோய்விட்ட இன்றைய உலகில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் எந்தவொரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனவே நக்சல்பாரி அரசியலிலிருந்து இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது ஆயுதப் போராட்டத்தை அல்ல, மாறாக ஜனநாயக போராட்ட வடிவங்களைத்தான்.
இது நக்சல்பாரி எழுச்சியின் அரை நூற்றாண்டு மட்டுமல்ல, ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டும்கூட. இந்தத் தருணத்தில் பழமை ஏக்கத்தோடான நினைவுக் குறிப்புகளை எழுதுவதோ, மறைந்த தலைவர்களுக்குப் புகழுரைகள் ஆற்றுவதோ முக்கியமல்ல. நாடாளுமன்ற ஜனநாயகம், சோஷலிஸம், புரட்சி ஆகியவை குறித்த புறவயமான விவாதமே இன்றைய தேவை.
நக்சல் அமைப்பின் ஆதாரவாளர்கள்படத்தின் காப்புரிமை Getty Images
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டையொட்டி எழுதப்பட்டுள்ள ' தி டைலமாஸ் ஆஃப் லெனின் ' என்ற தனது நூலில், " லெனினின் உடலைப் புதையுங்கள்; ஏகாதிபத்தியம், சுய நிர்ணய உரிமை, கம்யூனிச அரசு, அரசியலுக்குத் தரவேண்டிய முதன்மை முதலானவை குறித்த அவருடைய சிந்தனைகளை உயிர்ப்பியுங்கள் " என்று ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு தாரிக் அலி கூறியிருப்பது இந்திய நக்ஸல்பாரி இயக்கத்துக்கும்கூடப் பொருந்தக்கூடியதுதான்.
அரசு ஆயுதபாணியாக இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் மட்டும் எப்படி நிராயுதபாணிகளாக இருப்பது எனக் கேட்கப்படலாம். அதற்கு 1843 ஆம் ஆண்டிலேயே கார்ல் மார்க்ஸ் பதிலளித்திருக்கிறார். "
விமர்சனம் என்ற ஆயுதம், ஆயுதங்களாலான விமர்சனத்தைப் பதிலீடு செய்ய முடியாது என்பது உண்மைதான். ஒரு பருண்மையான சக்தி இன்னொரு பருண்மையான சக்தியால்தான் தூக்கியெறியப்படவேண்டும். ஆனால் ஒரு கோட்பாடானது வெகுமக்களைப் பற்றிக்கொள்ளும்போது அதுவே ஒரு பருண்மையான சக்தியாக மாறிவிடும்" என அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இளைஞர்கள் சிந்திக்கவேண்டியது ஜனநாயகம் என்ற கோட்பாட்டை எப்படி வெகுமக்களைப் பற்றச் செய்வது, எப்படி அதை ஒரு பருண்மையான சக்தியாக மாற்றுவது என்பதைத்தான்.
(கட்டுரையாளர் - ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர்)
»»  (மேலும்)

5/24/2017

"ஈபிஆர்எல்எப்" அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டால் இன்று மாகாணசபை முறைமை இருந்திராது

உங்கள் கட்டுரைகள் அடங்கிய 'மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக' எனும் நூலை அண்மையில் வெளியிட்டிருக்கின்றீர்கள். அவ்வாறு தலைப்பிட்டமைக்கான காரணம் என்ன?


கடந்த 30 - --40 வருடங்களில் அதிகாரம்,- அரசியல்- சமூகம், பாரதூரமான அளவில் வன்முறை மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை சகஜமானது, இயல்பானது, என்ற சொரணையற்ற தன்மை பரவலான நிலைமை. இவை சாதாரணம் என்பது போல. தமிழர் சமூகத்தில் இந்த வன்முறை காட்டுமிராண்டி நிலையை எய்தியது. எனவே இங்கு சமூகத்தில் ஜனநாயக மனித உரிமை விழுமியங்கள் தூக்கிநிறுத்தப்பட வேண்டியிருக்கிறது.
தமிழர்களில் ஒரு பல்லாயிரம் பேர் துரோகிகள் என்ற பெயரில் கொல்லப்பட்டது சரியே என்ற ஒரு போக்கு இன்று வரை ஆதிக்க கருத்தியலாக இருக்கிறது. இது தகர்க்கப்பட வேண்டும். தெரிவு செய்யப்பட்ட பேசுவதற்கு செளகரியமான மனித உரிமை மீறல்கள் பற்றி, தமிழ் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள்.
தெற்கிலும் அவ்வாறு தான். தத்தம் குறும்,பெரும் தேசிய பெருமித உணர்வுகளை மற்றும் தீண்டாமையை மனித உரிமைக்கும் மனிதாபிமானத்துக்குமான அளவு கோல்களாக வைத்திருக்கிறார்கள். சுயவிசாரணை எதுவும் கிடையாது.
அவ்வாறு சுய விசாரணை செய்யாத சமூகம் உருப்படுமா? அது கருதும் நியாயம், நீதி தான், கிட்டுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
தமிழர் சமூகத்தில் நிலவும் தீண்டாமை பற்றியோ, சகோதரப் படுகொலைகள் பற்றி யோ, அல்லது அண்மைய வரலாறு முழுவதும் நிகழ்ந்த பேரழிவுகள் பற்றியோ பேசாமல் குறிப்பிட்ட, தெரிவு செய்யப்பட்ட மனித உரிமை பற்றி பேசுவது.
நீதியான சிந்தனை உள்ளவர்கள் பல ஆயிரக்கணக்கில் துரோகி நாமகரணத்துடன் எமது சமூகத்தில் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கிரேக்க தத்துவஞானி சோக்கிரட்டீசின் வாரிசுகள் அவர்கள். ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்டதற்காக கொல்லப்பட்டவர்கள்.
அவர்களின் சரித்திரம் மண்ணோடு மண்ணாக முடியாது. அவர்களின் சரித்திரம் வரலாற்றின் தோள்களில் சுமந்து வரப்பட வேண்டும்.
ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கக் கூடாது என்ற நிலை 30 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரமாக நிலவிய சமூகம் இது. இப்போதும் அந்த கருத்தியல் செல்வாக்கு செலுத்துகிறது. எனவே தான் நெஞ்சில் ஈரம் உள்ள தலைமுறை தேவைப்படுகிறது. கழிவிரக்கம் அல்ல. மனிதனும் சோசலிசமும் என்ற தனது கட்டுரையில் சே புரட்சிவாதி மனித குலத்தின் மீதான பேரன்பினால் வழிநடத்தப்படவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துவார்.
எமது சமூகத்தில் வறுமையாக -வரட்சியாக போன விடயம் இது. அதற்காகத்தான் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய, போலிகளற்ற, அர்ப்பண சிந்தையுள்ள மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறையொன்று எமது சமூகத்தில் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
அந்த புதிய தலைமுறை வரலாறு முழுவதும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் எமது சமூக ஆதிக்க சிந்தனை முறையில், அமைப்பு முறையில் அவர்கள் மேலெழுந்து வருவது சவாலான பணி. ஆனால் இந்த சவாலான பணி இடையறாது நிகழ வேண்டும்.யாழ். மைய மேலாதிக்க சிந்தனை போக்கு தகர வேண்டும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள். ஆனால் அவதூறுகளையும் நிந்தனைகளையும் சக்கரவியூகமாக எதிர் கொள்வார்கள். கெட்டி தட்டிப்போன மரபார்ந்த அதிகார வர்க்கம் இதனை இலகுவில் அனுமதிக்காது. தமிழ் ஆயுதப் போராட்டம் பாசிசமாக சிதைவுற்றது ஒருபுறமிருக்க அந்த பழம் பெரும் மரபார்ந்த கனவான்களின் புதிய வாரிசுகள் யுத்தத்தின் பின், மக்களின் அங்கீகாரத்துடன் திரும்பவும் அதிகாரத்திற்கு வந்தார்கள். அந்த மரபார்ந்த தொடர்ச்சி நிலவுகிறது.
அர்ப்பண உணர்வு கொண்டவர்களின் காலம், கண நேர தற்காலிக வெற்றியும் நீண்டகால போராட்டமும் துயரமுமாகத்தான் எமது சமூகங்களில் மாத்திரமல்ல, வேறு பல நாடுகளிலும் காணப்படுகிறது. மக்கள் இப்போது அந்த அரசியலில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
ஆனால் புதிய தலைமுறையின் எழுச்சி தொடர்வதற்கான சந்தர்ப்பம் உடனடியாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே சுயாதீனமாக போராடுகிறார்கள். எண்ணிக்கை அளவில் நிகழும் இந்த மாற்றம் குணாம்ச ரீதியாக புதிய தலைமைத்துவம் நோக்கிய தலைமைத்துவ தேடலுக்கான வாய்ப்பான தருணமே. உடனடியாக இல்லாவிடினும் நீணடகாலத்தில் அது சாத்தியமானது, நிஜமானது.
சில சந்தர்ப்பங்களில் சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறலாம்

தமிழர் போராட்ட வரலாற்றின் வலிகளை அதிகளவில் சுமந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனாலும், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு ஏறத்தாழ 8 வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும், ஏனையவர்களின் தியாகங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு அவர்கள் துரோகிகளாகவே பார்க்கப்படும் நிலை தொடர்கின்றதே?
இந்த துரோகிகள் பட்டம் தமிழ் ஆதிக்க அரசியலினால் நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டது. யாழ்மையவாத தீண்டாமை, பால் சமத்துவமின்மையின் எச்சசொச்சங்களில் இது வேர்கொண்டது. ஆயுதம் ஏந்திய தமிழ் பாசிசம் அதனை விதியாக கட்டமைத்தது. தனது நலனுக்கு குறுக்கே வருபவர்களை எல்லாம் அது துரோகியாக சித்தரித்தது. உடல் மீதியின்றி அழித்தது. அந்த இரத்தம் தோய்ந்த ஆதிக்க கருத்தியல் சமூகம் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. குறிப்பாக தமிழ் ஊடகங்களில். உதாரணமாக தமிழர்களின் உள்ளக ஜனநாயக மீறல்களில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் தமது பிள்ளைகள், உறவுகள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று பொதுவெளியில் கூறமுடியாத நிலை. மனம் மறுகிப் போன நிலை, இன்றளவில் காணப்படுகிறது.
அவர்கள், தாம் அதனை பொது வெளியில் கூறக்கூடாதாக்கும் என்று கருதும் அளவிற்கு பொது வெளி பரோபகாரம் அற்றதாக இருக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு, எல்லைப்புறங்களில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு தமிழர் போராட்டத்தின் பேரில் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகள் பற்றி நீடித்த பொருட்படுத்தபடாத மெளனம்.
சிலர் பகிரங்கமாக பேசுகிறார்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் தமது கொல்லப்பட்ட காணாமல் போன உறவுகள் தொடர்பில் மெளனமாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சமூகத்தை நேசித்த பலர் தீண்டத் தகாதவர்கள், துரோகிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது புதிய தலை முறைக்கு தெரியாத சங்கதி.
இப்போது மெதுவாக இந்த கருத்தில் உடைப்பேற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் துரோகிகளாக்கப்பட்டவர்கள் தொகை பிரமாண்டமான அளவில் அதிகரித்திருக்கிறது.

சிறுபான்மையினரின் ஆதரவுடன் உருவான அரசு, எதிர்க்கட்சித் தலைவர், குழுக்களின் பிரதித் தலைவர் என்ற பதவிகள் தமிழர்கள் வசமிருந்தபோதும், ஓரங்குல நிலத்தை விடுவிப்பதற்குக்கூட மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்களே?

பொதுவாகவே தமிழர்களின் பிரதான அரசியல் என்பது தேசியவாத போதையை அன்றாட வாழ்வில் ஏற்றிக் கொண்டிருக்கும். மக்களின் ஜீவாதார நலன்கள் அதில் மூழ்கடிக்கப்படும்.
உலகில் சமூக அக்கறை கொண்ட தலைவர்கள் கல்வி வேலைவாய்ப்பை உருவாக்குவது வீடு சுகாதாரம் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்களில் அக்கறை செலுத்துவார்கள்.
ஆனால் தமிழ் ஆதிக்க அரசியல் சுயநிர்ணயம், -தேசம், -சமஸ்டி,- ஜெனிவா- துரோகிகள்-, அரசியல்கைதிகள்- காணாமல் போனோர்,- பயங்கரவாத தடைச்சட்டம் என்ற சொற்பதங்களுக்கு புகுந்து கொண்டு, விபரீத சித்து விளையாட்டுக்களில் ஈடுபடும். இந்த சொற்களின் உண்மையான அர்த்தம், தாற்பரியம் பற்றி ஒரு பிரக்ஞையும் கிடையாது. விசுவாசமும் கிடையாது.
எல்லாப்பாதையும் ரோமுக்குத்தான்- பாராளுமன்றம், மற்றும் மாகாண சபை
அங்கு இந்த சொற்களின் அர்த்தங்கள் எதுவும் இருக்காது. எல்லா சமரசங்களையும் விட்டுக் கொடுப்புக்களையும் தனது தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்து கொள்ளும். மக்கள் நலனுக்காக அல்ல.
மக்களின் ஜீவாதார நலன்கள் அதன் பிரக்ஞையில் உறைக்காது. இருக்காது. அவை சுவரசியம் அற்றவை. ஆர்வம் ஊட்டுவன அல்ல. உதாரணமாக நிலம் சம்பந்தப்பட்ட அதிகாரம் மாகாண சபைக்கு இருக்கிறது. அதற்கான நியதிச்சட்டங்களை அவர்கள் உருவாக்கி மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும்.
மத்தியில் இருந்து பிரச்சினை வரும்.வராதென்றில்லை. அவர்கள் அடுத்து நீதிமன்றம் செல்ல வேண்டும்.
உதாரணமாக முன்னாாள் பிரதம நீதியரசர், இலங்கையில் இரண்டு சட்டவாக்க சபைகள் இருக்கிறதென்று சொன்னதால் தானே பிரச்சினை. ஆனால் அந்த தீர்ப்பு முக்கியமானது. இவ்வாறு 300க்கு மேற்பட்ட நியதிச் சட்டங்கள் இருக்கின்றன. அவை மாகாண சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இல்லாதவிடத்து ஏற்கனவே உள்ள பழைய சட்டங்கள் தான் செல்லுபடியாகும்.
ஏனோ அக்கறைப்படுகிறார்கள் இல்லை?
புதிய அரசு இவர்களின் அதரவுடன் தான் நிறுவப்பட்டது. எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் பல உருப்படியான காரியங்களை ஆற்றியிருக்கலாம் ஆற்றவில்லை.
வரலாறு வெற்றிடங்களை விட்டுவைப்பதில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் காரியம் ஆற்றாதபோது, மக்கள் அந்த வெற்றிடத்தில் உறுதியாக இயங்குகிறார்கள் இப்போது அது தான் நடைபெறுகிறது.

மாகாண சபை உருவாக்கத்தில் ஈபிஆர் எல் எப்பின் பங்கு முக்கியமானது. எனில் தற்போதைய வட மாகாண சபையின் செயற்பாடுகளை, அதன் செயற்பாடின்மையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ஈபிஆர்எல்எப், அன்று போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று சக கட்சிகளுடன் இறங்கியிராவிட்டால், இன்று வடக்கு கிழக்கில் மாகாண சபைமுறை இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அன்று ஒரு புறம் புலிகளும் மறுபுறம் பிரேமதாச அரசும் மாகாண சபை முறையை முடக்குவதற்கான முழு மூச்சான சதி நாச வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை, மாகாண சபை உறுப்பினர்கள்-, அரச ஊழியர்கள் உயிரை துச்சமென மதித்து அர்ப்பண உணர்வுடன் பணியாற்றினர். தவறுகள் நேரவில்லை என்றில்லை. நிறைய தவறுகள் நேர்ந்தன... அவற்றுக்கும் மத்தியில் பல்லினபாங்கான மந்திரிசபை அமைக்கப்பட்டது.
தென்னிலங்கையில் கிளர்ச்சி தீவிரமடைந்த நிலையில் பலரும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் முற்போக்கான சமூக செயற்பாட்டளர் பலர் திருமலையில் தஞ்சம் அடைந்திருத்தனர்.
இத்தனைக்கும் மத்தியில், திருமலையை நவீன நகரமாக்குவதற்கும், பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கரையோரப்பாதை மற்றும் புகையிரதப் பாதை ஒன்றை நிறுவுவதற்கும் -யாழ்ப்பாணத்தில் மென்பொருள் உற்பத்தியை தொடங்குவதற்கும் இந்திய அனுசரணையுடன் முயற்சிக்கப்பட்டது.
மீன்பிடித் துறைமுகங்களை மறுநிர்மாணம் செய்வது, விவசாய ஆராய்ச்சி நிலையங்களை வடக்கு கிழக்கில் பரவலாக நிறுவுவது, பல்லின சமூகங்களை பிரதிபலிப்பதாக அமைச்சரவையை அமைப்பது, மாகாண அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியில் இருந்த முஸ்லிம் காங்கிரசிற்குமிடையே சுமுகமான உறவு நிலை காணப்பட்டது. மாகாண சபை என்ற கருத்துருவை கட்டுமானத்தை நிறுவுவதில் பல்வேறு விமர்சனங்கள், குறைபாடுகள் காணப்பட்டாலும், மாகாணத்திற்கான சட்டம் ஒழுங்கு முறை ஒன்று நிறுவப்பட்டது. ஓன்றும் சுமுகமாக நிகழவில்லை. பல்வேறு கெடுபிடிகள் பிக்கல் பிடுங்கல்கடன் தான் நிகழ்ந்தது. பெருமளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது.
குறிப்பாக வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதில் மாகாண சபை அக்கால கட்ட நிலைமையில் வினைத்திறனுடன் செயற்பட்டது.
பாரம்பரிய நிலங்களை பாதுகாப்பதிலும், மக்களின் மீள் குடியேற்றத்திலும், தனது ஆற்றலை வெளிப்படுத்தியது.
ஆனால் கெடுபிடிகள் எதுவும் இல்லாத காலத்தில் தங்களின் தயவிலேயே புதிய மத்திய அரசு 2015 இல் உருவாகியிருக்கும் நிலையிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் வினைத்திறனுடன் செயற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் தொடர்பிலான 300க்கு மேற்பட்ட நியதிச் சட்டங்களை இப்போது ஆக்கி முடித்திருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அது அவ்வாறு நிகழவில்லை.
பெருந்தொகையான சட்ட அறிஞர்களையும் கல்வியாளர்களையும் ஈடுபடுத்த வாய்ப்பிருந்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் நீண்ட தூரம் போகவில்லை.
இருக்கும் அதிகாரங்கள் வழங்களை வைத்து ஆற்றக் கூடிய காரியங்கள் ஏராளம்.
கல்வி -சுகாதாரம்- போக்குவரத்து- பாதை -சுற்றாடல், நிலம், சட்ட ஒழுங்கு என ஏராளம் வாய்ப்புக்கள். ஆனால் சம்பந்தமில்லாத விடயங்களை கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி நாட்டதில் கொள்ளாத நிலை தான் தொடர்கிறது.
ஆனால் வடமாகாண சபை அப்படி ஆகி இருக்கிறது. கிழக்கு மகாண சபையின் தாக்கமான செயற்பாடுகள் எதுவும் வெளிவரவில்ைல.
சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையில் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பிராந்தியங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முக்கிய ஜனநாயக மாற்றம் இந்த மாகாண சபை. அதற்கு அதிகாரங்களை நிலைநாட்டுவது பெறுவது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கடமை. அந்த கடமை செவ்வனே செய்யப்பட வேண்டும்.
பாராளுமன்றம் தவிர்ந்த சட்டவாக்க சபை அது. ஒரே நாளில் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றில்லை.
அதற்கு ஒளி படைத்த கண்களும் உறுதி கொண்ட நெஞ்சும் வேண்டும்.
மாகாணசபைகள் செயற்படுவதற்கு கட்சி காழ்ப்புணர்வுகளுக்கப்பால் பல்வேறு தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்
அதற்கான ஜனநாயக இடைவெளி வேண்டும். மாகாண சபையை வழி நடத்துபவர்கள் மக்களை நிர்வகிப்பவர்களாக இருக்கவேண்டும. மத்திய அரசு-, அண்டை நாடு, -1.5 மில்லியன் புலம்பெயர் மக்கள், -சர்வதேச சமூகம் என வளங்களைக் கொண்ட எமது வடக்குகிழக்கு மாகாண சபைகளுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
சாதுரியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் நடந்து கொண்டால் சாதிக்க முடியும்.

அரசியலில் நீங்கள் தீவிரமாக ஈடுபட வேண்டியதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்படுகின்றதே?

வரலாறு தனி மனிதர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. தனிமனிதர்களுக்கான வரலாற்று பாத்திரங்கள் இருக்கின்றன அவை வரையறைக்குட்பட்டவை. சமூக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான இடைவெளியை உருவாக்க வேண்டும்.
அனுபவங்கள் பெரிதாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பக்குவம் உருவாக வேண்டும். புதிய தலைமுறையுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே தற்போதைய எனது பிரதான முயற்சி.Home
»»  (மேலும்)

ஞானமும் இல்லை, சாரமும் இல்லை!

ஞானமும் இல்லை, சாரமும் இல்லை!
Image associée


சண்டாளர்களோடு நீ வந்தாலென்ன,
சண்ட மாருதம் போல் இரைந்தால்தானென்ன?
எச்சில் வழியும் உன் காட்டுக் கூச்சலில் ...
ஞானமும் இல்லை, சாரமும் இல்லை.
உன்னில் வீரமும் இல்லை.

வெறும் சாரைப் பாம்பு நீ.
கருநாகம் போல் ஏன்
பொய்யாய்ப் படமெடுத்து ஆடுகிறாய்?
சட்டம் உன் கைகளை இறுக்கும்
நேரமொன்று நெருங்கி வரும்.
பெட்டிக்குள் அடங்கிடுவாய் பாம்பே,
அப்போது நீ கிளப்பிய புழுதியும் அடங்கி விடும்.
சட்டம் எப்படிப் போனாலென்ன,
காலம் உன்னைக் கசக்கி விடும்.
கந்தல் ஆடையாய்க் கிழிந்து
குப்புற நீ விழுந்து கிடப்பாய்
வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்.
ஈ, காக்கை கூட உன்னை
அண்டாது அப்போது.
யாரின் மகுடிக்கு ஆடுகிறாய் பாம்பே?
எய்தவனிருக்க அம்பை நோவானேன்
என்றிருந்தேன் இத்தனை நாளும்.
எல்லாவற்றையும் மீறி,
இன்று வார்த்தைகள் சிந்தி விட்டன.
உன்னை உரைத்த, உன்னை எழுதிய
வாயையும் கையையும்
கழுவிக் காயப் போட்டால்தான்
பிராயச்சித்தம் கிடைக்கும் எனக்கு.

சிராஜ் மஷ்ஹூர்.
24.05.2017
*நன்றி முகநூல்
»»  (மேலும்)

5/20/2017

சம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியைக் கொண்டு வரும் நுண்ணரசியல்

Thirunavukkarasu Gopahan's Profile Photo, Image may contain: 1 personஐ சப்போர்ட் ஐயா-Thirunavukkarasu Gopahan


இந்தத் தலைப்பு நிறையப்பேரை புருவம் உயர்த்தச் செய்யும் என்பதை நான் அறிவேன்.
முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் ஐயாவை மக்கள் வெளியேறுமாறு கூக்குரலிட்டனர், அவமானப்படுத்தினர் என்கிற செய்தியை இரு நாட்களாக தொடர்ச்சியாகப் பார்க்கக் கிடைக்கிறது. நான் அங்கு நின்ற போதும் இச்செய்தி பெரும் பேசுபொருளாக இருந்தது. உண்மையிலேயே இது எமக்கெல்லாம் உவப்பான செய்திதானா??? எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டமைக்கும் காணாமல் ஆக்கப்பட்டமைக்குமாக நாங்கள் யாரிடம் நீதி கேட்க வேண்டும்? சிங்கத்தின் மீது குரலெழுப்பி நீதி கேட்பதை விட்டு விட்டு தமிழ்த்தலைமையின்மீது பழிபோடுவதன் மூலம் எமது ஒட்டுமொத்த பிரயத்தனங்களும் தோற்றுப் போய் விட்டதை நாம் முள்ளிவாய்க்கால் மணலில் அன்று காணவில்லையா??? எம்மை எமக்கெதிராக துாண்டிவிட்டதன் மூலம் சிங்களம் இன்னுமொரு முறை வெற்றி கண்டிருக்கிறது. எமது ஒட்டுமொத்த கோபத்தையும் யார் மீதாவது நாம் பாய்ச்சியாக வேண்டும் என்கிற வகையில் சம்பந்தன் ஐயாவின் மீது அதனை பாய்ச்சி நாம் திருப்தியுடன் வீடு மீண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய தோல்வி நமக்கெல்லாம்.
துரோகியென்றும் ஒத்தோடிகளென்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டெடுத்த சொல்லாடல்களை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளப்போகிறோம்.?
வட மாகாணம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் சிங்களத்தின் மீது கேள்விகளை தொடுப்பதையும் நீதி கேட்பதையும் விட்டு விட்டு சம்பந்தன் ஐயாவை கேள்விக்குள்ளாக்கி திருப்தி கொண்டிருக்கிறது. அவர் மீது நிறையவே விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றை இல்லையென்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் எதிர்த்துப் போராட வேண்டிய எதிரி நம்மை நமக்குள்ளேயே மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக சம்பந்தரை அனுப்பச் சொல்லி விக்கினேஸ்வரனை கெஞ்சும் வீடியோவும் என்னை இன்னும் ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. தமிழ்த்தேசிய தலைமைத்துவத்திலிருந்து சம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியைக் கொண்டு வரும் இன்னுமொரு நுண்ணரசியல் நடைபெறுவதாக நான் உணர்கிறேன். இது மிக தீவிரமாக கவனஞ்செலுத்தப்பட வேண்டிய விடயமாகும். அரசியல் என்பது மக்களின் இருப்பின் மீது கட்டியெழுப்பப்டவேண்டுமே தவிர தனிநபர்களின் விம்பங்கள்மீதல்ல என்பதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் ஐயாவை வெளியேற்ற திட்டமிட்ட அனைவரும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை பின்தள்ளும் சிங்களத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி முகநூல்
»»  (மேலும்)

மட்டக்களப்பு மக்களின் பிரச்சனைகளில் இருந்து துளிர்விடும் அரசியல் இயக்கம் -"சமூகநீதிக்கும் ஒற்றுமைக்குமான அமைப்பு

Résultat de recherche d'images pour "may day"கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம்
-கடந்துவந்த பாதை-

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிரான
மக்கள் எழுச்சி போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வேலைத்திட்டத்தை தலைமை தாங்கி நடாத்திய ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் இஸ்மாயில் மெளலவி, செயலாளர் அல்ஹாபிழ் இஸ்ஸத் (நஹ்ஜி) மெளலவி றிஸ்வி, மெளலவி அலாவுதீன், மெளலவி றிஸ்வான் மற்றும் மெளலவி பர்ஹான் உட்பட ஏனைய ஜம்இய்யாவின் முக்கிய உருப்பினர்கள் பலருக்கும். جزاك اللهُ خيرًا அல்லாஹ்வின் அன்பும் அருளும் உன்டாவதாக.
மேலும் ஏற்பாடு மற்றும் ஓழுங்குபடுத்தல் வேலைகளில் தனிப்பட்ட வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் மிக ஆர்வத்தோடு ஆரம்பம் முதல் இறுதிவரை செயற்பட்ட Mafalil Ibnu Muthalif மற்றும் அஷ்ஷெய்க் சனூஸ் (நளீமி) ஆகியோருக்கு விஷேடமாக நன்றி சொல்ல வேண்டும். جزاك اللهُ خيرًا அவர்கள் மீது அல்லாஹ்வின் அன்பும் அருளும் உன்டாவதாக.
மேலும் Naleem Salami மற்றும் Ahamed Lebre Sameem. Ashar Ali Oddamavadi அவர்களுக்கும் விஷேடமாக நன்றி சொல்ல வேண்டும். அவர்களும் மிக உறுதியாகவும் ஆர்வத்தோடும் ஏற்பாட்டு வேலைகளில் இறுதிவரை பங்கெடுத்தார்கள். جزاك اللهُ خيرًا அவர்கள் மீது அல்லாஹ்வின் அன்பும் அருளும் உன்டாவதாக.
மேலும் மிக அழகி பெனார்களை வடிவமைத்து உதவிய சகோ.பாரிஸ் மற்றும் சகோ.இனாமுல்லாஹ் ஆகியோருக்கும் பதாதை எழுதுவதில் எவ்வித சிரமும் பாராது இரவு 12 மணியையும் தாண்டி சிறப்பாக எழுதி உதவிய Ahamed Sajjath இவர்களது செயற்பாடுகள் காத்திமானவை. جزاك اللهُ خيرًا. அவர்கள் மீது அல்லாஹ்வின் அன்பும் அருளும் உன்டாவதாக.
அத்தோடு எமது வேண்டுகோளை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உருப்பினர் யோகேஸ்வரன் M.P மற்றும் தொலைபேசி அழைப்பிலேயே வருகை தந்த வியாழேந்திரன் M.P ஆகியோருக்கும் நன்றிகள். யோகேஸ்வரன் MP யும் வியாழேந்திரன் MP யும் இத்தொழிற்சாலைக்கு எதிராக பாராளுமன்றம் வரை பேசியிருக்கிறார்கள். மதுபான உற்பத்தி சாலைக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் என்பது கவனிக்கப்படவேண்டியது.
சமூக வலைத்தலங்கலளில் இவ்விடயத்தை விளம்பரப்படுத்த உதவி சகோ.சிஹான், முர்ஸித், சாகிர், றிழா கான், சுஜான், கலீல், றிஸ்வான், மற்றும் தம்பி இஜாஸ் மற்றும் பெயர் தெரியாத இன்னும் எத்தனையோ சகோதரர்கள் உதவினார்கள் அவர்கள் அனைவருக்கும். அல்லாஹ்வின் அன்பும் அருளும் உன்டாவதாக. جزاك اللهُ خيرًا
இறுதியாக அமைப்பு ரீதியாக எமக்கு ஆதரவளித்த
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை
இலங்கை ஆசிரியர் சங்கம்
வாழைச்சேனை பெளத்த சங்கம்
ஆகியவற்றிற்கு நன்றி
ஷைபுல்லாஹ் தற்காப்பு கலை கழகம வீதி ஒழுங்குபடுத்தல் வேலையில் பெரிதும் உதவினர். ஸஹாபாக்களை நேசாப்போர் ஒன்றியம், இஸ்ரா கல்வி கலாசார நிலையம் மற்றும் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமியாவின் பல சகோதரர்கள் உதவி செய்தார்கள் அவர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உன்டாவதாக. جزاك اللهُ خيرًا
பல அரசியல் முகாம்களைச் சேர்ந்தவர்களும்
பல இயக்க பிண்ணனி கொண்டர்வர்களும்
இவை எதையுமே சாராத பொதுவானவர்களுமாக கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள ஒன்றினைந்தோம். நிறைய பேசினோம். எந்த முன் அனுபவமும் எமக்கிருக்கவில்லை. எந்த தனிப்பட் அஜந்தாவும் எமக்கிருக்கவில்லை. எங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டால் என்ன என்று நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் "சமூகநீதிக்கும் ஒற்றுமைக்குமான அமைப்பு" என தற்காலிக பெயரும் வைத்துக் கொண்டோம்.
நாங்கள் முடிவெடுத்தோம் மிகப்பாரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற வேண்டும். அதை பல்லினங்களும் இணைந்து நடாத்த வேண்டும். எல்லா மக்கள் பிரதிநிதிகளும் அதில் பங்கு கொள்ள வேண்டும். அப்படியானால் சமூக பொது அமைப்பொன்றின் தலைமையில் செய்தால்தான் சாத்தியப்படும் எனவே கல்குடா மஜ்லிஸுஸ் ஸூராவை சந்தித்தோம். ஆனால் அவர்களது நிருவாகத்திற்குள் சில பிணக்குகள் இருந்தமையினால் அவர்களால் தலைமை தாங்க முடியவில்லை.
எங்களுக்கு இருந்த அடுத்த தெரிவு கல்குடா ஜம்இய்யதுல் உலமா. அவர்களை உத்தியோக பூர்வமாக சந்தித்தோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை மனமுவந்து ஏற்றார்கள். 19.04.2017 அன்று மட்டக்களப்பில் சர்வமத ஒன்றியத்தின் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும். அதில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சார்பில் இவ்விடயம் அங்கு பேசப்பட்டு அதன் ஆலோசனை ஒன்றை பெற்றதன் பின்னர் ஏற்பாடு செய்வோம் என்று எங்களிடம் கூறினர். ஒருவாரம் காத்திருந்தோம். சர்வமத ஒன்றியத்தின் கூட்டத்தில் இவ்விடயம் பாரதூரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. கானாமல் போனோருக்கான கடையடைப்பில் முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு வழங்காமையால் அவர்கள் ஒத்துழைக்க தயங்குவதாகவும். என்றாலும் தாம் தலைமை தாங்கி நடாத்த தயார் என்றும் ஜம்இய்யா கூறியது.
எனவே ஜம்இய்யாவிலிருந்தும் எங்கள் அனியில் இருந்தும் ஒரு கொமிட்டி அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் 12 ஆம் திகதி SLTJ அமைப்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பஸாரில் பண வசூல் செய்வதாக அறிந்து எமது சமூக நீதிக்கும் ஒற்றுமைக்குமான அமைப்பினால் உத்தியோகபூர்வமாக அவர்களது நிலையத்தில் சந்தித்தோம். வாருங்கள் நாம் எல்லோரும் இணைந்து, ஏனைய சமூகங்களையும் இணைத்து வேறு ஒரு தினத்தில் பிரம்மாண்டமாக செய்வோம் என்று எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அதனை அவர்கள் மறுத்து 12 திகதியை மாற்றுவது சாத்தியமற்றது. அடுத்து நாங்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் SLTJ இனால் செய்வதாக தெளிவாக காட்டித்தான் செய்வோம். எல்லோரையும் இணைத்து பொதுவான பெயரில் செய்வதற்கு எங்களுக்கு உடண்பாடில்லை. அதுமட்டுமல்லாது நாங்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் மாற்று மதத்தார்களுக்கோ அல்லது மாற்றுக்கொள்கையுடையோர்களுக்கோ ஒலிபெருக்கியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க மாட்டோம் என்று அவர்களது தெளிவான முடிவை சொன்னார்கள். அதில் எங்களுக்கு உடண்பாடு இருக்கவில்லை. இதனை ஜம்இய்யாவிடம் கூறினோம். பின்னர் ஜம்இய்யா 19.05.2017 அன்று ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தீர்மாணித்தது. எனவே எங்கள் ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். ஆனால் திடீரென SLTJ யும் அதே தினத்தில் செய்வதாக அறிவித்தார்கள். நாங்கள் பல ஏற்பாடுகளை செய்துவிட்டிருந்தமையால் எங்களால் திகதியில் மாற்றம் செய்யும் எண்ணம் இருக்கவில்லை.
அடுத்த இனங்களை இணைத்துக்கொள்ள சர்வமதம் ஒன்றியம் கைவிட்டாலும் அரசியல் தலைவர்களினூடாக இணைக்க முயற்சிப்போம் என முடிவெடுத்தோம். ஆர்ப்பாட்டத்திற்கான செவினங்களை மூன்று பிரதான பள்ளிவாயல்களிலிருந்தும் பெற ஜம்இய்யா ஏற்பாடு செய்திருந்தது. பெனார் செலவை தனவந்தர் ஒருவரிடம் இருந்து பெற்று அதனை அச்சடித்தே தந்தார் சனூஸ் நளீமி.
அரசியல் தலைவர்கள் என்ற வகையில்
சீ.யோகேஸ்வரன், வியாழேந்திரன், அமீர் அலி முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோரை உத்தியோகபூர்வமாக அழைத்திருந்தோம். அத்தோடு பல் சமய தலைவர்களுக்கும் விளையாட்டுக்கழகங்களுக்கும் முறையாக அழைப்பு விடுத்திருந்தோம்.
அன்புடன்
ஈ.எல்.எம்.இர்ஷாத்
»»  (மேலும்)

5/19/2017

வெள்ளவத்தையில் அனர்த்தம்: 19பேர் படுகாயம்

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், 19 பேர் படுகாமயடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13பேர் களுபோவில வைத்தியசாலையிலும் ​மேலும் 6பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றே, இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. அக்கட்டடத்தின் மேலும் ஒரு பகுதி, இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், கட்டட இடிபாடு காரணமாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
»»  (மேலும்)

5/12/2017

நாட்டை வந்தடைந்தார் மோடி

சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வந்தடைந்துள்ளார். மோடி பயணித்த வி​சேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். தற்போது கொழும்பு, கங்காராமை விகாரையை நோக்கி விசேட வாகன தொடரணி மூலம் அழைத்து வரப்படுகின்றார். -
»»  (மேலும்)

5/06/2017

அம்பாரை எம் பி த‌யா க‌ம‌கே சிலை வைக்கிறார்-உல‌மா க‌ட்சி அச்ச‌மூட்டி எச்ச‌ரிக்கை செய்கிற‌து.

Image may contain: 1 person, hat, sunglasses and beardஅம்பாரை எம் பி த‌யா க‌ம‌கே சிலை வைக்கிறார், க‌ல்முனையிலிருந்து ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளை அம்பாரைக்கு கொண்டு செல்கிறார் என‌ கையாலாகாத‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ஆத‌ர‌வாள‌ர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்.
இது விட‌ய‌த்தை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் த‌ர‌ப்பில் இருந்து பார்க்கும் போது த‌யா க‌ம‌கேயின் இச்செய‌ல்க‌ள் அவ‌ரை வீர‌ராக‌ காட்டிக்கொண்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறு த‌யா க‌ம‌கே செய‌ற்ப‌டுவ‌த‌ற்கு வ‌ழி வ‌குத்த‌ முட்டாள்க‌ள் தாமே என்ப‌தை இன்ன‌மும் உண‌ராம‌ல் இருக்கிறார்க‌ள் SLMC. இதைவிட‌ மோச‌ம் என்ன‌வென்...றால் இவ‌ற்றுக்கு அடிப்ப‌டைக்கார‌ண‌மே ப‌ண‌ம் வாங்கிக்கொண்டு ஐ தே க‌வில் முஸ்லிம் காங்கிர‌சை போட்டியிட‌ வைத்த‌ ஹ‌க்கீமும் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியுமே என்ப‌தை மு. காவின் வாக்காள‌ர்க‌ள் கூட‌ இன்ன‌மும் புரிந்து கொள்ளாமையாகும்.
க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது க‌ல்முனைக்கு த‌யா க‌ம‌கே பாரிய‌ த‌ட‌புட‌ல்க‌ளுட‌ன் அழைத்து வ‌ர‌ப்ப‌ட்டு எம் ஜி ஆரின் பாட‌ல்க‌ளின் பின்ன‌ணியில் மாலையிட்டு வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்ட‌ போது, சுப‌ஹுத்தொழுகையை ப‌ள்ளியில் தொழுவோரும் அந்த‌ விழாவில் முன் ச‌ப்பில் இருந்த‌ போது ச‌மூக‌ம் த‌ன் பாட்டில் பிழையான‌ பாதையில் செல்கிற‌து என்ப‌தை உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே சுட்டிக்காட்டிய‌து. அத‌ன் பின் மூன்று பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு ஆசைப்ப‌ட்டு அத‌ற்குரிய‌ ப‌ண‌மும் வாங்க‌ப்ப‌ட்டு ஹ‌க்கீம் அம்பாறை மாவ‌ட்ட‌ முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தார். இன்று அந்த‌ மூன்று முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் த‌யா க‌ம‌கே முன்பாக‌ செல்லாக்காசாக‌ நின்று கொண்டிருக்கிறார்க‌ள்.
ஆக‌வே ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளுக்கு த‌யா க‌ம‌கேயை முஸ்லிம்க‌ள் குற்ற‌ம் சாட்டி குற்ற‌வாளிக‌ளை த‌ப்பிக்க‌ விடுவ‌தை த‌விர்த்து உண்மையான‌ குற்ற‌வாளிக‌ளான‌ ஹ‌க்கீமையும் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின‌ரையும் முஸ்லிம்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ குற்ற‌ம் சாட்ட‌ முன் வ‌ர‌ வேண்டும். இல்லாவிட்டால் இன்னுமின்னும் ப‌ல‌ இழ‌ப்புக்க‌ளை அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும் என்ப‌தை உல‌மா க‌ட்சி அச்ச‌மூட்டி எச்ச‌ரிக்கை செய்கிற‌து.
-மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி.
ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ கூட்ட‌மைப்பின் இணைக்க‌ட்சி
»»  (மேலும்)

5/05/2017

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டில் தில்லி மாணவியை பாலியல் வல்லுறவு செய்த நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண தண்டனை

அக்ஷய் தாக்கூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேருக்கும் 2013 ஆம் ஆண்டு, விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
இந்த மிருகத்தனமான கூட்டு பாலியல் வன்கொடுமை, நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தி, பெண்களின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்களை வகுக்க வழிவகுத்தது.
டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார், அவளுடைய நண்பரும் தாக்கப்பட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் ஜோதி சிங் என்று, அவர் தாயார் பகிரங்கமாக 2015 ஆம் ஆண்டில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுத்தினார்.
இந்த நான்கு நபர்கள் அல்லாமல் வேறு இரண்டு நபர்கள் 2012ல் டிசம்பர் 16 அன்று சம்பவம் நடந்த அந்த பேருந்தில் இருந்தனர் டெல்லியின் தெற்கில் உள்ள முனிர்கா பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறிய நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
அந்த பேருந்தை ஓட்டிய ராம் சிங் திகார் சிறையில் மார்ச் 2013ல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆறாவது குற்றவாளி 18 வயதுக்கும் குறைவான சிறுவன் என்பதால், சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு கால தண்டனைக்கு பிறகு டிசம்பர் 2015ல் விடுவிக்கப்பட்டார். இதற்கு பிறகு சிறுவர் குற்றவியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
தற்போது 16 மற்றும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கொடூரமான குற்றம் செய்தால் , அவர்கள் வயது வந்தவர்களாக கருதப்படலாம் என்று சட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

பிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி! வடக்கு முதல்வர் அழைப்பு-ஆமா அது நல்ல பொழைப்பு

வேலை வாய்ப்பின்றி இன்று கஷ்டத்தில் வாடும் பட்டதாரிகள் பலர் அடுத்த பிரதேசபை தேர்தலில் முன்னின்று வெல்ல வேண்டும் என தெரிவித்த வடமாRésultat de recherche d'images pour "cv vikneswaran"காண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
பட்டதாரிகளின்; அறிவு எமது பிரதேச மக்களுக்கு அத்தியாவசியம் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி மாத விழா  நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


»»  (மேலும்)

வடக்கு  மாகாணசபையின் அடுத்த சாதனை.

வட மாகாண சபையின் மற்றொரு சாதனை – மலர்ந்தது தமிழர் அரசுஅரசாங்கத்துடன் பின்கதவால் தொடர்ச்சியாக நடத்திவந்த பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிற்கு  வரியற்ற வாகன இறக்குமதிக்கான சலுகை கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதுவரை  நாடாளுமன்ற உறுப்பினர்களே வரியற்ற வாகன இறக்குமதிக்கான சலுகையை அனுபவித்து வந்திருந்த நிலையினில்  தமக்கும் வரியற்ற வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான சலுகையினை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசிற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவந்ததோடு பேச்சுக்களையும் நடத்திய நிலையில் வடக்கு  மாகாணசபை உறுப்பினர்களிற்கு இச் சலுகை கிடைத்திருக்கின்றது.
»»  (மேலும்)

5/04/2017

நூல் வெளியீட்டு விழா

தோழர் சுகு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 06.05.2017 மாலை 4.30 மணிக்கு யாழ் பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
500 பக்கங்களில் 129 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.No automatic alt text available.
»»  (மேலும்)

பெண்கள் சந்திப்பு -33-சுவிஸ்

சுமார் இருபத்தைந்து ஆண்டுகால வரலாற்று தொடராக இடம்பெற்றுவரும் புகலிட பெண்கள் சந்திப்பின் 33வது நிகழ்வு இம்முறை சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரில் நடைபெறவுள்ளது. பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு விசேட நிகழ்வாக இந்த சந்திப்பு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இலக்கியம்,பெண்ணியம்,அரசியல்,என்று பல்வேறுபட்ட ஆளுமைகளின் பங்கெடுப்புடன் இடம்பெறும் இச் சந்திப்பானது பெண்களின் உரிமைக்குரலாக ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இரு முழு நாள் அரங்காக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளில் இலங்கை இந்திய மற்றும் ஐரோப்பாவின்பல்வேறுநாடுகளில் இருந்தும் இலக்கியவாதிகள்,எழுத்தாளர்கள்,பெண்ணிய,மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.


இடம். MAXIM THEATHER ZURICH
Ausstellungstrasse 100
8005 Zurich
Switzerland
06, 07 மே 2017 திகதிகளில்
»»  (மேலும்)

5/02/2017

மட்டக்களப்பில்  இடம்பெற்ற மேதின  பேரணி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மட்டக்களப்பில்  இடம்பெற்ற மேதின  பேரணியானது வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.Image may contain: 18 people, people smiling, people standing, crowd and outdoor

  Image may contain: 10 people, people standing, crowd and outdoor  அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பாக தொழிலாளர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.Image may contain: 7 people, people standing and outdoor

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் எஸ்.யோகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம், கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மகளீர் அணி தலைவி செல்வி போன்றோரின் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் உறுப்பினர்கள், போராளிகள், ஆதரவாளர்கள்,மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.Image may contain: 1 person, outdoor

»»  (மேலும்)