9/08/2017

கொல்லப்படுவது யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது மனிதனது கடமை

மியன்மார் ரொஹிங்யாவில் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுவரும் மிக மோசமான இன அழிப்பு அட்டூழியங்களை நிறுத்தக்கோரும் அமைதிவழி ஆர்ப்பாட்ட பேரணி இன்று 2017.09.08 ஜூம்ஆ தொழுகையின் பின் மூதூரில் இடம்பெற்றது.

எமது முஸ்லீம் உம்மாவினது ஒரு அங்கத்தவர்களாகிய ரொஹிங்கிய முஸ்லிம்கள் இஸ்லாமியவாதிகள் என்ற ஒரே காரணத்திற்காகப் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்படும், தீயில் எரிக்கப்பட்டும், பெண்களினது கட்பு சூறையாடப்பட்டும் வருகிறது இவ்வாறு அந்நாட்டு அரசாங்கத்தினது அனுமதியோடு அரச படைகளும், பயங்கரவாதிகளும் இணைந்து எமது சமூகத்தை இனச்சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்

இதனால் உயிர்வாழ முடியாது தங்கள் சொத்து  சொத்து , உடைமைகளை இழந்து பல இலட்ச மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்

எனவே இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை உடனடியாக நிறுத்தக்கோரியும், அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகளை நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், அம்மக்களினது பாதுகாப்புக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமான அமைதிவழி பேரணி ஒன்று இன்று 2017.09.08 ஜூம்ஆத் தொழுகையின் பின் மூதூரில் இடம்பெற்றது. 

0 commentaires :

Post a Comment