9/14/2017

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் -சிறு விளக்கம்

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் -சிறு விளக்கம் Résultat de recherche d'images pour "20 "

அதுவென்ன இருபதாவது திருத்தம்? ஏற்கனவே உள்ள அரசியலமைப்பின் படி (மாகாணசபைகள் உருவாக்கப்படுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அதாவது 13 திருத்தத்தின் படி) மாகாண சபைகளுக்காக தேர்தல்பற்றிய விபரங்கள் 154 ஈ என்னும் பிரிவில் விபரமாக உள்ளன . தற்போது உருவாக்கப்படுகின்ற இருபதாவது திருத்தம் இந்த 154 ஈ என்னும் பிரிவில் மாற்றத்தை கொண்டு வருகின்றது.அதாவது தேர்தல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வருகின்றது.

அதன்படி 154 ஈ ஈ என்னும் புதிய உப சரத்து இணைக்கப்படுகின்றது.
இதுதான் இருபதாவது திருத்தம் என அழைக்கப்படுகின்றது. அதன்படி அந்த திருத்தமானது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பின்போடுவதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு வழங்குகின்றது. இது மாகாண சபை முறைமையின் இறைமையை கேள்விக்குட்படுத்துவதோடு அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு தாரை வார்க்கின்றது.

அந்த திருத்தம் என்னவென்றால் எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கப்பட வேண்டும் என்றும்  அதற்காக ஏலவே ஆட்சிக்காலம் முடிகின்ற தறுவாயிலுள்ள சபைகள் ஏனைய சபைகளின் ஆட்சிக்காலம் முடியும் வரை தேர்தலின்றி நீடிக்கப்படவேண்டும் எனவும் கூறுகின்றது. அதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு இந்த திருத்தம் வழங்குகின்றது. ஆனால் இறுதியாக ஆட்சிக்காலம்  முடிகின்ற சபையின் ஆயுளுக்கு பின்னரான திகதிக்கு இந்த எல்லா சபைகளுக்குமான தேர்தலுக்கான நீடிப்பை பாராளுமன்றம் செய்ய முடியாது.

அதேபோன்று 154 உ என்கின்ற பிரிவில் மிக ஆபத்தான சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. 154 உ என்கின்ற இந்த பிரிவில் புகுத்தப்படும் 154 உ உ என்கின்ற சரத்து கீழ்வருமாறு சொல்லுகின்றது. (உ+ம் அதாவது அவசர அல்லது திடீர்,மற்றும் ஊழல் காரணங்களால் ஜனாதிபதி மாகாண சபைகளை கலைக்கின்ற வேளைகளில் )  சட்டத்தின் படி(154ஆ /8/உ) குறித்துரைக்கப்பட்ட காரணங்களால்  மாகாண சபைகள் இடைநடுவில் கலைக்கப்பட்டு நேர்ந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை இந்த திருத்தம் தடுக்கின்றது. அதாவது ஏனைய அனைத்து மாகாண சபைகளின் ஆயுள் காலம் முடிந்து எல்லா சபைகளுக்குமான பொதுவான தேர்தல் வரும்வரை அந்த மாகாண சபையின் அதிகாரங்களை செயற்படுத்தல் சம்பந்தமாக பாராளுமன்றத்துக்கு முழு அதிகாரத்தை இந்த திருத்தம் வழங்குகின்றது.

இது போன்ற வேளைகளில்  மாகாண சபைகளின் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு தாரை வார்க்கப்படுகின்றது. அதாவது மாகாணசபைகளுக்குரிய அதிகாரப்பட்டியல்,இணைப்பு அதிகாரப்பட்டியல்,மத்திய அரசுக்கான அதிகாரப்பட்டியல்  என்கின்ற வேறுபாடின்றி அனைத்து அதிகாரங்களிலும் இந்த இடைக்காலத்தில் மத்திய அரசாங்கம் தலையிட்டு செயல்பட கூடியதாக இந்த திருத்தங்கள் அமைந்துள்ளன. அதன்படி 154 ஒள,154 க போன்ற பிரிவுகளில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் திருத்தங்கள் செய்யப்படுகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சிங்களம் என்பன அரச கருமை மொழியாக இருக்கின்ற நாட்டில் இந்த இருபதாவது சட்ட திருத்தத்தில் தமிழில் உருவாக்கப்படப்போகின்ற யாப்பில் ஏதாவது சட்ட பிரச்சனைகள் உருவாகின்ற  போது பொது மொழியான ஆங்கிலம் அன்றி சிங்கள மொழியின் பிரதியே உத்தியோக பூர்வமானதாக நீதிமன்றத்தால் கொள்ளப்பட வேண்டும். என்பதையும் இருபதாவது திருத்தத்தின் 5வது பிரிவு கூறுகின்றது.

           
 

0 commentaires :

Post a Comment