9/23/2017

ஒளிப்படக் கலைஞருக்கான விருது

L’image contient peut-être : 1 personne, appareil_photo et plein airஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் இன்று வட மாகாணசபையினால் சிறந்த ஒளிப்படக் கலைஞருக்கான விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். விருதினைப் பெற்ற தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்துகள்.

தகுதியானவருக்குக் கிடைத்த விருது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஊடகத்துறையிலும் ஒளிப்படத்துறையிலும் பலருடைய கவனத்தையும் கோரும் விதமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் தமிழ்ச்செல்வன். இதற்காகத் தமிழ்ச்செல்வன் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் ஏராளம். அதிகார அமைப்புகளையும் அதிகாரத் தோரணையுடன் நட...க்கும் தலைவர்களையும் நோக்கிக் குரல் உயர்த்தும் ஊடகவியலாளருக்கு எப்போதும் நெருக்கடிகள் இருக்கும். தமிழ்ச்செல்வன் எல்லாத் தரப்பையும் காய்தல் உவத்தலின்றிக் கேள்விக்குட்படுத்தும் துணிச்சல் மிக்கவர். எவரையும் தயவு தாட்சண்யமில்லாமல் விமர்சிப்பார். இவ்வாறு செயற்பட்டதன் மூலமாகப் பலரிடமும் கூடிய கவனத்தைப் பெற்றவர். சிலரிடம் எதிர்ப்பையும் முகச்சுழிப்பையும் எதிர்கொண்டவர். கடந்த 10 ஆண்டுகளில் மிகக் கூடிய கவனத்தைப் பெற்ற தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரில் தமிழ்ச்செல்வன் ஒருவர்.
தமிழ்ச்செல்வனுடைய திறமைகளும் ஆற்றலும் சமூகம் மீதான கவனமுமே அவரை இந்த உயர்வுக்கும் அடையாளத்துக்கும் கொண்டு வந்தன. இன்று ஊடகத்துறையில் இயங்குவோரில் பலர் கேள்வி கேட்பதையும் விமர்சனங்களை முன்வைப்பதையும் மறந்து விட்டனர். பதிலாக அவர்கள் தங்கள் விருப்பத்துக்குரியவர்களுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக தங்களுக்கான வாலை வளர்ப்பதைப் பற்றியே ஓயாமல் சிந்திக்கிறார்கள். தமிழ்ச்செல்வனின் பலம் அவர் முன்னிறுத்தும் கேள்விகளும் எழுப்பும் விமர்சனங்களுமே. மக்களின் நிலை நின்று இதைச் செய்கிறார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் தமிழ்ச்செல்வனிடம் அவசரத்தன்மையும் நிதானக்குறைவும் உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும். இதைப்பற்றி அவரிடமே நேரில் சொல்லியிருக்கிறேன்.சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதை நியாயப்படுத்தாமல், உதாசீனப்படுத்தாமல் அவர் கவனித்துப் பரிசீலித்துள்ளார். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்குள்ளது . இது அவருடைய இன்னொரு சிறப்பு. நியாயப்படுத்துவதை விட நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த பண்பு மதிப்பிற்குரியதல்லவா. இத்தகைய அடிப்படைகளே தமிழ்ச்செல்வனைச் சிகரத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றன. அவர் செல்லவேண்டிய இலக்குகள் ஏராளமுண்டு. எல்லாம் வெற்றியடைய வாழ்த்துகள்.
ஊடகவியலாளராக இருக்கும் ஒளிப்படக் கலைஞரின் தெரிவுகளும் கோணங்களும் எப்போதும் வித்தியாசமாக இருக்கும். இந்த வேறுபடுதலே சிறந்த ஊடகவியலாளராகவும் அவரை மேலுயர்த்தும். தமிழ்ச்செல்வன் அண்மைக்காலத்தில் பல முக்கியமான ஒளிப்படங்களை எடுத்துள்ளார். அவற்றில் பல சர்வதேச அளவில் கவனம் பெறத்தக்கவை. அவற்றை வெளிப்பரப்பிற்கு எடுத்துச் செல்வதற்கு அக்கறையுள்ளவர்கள் உதவ வேணும். தனியே தன்னுடைய முயற்சியில் அவற்றைப் பொதுப்பரப்பிற்குக் கொண்டு செல்லக்கூடிய தொடர்பாடல் பலமும் நிதி வளமும் தற்போது அவரிடம் இல்லை. நல்ல சிந்தனையுடையவர்கள் இதற்கு வழியைத் திறந்தால் உலகத்தின் முன்னே இன்னொரு அடையாளம் துலக்கமடையும்.
நன்றி முகநூல் *கருணாகரன்

0 commentaires :

Post a Comment