10/12/2017

சக மனிதர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகிறார்கள்

என்ன பேராசைகள்--விஜய பாஸ்கர்  Résultat de recherche d'images pour "north sri lanka"
------------------------
தமிழ் ஈழம் போய் வடக்கும் கிழக்கும் வேண்டும்.புதிய அரசியல் போராட்டம்.ஒவ்வொரு தடவைகளிலும் ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி இன முரண்பாடுகளை வளர்க்கிறார்கள்.
இனம் இனம் என்று கத்தும் இவர்கள் தமிழினத்துக்கு என்ன செய்தார்கள்? 1948 இல் இருந்து இன்றுவரை பகைகளை உருவாக்குவதே தமிழர்களின் அரசியலாகவுள்ளது.ஏதோ ஒரு வகையில் நல்லதைச் செய்பவன் எல்லாம் துரோகிகள் என மக்களை நம்பவைத்து விடுகின்றனர்.நல்ல விசயங்களை புறக்கணிக்கின்றனர்.
1956 பண்டா செல்வா ஒப்பந்தம் தொடங்கி சந்திரிகா வரை நல்ல தீர்வுக்கான சந்தர்பங்கள் கிடைத்தன.எல்லாமே தவறிப்போய் விட்டன.
தமிழர் அரசியல் என்பது யாழ் குடாநாட்டு வெள்ளாளரின் மையப் புள்ளியாகவே உள்ளது.இவர்களின் ஆசைகளே தமிழர் பிரச்சினைகளாக திரிபு படுத்தப்படுகின்றன.

1800 களின் தொடக்கத்தில் மூன்று வீதமாக இருந்த வெள்ளாளர்கள் எப்படி பெரும்பான்மை சமூகமாக மாறியது? வடமாகாணத்தில் எண்பதுவீதமான நிலங்கள் அவர்களுக்கே சொந்தம்.இது எப்படி?புதிதாக உருவான சகல குடியேற்ற திட்டங்களில் முழு நிலமும் வெள்ளாளருக்கு வழங்கப்பட்டது.இங்கே நிலமற்று வாழும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு வீதம் கூட வழங்கப்படவில்லை.மன்னார் தவிர்ந்த வன்னி நிலப்பரப்பில் எங்காவது இஸ்லாமியர்களுக்கு நிலம் இருக்கிறதா? வழங்கப்பட்டதா?
திருகோணமலை கந்தளாய் குடியேற்ற திட்டத்திலும் காணிகளைப் பெற்றார்கள்.தம்பலகாமத்தில் வாழும் பெரும்பான்மையோர் யாழ்ப்பாண வெள்ளாளர்களே.அம்பாறை கல்லோயா திட்டத்திலும் வடக்கே வாழும் வெள்ளாளருக்கு காணிகள் உண்டு.மட்டக்களப்பிலும் அப்படித்தான்.இராதுரைகூட யாழ்ப்பாண தமிழரே.புலிகளின் தளபதி குமரப்பா,புலேந்திரன் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்களே.
சிங்கள குடியேற்றம்,இஸ்லாமிய குடியேற்றம் என புலம்புவோர்கள் இவற்றைக் கவனிப்பது இல்லை.அரசாங்க பதவிகள் அத்தனையையும் சுருட்டி வைத்திருக்கிறார்கள்.ஆனால் தரப்படுத்தலை எதிர்க்கிறார்கள் .
சக மனிதர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகிறார்கள்.இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
1948 தொடங்கி இன்றுவரை தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முயலவில்லை.அது சாதியாக,மதமாக,பிரதேசமாக பிரிந்தே உள்ளது.முரண்பாடுகளை பூசி மெழுகி தமிழ் தேசியம் என்றால் எப்படி நம்புவது?அரசியல பதவி கொடுத்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
வடக்கும் கிழக்கும் இணைவதா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும்.தமிழர்கள் தொடர்பில் இஸ்லாமிய தமிழர்களின் அச்சம் நியாயமானதே.
வடக்கு அரசியல்வாதிகளும் மக்களும் எந்த தவறுகளையும் ஒத்துக் கொண்டதில்லை.நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டதும் இல்லை.அதை நிவர்த்தி செய்ய முயன்றதும் இல்லை.
அற்ப பதவிகளுக்காக தமது உரிமைகளை கிழக்கு மாகாண மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.ஒரு சிறுபான்மை வெள்ளாள சமூகத்தின் பேராசைக்காக கிழக்கை வடக்கோடு இணைக்க முடியாது.இஸ்லாமிய மக்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடம் தேவை.அது கிழக்கு மட்டுமே.
தமிழின் பெயரால் சிறுபான்மையான வெள்ளாள சமூகம் வடக்கையும் கிழக்கையும் ஆள்வதை அனுமதிக்க முடியாது.வட கிழக்கு என்பது யாழ்பாண வெள்ளாளரின் பேராசை.இவர்களின் பேராசையும் பிடிவாதமும் கிடைப்பதையும் மீண்டும் கிடைக்காமல் செய்யலாம்.

நன்றி *Vijaya Baskaran -முகநூல்

0 commentaires :

Post a Comment