10/22/2017

புதிய பெயர் --சீன உதவி

புதிய பெயர் மகிந்த ஆட்சியில் சீன ஆக்கிரமிப்பு  என்பது நல்லாட்சியில் சீன உதவி என மாற்றப்பட்டுள்ளது
Résultat de recherche d'images pour "autoroute vide"


நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளை சீன நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டுள்ளமை நகைப்பிற்குரிய எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல, விஜயசிறிபுர பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கைதானவர்களின் வீடுகளுக்குச் சென்று திரும்பியபோது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை அரசாங்கம் சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்குவிட தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

கிழக்காசிய நாடுகளில் பெரும்பாலும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைகளை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி கிடைப்பதுடன் வீதி பராமரிப்பு, நிர்வாக செலவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் கையாளும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment