11/23/2017

ஐக்கிய தேசிய கட்சியில் அமல் எம்பி ?

(இப்படியொரு செய்தியை தமிழ் நியூஸ் டொட் கொம் என்னும் தளம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக தகவல்களையோ மறுப்புக்களையோ
Résultat de recherche d'images pour "UNP"  சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க முன்வந்தால் அதனை நாம் பிரசுரிக்க தயாராகவுள்ளோம்.ஆ-ர் )

Résultat de recherche d'images pour "அமல் எம்பி ?"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் அமைப்பிற்கு கிழக்கு மாகாணத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனத்திற்கான வேட்பாளராக களமிறக்கப்பட்ட சதாசிவம் வியாழேந்திரன் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி நகர்வதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ள நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.
கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம்வகிப்பதால் மக்களுக்கு எதனையும் செய்ய முடிவில்லை.

அதேநேரம் கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதால் அரசாங்கத்தினை எதிர்த்தும்
செயற்பட முடியவில்லை.
இவ்வாறு இரண்டும் கெட்ட நிலைமை நீடிப்பதால் தன்னால் அடுத்த முறை பாராளுமன்றத்திற்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டு விடும்.
ஆகவே தான் ஏதாவது ஒரு முடிவினை
எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாக தனக்கு நெருங்கியவர்களிடத்தில் அண்மைக்காலமாக
தெரிவித்து வருகின்றார் வியாழேந்திரன்.
அவ்வாறான நிலையில் தான் தற்போது இரகசியமாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருடன்
முதற்கட்டச் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.
எனினும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவர் பிரதமர் ரணிலுடன் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான சுமந்திரன் எம்.பி,
நெருங்கிச் செயற்படுவதால் அவர் தடையை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் வியாழேந்திரனுக்கு ஏற்பட்டள்ளது.
எனினும் வியாழேந்திரனின் இரகசிய சந்திப்பு விவகாரம் தற்போதைய தலைமை உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியவந்துள்ளதால் தற்போது கட்சிக்குள் இவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒரு குறிப்பிட்டுள்ளார்
»»  (மேலும்)

11/21/2017

பதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார்.ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா
இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது என முகாபே அக் கடிதத்தில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
முகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கிய நிலையில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வந்துள்ளது. இதனால், முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவிநீக்க நடவடிக்கை இதனால் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியபிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்தார்.
ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அதிபராக இருந்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு துணை அதிபர் எமர்சன் முனங்காக்வாவை முகாபே பதவி நீக்கியதில் இருந்தே அவருக்கு எதிராகப் பிரச்சினை தலையெடுத்தது.
»»  (மேலும்)

11/17/2017

தமிழ்த்தேசிய இரத்தமும் , தக்காளிச்சட்னியும்!

தமிழ்த்தேசிய இரத்தமும் , தக்காளிச்சட்னியும்! - தோழர் ஜீவமுரளி
Résultat de recherche d'images pour "சிவனேசத்துரை சந்திரகாந்தனை"L’image contient peut-être : 1 personne
நீதியரசர் கௌரவ விக்னேஸ்வரன் என்று அழைப்பதற்கும், கிழக்கின் முதலமைச்சராக இருந்த சிவனேசத்துரை சந்திரகாந்தனை , சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்று பெயர் சொல்லி , ஊடகங்களோ சரி, நபர்களோ சரி அழைக்க முடியாமைக்குமான காரணம்,அரசியல் பின்னணி அல்லது உளவியல் பின்னணி என்பது யாழ் மைய வாத சிந்தனைத் புலத்தில் இருந்தே வருகின்றது என்பதாகும் .

அதுவே சிவ சந்திரகாந்தனை, பிள்ளையான் என்று அழைக்க வைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் சிவ.சந்திரகாந்தனை இன்றைய சூழலில் "பிள்ளையான்" என்று அழைப்பதற்குரிய காரணம் அடிப்படையிலேயே தமிழ் தேசிய பற்றுதியின் பெயரால் நடந்த அரசியல் பழிவாங்கல் தான். இன்னும் அடிப்டையான விடயம் இரண்டு பெயர்களுக்கு பின்னால் உள்ள வர்க்க உளவியல்.

மாறாக "வேட்கை" அட்டைப் படத்தில் பிள்ளையான் என்று குறிப்பிட்டு, அடைப்புக்குறிக்குள் சிவ சந்திரகாந்தன் என காட்டப்பட்டிருப்பது. யாழ்மையவாத அரசியலுக்கு எதிரான குறியீட்டு அரசியல் அறிக்கை என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

விடுதலை புலிகள் இயக்கத்தில் செல்லப்பெயராவும், புனை பெயராகவும் இருந்த பிள்ளையான் என்ற  சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்தான் அந்தப்பெயரை துரோகத்தின் குறியீடாக , இழிவின் குறியீடாகவும் தமிழ் தேசிய அரசியல் மாற்றியமைத்தது. சிவ சந்திரகாந்தன் மீதான அரசியல் பழிவாங்கல் இப்படித்தான் ஆரம்பமாகியது. அதற்கு யாழ் மையாவாத கருத்தியல் ஒட்டு மொத்தமாக ஒப்புதல் அளித்தது என்றே சொல்லவேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்ற விடாப்பிடியான தமிழ் தேசிய சர்வதிகாரத்துக்கு எதிராக உருவாகிய மட்டக்களப்பு தேசியம் தான் சந்திரகாந்தன் மீதான அரசியல் பழிவாங்கலை விரைவு படுத்தியது
ஜோசப் பராராஜசிங்கம்கொலை , ரவிராஜ் கொலை இதன் பொருட்டே சிவ சந்திரகாந்தன் இன்று சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்பது இலங்கையின் குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டு நடந்திருந்தாலும் அதன் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பழிவாங்கல் உள்ளது என்பதே எனது வாதம்.

அதன் நேரடி சூத்திரதாரிகளாக இரா.சம்மந்தனும் சுமந்திரனும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. சிவ.சந்திரகாந்தனுக்கும் , இரா.சம்மந்தனுக்கும் நடந்த முறுகல் நிலைக்கு பின்னேதான் அது இலகுவாக சாத்தியமாகியது . அதை இலங்கையின் நீதித்துறை இந்த இருவருக்குமாக செய்து கொடுத்தது. . அதாவது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்காக, யாழ்மாயவாத அரசியலை இடைஞ்சல் இன்றி இனிதே செய்வதற்காக சாத்தியமாகியது .

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேம்ச்சந்திரன் , செல்வம் அடைக்கலநாதன். மற்றும் டக்லஸ் தேவானந்தா இவர்களுக்கு கூட கொலைப்பின்னணி இருக்கின்றது. இருப்பினும் அவர்கள் இன்னும் குற்றவாளிகளாக இலங்கையின் குற்றவியல் சட்டத்தால் இனங்காணப்படவில்லை. காரணம் இவர்களும் தமிழ் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஒத்த கருத்து உள்ளவர்களாக இருப்பதுதான்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்,தமிழ் கட்சி வரலாற்றிலேயே தோன்றிய முதலாவது பிராந்தியக்கட்சி என்று தோழர் சோபாசக்தி, பாரிசில் நடந்த வேட்கை நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டு பேசியது என்னை யோசிக்க வைத்தது. பிள்ளையானின் கட்சி பிராந்தியக்கட்சியாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை தேசியக்கட்சியாகவும் இனங்காண்பது கூட ஒரு அரசியல் பழிவாங்கல் போல என்னை உணர வைத்தது.

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் கொலைக்குற்ற பின்னணிக்கு அப்பால் கிழக்கு மக்களின் மீதான யாழ்மைய வாத்தின் வெறுப்பு அரசியலே இந்த பிள்ளையான் என்ற குறியீட்டை கிழக்கின் மீதான ஆதிக்கம் செலுத்துவதற்கு பாவித்து வருகின்றது. மாறாக கிழக்கு மக்களிடம், சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்பது , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் என்றளவிலே தான் வினையாற்றுகின்றது.

யாழ் மையவாத அரசியலுக்கு எதிராக தொடர்ந்து உரையாடுவோம்.

நன்றி முகநூல்
»»  (மேலும்)

11/15/2017

எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ). காலமானார்

சிரேஸ்ட பத்திரிகை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ). மட்டக்களப்பில் இன்றையத்தினம் (15.11.2017) காலை காலமானார்.
L’image contient peut-être : 1 personneமட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.
»»  (மேலும்)

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
ராபர்ட் முகாபே
'' சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை'' உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.
தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்த மேஜர் ஜெனரல், இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என கூறினார். மேலும், முகாபே பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.
நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன.
இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.
»»  (மேலும்)

11/13/2017

பாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள் கைது.

பாரிஸ் நகரில் வேட்கை   நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள்  கைது.
L’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieurL’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieurபிரான்ஸ் பாரிஸ் நகரில் நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்ற  வேட்கை நூல் வெளியீட்டு நிகழ்வில் புகுந்த   ஒரு குழுவினர்  வன்முறையிலீடுபட்டுள்ளனர். 

 முன்னாள் போராளியும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான  சிவ. சந்திரகாந்தன் பிள்ளையான் எழுதிய "வேட்கை " என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எக்ஸில் வெளியீட்டகம் சார்பில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றபோது முன்னாள் புலிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு குழுவினரால் மேற்படி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நிகழ்வு ஆரம்பவதற்கு முன்பே மண்டப வாசலில் வைத்து நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களை  மிரட்டியும் தூஷண வார்த்தைகளால் திட்டியும் கொண்டிருந்த அக்குழுவினர் இறுதியில் நிகழ்வுகள்  ஆரம்பமாவதை தடுக்கும் நோக்கில் மண்டபத்துக்குள் நுழைந்து குழப்பம்விளைவித்தனர்.

இறுதியாக ஒருதொகுதி புத்தகங்களை பறித்தெடுத்து சென்ற அந்த வன்முறை குழுவினரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

பாலமுரளி  பாலசிங்கம்,சசிகுமார் பரம்சோதி,பாலகிருஷ்ணன் கஜன் என்கின்ற மூவர் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அத்தனை குழப்பங்களுக்கும் பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன. எழுத்தாளர்கள் சோபா சக்தி, அசுரர போன்றோரின் அறிமுக விமர்சன உரைகளும்  கவிஞர் அருந்ததியின் தலைமையுரையும் நிகழ்வுகளுக்கு மெருகூட்டின.


»»  (மேலும்)

11/11/2017

மக்கள் விடுதலை முன்னணியின்  முன்னுதாரணம்

Résultat de recherche d'images pour "மக்கள் விடுதலை முன்னணியின்" மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 06 ஆகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தல் பட்டியலில் அதி சிறந்த 15 பேரின் பட்டியலில் இந்த 06 உறுப்பினர்களும் அடங்குகின்றனர். முதல் 10 உறுப்பினர்களின் பட்டியலில் 05 ம.வி.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


01. தோழர் அனுர குமார திசாநாயக்க
03. தோழர் பிமல் ரத்னாயக்க
04. தோழர் சுனில் ஹந்துநெத்தி
05. தோழர் நலிந்த ஜயதிஸ்ஸ...
10. தோழர் விஜித ஹேரத்
15. தோழர் நிஹால் கலப்பத்தி


குறித்த தரப்படுத்தலானது www.manthri.lk எனும் இணையத்தளத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரவு, பங்கெடுத்த விவாதங்களின் தன்மை, விவாதித்த நேரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாகும்.


குறித்த பட்டியலில் த.தே.கூ பா உ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் 19வது இடத்திலும், ஸ்ரீ.ல.மு.க தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் 25வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

11/07/2017

"வேட்கை " வெளியீட்டு நிகழ்வு -பிரான்ஸ்

சிவ. சந்திரகாந்தன் (பிள்ளையான்)  எழுதிய "வேட்கை " என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்  இடம்பெறவுள்ளது. 

இந்த  நூலினை  எக்ஸில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் நிஷ்டை,யுத்தத்தின் இரண்டாம் பாகம், மட்டக்களப்பு தமிழகம், தமிழீழ புரட்டு போன்ற நூல்களை எக்ஸில்  பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  எதிர்வரும் ஞாயிறு (12/11/2017) மாலை 4.30 மணிக்கு   இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
»»  (மேலும்)

உள்ளூராட்சி தேர்தல்! என்னவாகும்?-அஜீவன்

Photo de profil de Ajeevan Veer, L’image contient peut-être : 1 personne, gros planஉள்ளூராட்சி தேர்தல்! என்னவாகும்?-அஜீவன்


உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் தாமரை மொட்டு தனியாக களமிறங்குகிறது எனச் செய்தி வருகிறது.
அதனால் மைத்ரியின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகவே போட்டியிட வேண்டிய நிலை.
கடந்த சில காலமாக மகிந்த , மைத்ரி இடையே நடந்த சமரச முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதனால் மைத்ரியின் எண்ணங்கள் நிலை குலைந்துள்ளன.
அதேவேளை இரட்டை குடியுரிமை பிரச்சனையால் , பலர் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். ஏனைய கட்சிகளில் இருப்போரும் முணுமுணுக்கிறார்கள்.
19வது திருத்தச் சட்டத்தில் இரட்டைக் குடியுரிமையுள்ளோர் எவரும் அரசியலில் ஈடுபட முடியாது எனும் சட்டத்தை நல்லாட்சி கொண்டு வந்தது. அதை யாரும் பெரிது படுத்தவில்லை. இவங்க என்ன தேடியா பிடிக்கப் போறாங்க எனும் அசமந்தம். ஆனால் இனி கறுப்பு விடாது.
அண்மைய இரட்டைக் குடியுரிமையுள்ளோர் எவரும் அரசியலில் ஈடுபட முடியாது எனும் வழக்கின் தீர்ப்பினால் மகிந்த தரப்பு கீதா குமாரசிங்க பதவி இழந்துள்ளார். அதனால் மகிந்தவின் சகோதரர்களான பசில் மற்றும் கோட்டாபய ஆகியோரும் கூட அரசியலில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் பசில் , இனவாதமில்லா அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பசிலோடுதான் மகிந்த இருக்கிறார். இனவாதம் வெற்றி தராது என்பதை மகிந்த உணர்ந்துள்ளார். அமைதியாக பலர் இருந்தாலும், விசில் அடிப்பவர் குரல்தான் உச்சமாக கேட்கும். அதனால் எல்லோரும் விசலடிக்கிறார்கள் என அர்த்தமல்ல. அதுபோலத்தான் இனவாதிகளின் குரலும்!
கோட்டாபய இனவாத அரசியலை வியத்மக எனும் பெயரில் , முன்னெடுத்து அரசியல் கட்சி ஒன்றை தனித்து உருவாக்கி பலப்படுத்த முயன்றார். அவருக்கு பக்க பலமாக, வன்னியை மீட்டவர்களில் ஒருவரான கமல் குணரத்ணவும் , அவரோடு இணைந்தார். கமலின் வருகை ஆக்ரோசமாக பார்க்கப்பட்டது. ஆனால் கமல் குணரத்ண பேசிய இனவாத பேச்சை சிங்கள மக்கள் , எதிர்க்கவும் , பகிரங்கமாக விமர்சிக்கவும், தொடங்கினார்கள். இது யாரும் எதிர்பாராத ஒன்றுதான். மக்களின் எதிர்வினை விமர்சனங்களின் பின் , கோட்டாபய , அடுத்தடுத்து நடந்த வியத்மக நிகழ்ச்சிகளுக்கு போவதையே தவிர்த்து விட்டார். இதற்குள் இரட்டை குடியுரிமை பிரச்சனை வேறு வந்து தடுமாற வைத்து விட்டது.
இன்றைய நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்துள்ள பிரிவுகள் , எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டால் , மகிந்தவின் மொட்டுக்கே வெற்றி பெற, அதிக வாய்ப்புகள் உண்டு. மகிந்த காலத்தில் , உள்ளூராட்சிகள் மகிந்தவின் ஆதரவாளர்களாகத்தான் நிறைந்து இருந்தன. எனவே அவர்களில் எத்தனை வீதம் மைத்ரிக்கு ஆதரவாக மாறுவார்கள் என இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் சிங்கள கிராம மக்களின் தலைவன் மகிந்ததான். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என நினைப்போர் நிலைதான் கேள்விக் குறியாக உள்ளது.
அதிபர் தேர்தலில் மைத்ரியின் , வெற்றிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் கை கொடுக்கவில்லை. மைத்ரி வெல்வதற்கு , பெரும்பாலும் ஐதேக மற்றும் தமிழ் - இஸ்லாமிய - மலையக வாக்குகளே காரணமாயின.
இதுவரை காலமும் , இலங்கை அரசியலில், கட்சி தலைவராக ஆகி இருந்த ஒருவர்தான், இலங்கையின் அதிபராகி உள்ளார்கள். அப்படியில்லாமல் , முகம் தெரியாமல் இருந்த ஒருவர் , அதிபராகியது , எவரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். சிவனே என உட்கார்ந்திருந்த ஒருவரை, சிவனாக்கியதற்கு ஒப்பானது.
மைத்திரியை அரச நாற்காலியில் உட்கார வைத்த, பெரும்பான்மையினர் அவரது கட்சிக்காரர்கள் அல்ல. ஆனால் , பொது அபேட்சகராக வெற்றி பெற்றவர் , அனைவருக்கும் பொதுவானவராக இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து வழுகி , தன்னால் அநாதையான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, தனது தலைமையில், கட்டி எழுப்ப வேண்டும் என செயல்பட முனையப் போய் பெரும் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே, ரகசியமாக மகிந்த தரப்பில் சிலரோடு ஆலோசனை நடத்தினார். தன்னால் சிதைக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை , கட்டி எழுப்பி விட்டு, பதவி துறந்து செல்ல வேண்டும் என மைத்ரி நினைக்கிறார். அதனால் அதிபர் முறையை ஒழிக்க, இப்போது அவர் விரும்பவில்லை. பலம் இருந்தால்தான் தான் நினைப்பதை நிறைவேற்ற முடியும்.
ஆனால் அவரோடு பலமானவர்கள் இருக்க வேண்டுமே? தவிர விதி விலக்காக இருப்பது மகிந்தவோடு இருக்கும் கூட்டு எதிர்க் கட்சி அணியாகும்.இங்கு நடக்கும் விடயங்கள், மகிந்தவும் , மைத்ரியும் விடாக் கண்டன் , கொடாக் கண்டன் டைப்பில் செயல்படுவதைக் காட்டுகிறது .
இந்நிலையில்தான் உள்ளூராட்சி தேர்தல் வந்து விட்டது. இங்கே எல்லோரும் எப்படி, தத் தமது தரப்புகளில் வெல்வது என வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
மகிந்த தரப்பு, பசிலால் எவரையும் வளைத்து போட முடியும். பசில், பேசி அல்லது பணம் கொடுத்து எவரையும் ஈர்த்துவிடுவார். மகிந்த காலத்தில், அவரால் நியமிக்கப்பட்டோரே பெரும்பாலும் உள்ளூராட்சி பதவிகளில் இருந்தார்கள். உள்ளூராட்சி மட்டுமல்ல , இலங்கையின் அனைத்து இடங்களிலும்!
இலங்கை முழுவதும் நடந்த பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் அனைத்துமே , பசிலின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தன. அதன் பின்னால் நூலிழை போல இருந்தது கமிசன் வியாபாரம். தமது பகுதி முன்னேற்றம் அடைவதை பார்த்து , மக்கள் மகிழும் போது , அதில் ஈடுபட்டோர் கமிசன் அடித்து மகிழ்ந்தனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு சில வீதங்கள் கிடைத்ததில், கட்சியிலிருந்த அனைவருமே மகிழ்ந்தார்கள். அப்படி இருந்தோருக்கு இப்போது வறுமை. பசியோடு நிற்போரால், பசில் சார்பு மகிந்தவின் மொட்டு பலம் பெற வைக்கப்படும் என அதிகமானோர் நம்புகிறார்கள். தீயாக இறங்கி வேலை செய்வார்கள் என கணக்கு போடுகிறார்கள்.
ஆனால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ,
பாராளுமன்றத்தில் இருக்கும் யாராவது , மகிந்த பக்கம் போனால் , அவர்களை கட்சியை விட்டு நீக்க மைத்ரிக்கு அதிகாரம் உண்டு. அப்படி நீக்கப்படுவோரின் , பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இல்லாமல் போகும். இது மண்டையை காய வைக்கும் விடயம்.
இங்குதான் பலர் ஆப்பிழுத்த குரங்கு நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். கட்சியா? தலைவனா? கொள்கையா? நியாயமா? என்பதை விரைவில் நம்மால் பார்க்க முடியும்.
இதற்குள் மொட்டில் ஒரு பிரிவினர் , பிரிந்து செல்லப் போவதாக வேறு செய்திகள் கசிந்துள்ளன. இதன் பின்னணி பதவி இழந்து விடுவோமோ அல்லது பழைய சிக்கல்களில் மாட்டி விடுவோமோ எனும் அச்சம்தான்.
இப்படியானாலும் , மகிந்த - மைத்ரி போட்டியில் அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு மகிந்தவுக்கே உண்டு என சொல்லலாம். காரணம் மைத்ரியோடு சேர்ந்து பதவியை தக்க வைத்துக் கொண்டு, மைத்ரிக்கு பலர் ஆப்பும் வைக்கலாம்.
பொதுவாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் , சிங்களப் பகுதிகளில் ஐதேக , அதிக இடங்களைப் பெறும். காரணம் ஐதேகவின் வாக்கு வங்கி ஒரு போதும் சிதறுவதில்லை. அடுத்து ஐதேக தலைவர் , யாருக்கு வாக்களிக்கச் சொன்னாலும் , மறு பேச்சே இல்லாமல் , வாக்களிக்கும் வாக்காளர்கள் ஐதேகவிலேதான் உண்டு. அடுத்த கட்சிகளில் விவாதப்படுவார்கள். அந்த குணாம்சம் ஐதேகவில் இல்லை. இல்லாவிட்டால் மைத்ரிக்கு ஐதேக வாக்களிக்குமா?
தவிர பதவியில் உள்ள கட்சியோடு பயணித்தால்தான், இப்போது எதையாவது செய்து கொள்ள அல்லது பெற முடியும்.
இரண்டாவது இடம் அதிகமாக மகிந்தவுக்கு சாத்தியம் எனச் சொல்லப்படுகிறது. அது கூட்டு எதிர்க் கட்சியின் பாய்தலை அல்லது பாச்சலைப் பொறுத்து மாறலாம். பணமா? பதவியா? இதுதான் இப்போதைக்கு முன்னால் நிற்கும் பிரச்சனை.
கூட்டு எதிர்க் கட்சியினர் , மகிந்தவோடு நிலைத்தால் , அடுத்த போட்டி , மைத்ரி மற்றும் JVPயினதாக இருக்கும். JVP இரண்டாவது இடத்துக்கு வர முயல்கிறது. ஆனால் 3 - 4 எனும் இடங்களே JVP அல்லது மைத்ரிக்கு கிடைக்கப் போகிறது.


நன்றி முகநூல் - அஜீவன்
»»  (மேலும்)

11/06/2017

இதற்கு மேல் தடுத்து வைக்க எந்த வழியும் இல்லை
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை திங்கட்கிழமை ஆரம்பமானது.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்பு படுத்தி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் காலை 10.30 மணி தொடக்கம் இந்த வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.இன்றைய இந்த விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வருகைதந்துள்ள சட்டத்தரணிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

  அரசியல் பழிவாங்கலுக்காக கைது செய்து   சுமார் இரண்டு வருடங்களாக முன்னாள் முதல்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் தடுத்து வைக்க எந்த வழியியும் இல்லை என்னும் நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
»»  (மேலும்)

11/05/2017

சுரேசை தொடர்ந்து மட்-துரைரெத்தினமும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றம்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஸ் அணி வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். Résultat de recherche d'images pour "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து"
எனது தனிப்பட்ட கருத்தின் படி சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் செயற்பாடு நல்ல விடயம்.
இவர் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் கொடுக்காத போதே வெளியேறியிருக்க வேண்டியவர்.
ஆனாலும் உள்ளே இருந்து கூட்டமைப்பை உடைக்கலாம் என எதிர்பார்த்தார்.
அது நடைபெறவில்லை.
...
கடந்த இரண்டு வருட காலத்தில் சுரேஸின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக கூட்டமைப்புக்கு எதிராகவே அமைந்திருந்தது.
ஆனாலும் கூட்டமைப்பு அவரது கட்சியை விலக்காமல் உள்ளே வைத்து அவமானப்படுத்தியது.
அதாவது தானாக வெறியேறிப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பே கூட்டமைப்பின் தலைமைக்கு இருந்தது.
கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சுரேஸ் தமிழ் மக்கள் பேரவையை தூசுதட்டி, கட்சியாக பதிவுசெய்யும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
ஆனந்த சங்கரியின் சூரியனை கொண்டுவந்து பிழைப்பு நடத்தலாம் என்ற திட்டமும் உள்ளதாம்.
அடி வாங்கி நொந்து நூலாகிப் போன கஜேந்திரகுமாரின் முன்னணியையும் இணைத்துக்கொண்டு பயணிக்க நினைத்த அவரது நீண்ட நாள் கனவை நனவாக்கவுள்ளார்.
துருப்புச் சீட்டாகவுள்ள வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக உள்ளதென்பது தெரியவில்லை.
அதே நேரம் கஜேந்திரகுமார் எந்த நேரத்தில் துரோகி பட்டம் கொடுத்து தூக்கியெறிவார் என்ற பயமும் சுரேசுக்கு இருக்கவே செய்யும்.
எது எப்படியோ..
கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சுரேஸின் வெளியேற்றம் எந்த விதக் கவலையுமற்றதாகவே காணப்படுகிறது.
அதேபோல தேர்தல்களில் சுரேசின் வெளியேற்றம் கூட்டமைப்புக்கு எந்தவித பாதகங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை.
மறுபக்கமாக கூட்டமைப்புடன் இருந்தபோதே மக்களால் நிராகரிக்கப்பட்டவர் சுரேஸ்.
வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற ஒரே காரணத்துக்காக மக்களால் ஆதரிக்கப்படுகிறார்.
இனிவரும் காலங்களில் சிவசக்தி ஆனந்தனின் அரசியல் வாழ்க்கையும் முகவரியற்றுப் போகும் என்பதே உண்மை.
அதே போல மட்டக்களப்பில் மக்களால் ஓரளவு மதிக்கப்படும் துரைரத்தினத்துக்கும் அஸ்த்தமனம் ஆரம்பித்துவிட்டதாகவே உணர முடிகிறது.

நன்றி முகநூல் *நவநீதன்
»»  (மேலும்)