11/23/2017

ஐக்கிய தேசிய கட்சியில் அமல் எம்பி ?

(இப்படியொரு செய்தியை தமிழ் நியூஸ் டொட் கொம் என்னும் தளம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக தகவல்களையோ மறுப்புக்களையோ
Résultat de recherche d'images pour "UNP"  சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க முன்வந்தால் அதனை நாம் பிரசுரிக்க தயாராகவுள்ளோம்.ஆ-ர் )

Résultat de recherche d'images pour "அமல் எம்பி ?"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் அமைப்பிற்கு கிழக்கு மாகாணத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனத்திற்கான வேட்பாளராக களமிறக்கப்பட்ட சதாசிவம் வியாழேந்திரன் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி நகர்வதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ள நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.
கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம்வகிப்பதால் மக்களுக்கு எதனையும் செய்ய முடிவில்லை.

அதேநேரம் கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதால் அரசாங்கத்தினை எதிர்த்தும்
செயற்பட முடியவில்லை.
இவ்வாறு இரண்டும் கெட்ட நிலைமை நீடிப்பதால் தன்னால் அடுத்த முறை பாராளுமன்றத்திற்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டு விடும்.
ஆகவே தான் ஏதாவது ஒரு முடிவினை
எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாக தனக்கு நெருங்கியவர்களிடத்தில் அண்மைக்காலமாக
தெரிவித்து வருகின்றார் வியாழேந்திரன்.
அவ்வாறான நிலையில் தான் தற்போது இரகசியமாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருடன்
முதற்கட்டச் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.
எனினும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவர் பிரதமர் ரணிலுடன் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான சுமந்திரன் எம்.பி,
நெருங்கிச் செயற்படுவதால் அவர் தடையை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் வியாழேந்திரனுக்கு ஏற்பட்டள்ளது.
எனினும் வியாழேந்திரனின் இரகசிய சந்திப்பு விவகாரம் தற்போதைய தலைமை உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியவந்துள்ளதால் தற்போது கட்சிக்குள் இவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒரு குறிப்பிட்டுள்ளார்

0 commentaires :

Post a Comment