12/21/2017

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட 480 பேர் விண்ணப்பம்

கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துவமாக போட்டியிடுகின்றது. தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையின் கீழ் உள்ளுராட்சிசபைகளை வழங்குவதற்கு தமிழ் மக்கள் இம்முறை அணிதிரண்டுள்ளனர்.

இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர்  தெரிவின்போது மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிவருகின்றனர். எங்களுக்கு 208 வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக எங்களிடம் 480க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை தந்திருந்தனர்.
அதில் 208பேர் தெரிவுசெய்யப்பட்டு வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கின்றார் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் அவர்கள்.  
பல்வேறு பிரச்சினைகள் கொண்ட உள்ளுராட்சிசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் கொடுத்தால் தமிழர்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்யப்போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும்.அதனை உணர்ந்தே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பின்னால் தமிழ் மக்கள் அணி திரண்டு உள்ளனர்.

மத்திய அரசியல் மிகவும் பலம்பொருந்திய சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளபோதிலும் அது தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல்வேறு கோசங்களை முன்வைத்தவர்கள் கடந்த வரவுசெலவு திட்ட முன்மொழிவின்போது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான எந்த அழுத்தத்தினையும் வழங்கவில்லை.எந்தவித கோரிக்கையினையும் வைக்காமல் ஆதரவு வழங்கினர்.

இவ்வாறான நிலையில் உள்ளுராட்சி அதிகாரங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வழங்கினால் இருக்கின்ற தமிழர்களின் எல்லைக்கிராமங்களை வரைபடத்தில் பார்க்கும் நிலையினை உருவாக்குவார்கள் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழ் மக்கள் இம்முறை உணர்ந்துவாக்களிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோரிக்கையாகும்.

0 commentaires :

Post a Comment