12/11/2017

இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி?

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி
கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கள்கிழமை) பகல் 3 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில்,ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

0 commentaires :

Post a Comment