1/30/2018

1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரையை ஓரம்கட்டிய அமிர்தலிங்கமும்…

இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் சொல்லின் செல்வர் முன்னாள் அமைச்சர் செல்லையா இராசதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரையை ஓரம்கட்டிய அமிர்தலிங்கமும்… Image associée
1977ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் தமிழர்விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தனது முதலாவது மாநாட்டைக் கூட்டியது. அந்த மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் விருப்பம் என்பது சுதந்திர தமிழீழத்தை அடைவதே என்ற பிரகடனத்தை நிறைவேற்றினர். 14-05-1976 இல் நிறைவேற்றப்பட்ட இந்த பிரகடனமே இன்றுவரை “வரலாற்று புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என புகழப்படுகிறது. இதன்படி தமிழீழம் பெறுவதே ஒரே வழி என்கின்ற கொள்கையை தமிழ் மக்கள் அனைவரினதும் ஏக கொள்கையாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.
இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு சிலமாத இடைவெளிகளுக்கு முன்பு தான் மு.திருச்செல்வம் (1976-நவம்பர்)இ ஜீ.ஜீ.பொன்னம்பலம் (1977-பெப்ரவரி)இ செல்வநாயகம் (1977-ஏப்ரல்) போன்ற பெருந்தலைவர்களினுடைய இயற்கை மரணங்கள் சம்பவித்தன. இச்சோக நிகழ்வுகள் வடகிழக்கு மக்கள் எல்லோரையும் ஒருவித அனுதாப அலையினூடாக ஒன்று சேர்த்தது. இந்த ஒவ்வொரு மரணங்களின் போதும் தன்னையே அடுத்த தலைமையாக திட்டமிட்டு முன்னிறுத்தி வருவதில் அமிர்தலிங்கம் மிகக்கவனமாகவும், வெற்றிகரமாகவும் காய்களை நகர்த்திக் கொண்டே வந்திருந்திருந்தார்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக ஆகும் முழுத் தகுதிகளும் கொண்டிருந்தவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராயிருந்த செல்லையா இராசதுரை அவர்களாகும். 1956ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மட்டக்களப்பு மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்த இவர் தமிழர்கள் மத்தியில் பழம்பெரும் தலைவராக மதிக்கப்பட்டு வந்தவர். ஆனால் தனது சொந்த தொகுதி மக்களாலேயே 1970 ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டையில் தோல்வி கண்ட அமிர்தலிங்கம் இராசதுரையின் வளர்ச்சியையோ அவர் தலைவராவதையோ விரும்பியிருக்கவில்லை. 1970 ஆண்டின் பின்னர் அமுலான கல்விதரப்படுத்தல் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்கின்ற தமிழ் தரப்பினரின் முடிவினை கட்சிக்குள்ளேயே ஆட்சேபித்தவர்கள் எனும் வகையில் இராசதுரையும் தங்கத்துரையும் முக்கியம் வாய்ந்தவர்கள். இதன் காரணமாகவும் இவர்கள் மீது அமிர்தலிங்கத்துக்கு இவர்களை ஓரங்கட்டியாக வேண்டும் என்கின்ற நீண்டநாள் திட்டம் இருந்தது. அத்தோடு யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழ் மக்களுக்கான தலைமைப் பதவி செல்லுகின்ற வாய்ப்பை அமிர்தலிங்கம் போன்றவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. இதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த த.வி.கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பலரும் அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து இராசதுரையை ஓரம் கட்டும் முயற்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த யாழ்ப்பாணத்தினுடைய மேல்தட்டு வர்க்க பண்பு முதன்முறையாக மட்டக்களப்பு மக்களால் மெதுவாக உணரப்படும் வாய்ப்பினை 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலே வழங்கியிருந்தது. இத்தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பின் மீது சந்தேகம் கொண்ட அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட அஞ்சினார்.
அவ்வேளை தந்தை செல்வாவின் இறப்பினால் அவரது தொகுதியான காங்கேசன்துறைக்கான இடம் வெறுமையானதைப் பயன்படுத்தி அங்கே போட்டியிட முன்வந்தார். அதுமட்டுமன்றி மட்டக்களப்பில் இராசதுரையின் வெற்றி வாய்ப்பபுகளை குறைப்பதற்கான சாத்தியப்பாடுகளையும் அதிகரிக்கச் செய்தார். இதற்காக காசி ஆனந்தனையும் மட்டக்களப்பு தேர்தல் களத்தில் இறக்கி தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைத்தார் அமிர்தலிங்கம். இந்த முடிவை மட்டக்களப்பின் கூட்டணிக் கட்சிக் கிளைகள் கடுமையாக எதிர்த்தன.
பொத்துவில் தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட்டணியின் சார்பில் பொருத்தமான ஆள் இல்லாத நிலையில் அங்கு காசி ஆனந்தனைப் போட்டியிட வைக்க முடியும் என அவர்கள் வாதிட்டனர். ஆனாலும் அமிர்தலிஙகத்தின் விடாபிடியும் அதிகாரமும் மட்டக்களப்பு மக்களை பிரித்தாளும் சூட்சியுமே இறுதியில் வெற்றி கொண்டது. அதாவது த.வி.கூட்டணியின் சார்பில் சூரியன் சின்னத்தில் இராசதுரை போட்டியிட தமிழரசுக்கட்சி சார்பில் வீடு சின்னத்தில் காசிஆனந்தனை மட்டக்களப்பில் போட்டியிட வைத்ததன் மூலம் மட்டக்களப்பு தமிழர்களின் வாக்கை இரண்டாகப் பிரிக்கும் முயற்சியை அமிர்தலிங்கம் மேற்கொண்டார்.
அதனு}டாக இராசதுரையின் வெற்றி வாய்ப்புக்களை இல்லாதொழித்து கட்சிக்குள் முடிசூடா மன்னனாக தானே திகழ வேண்டும் என அமிர்தலிங்கம் கனவு கண்டார். ஒரே கட்சிக்குள்ளேயே கிழக்கில் ஒரு தலைமை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந்தக் குழிபறிப்பு அரங்கேறியமையானது எமது வரலாறுகளில் காணக் கிடைக்கும் உண்மைகள்.
காசி ஆனந்தன் மட்டக்களப்பைச் சேர்ந்தவரே ஆயினும் ஒரு யாழ்ப்பாண ஆதிக்க சூதில் அகப்பட்டு பகடைக்காயானார். இராசதுரையின் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்காக காசி ஆனந்தனுக்கு பிரச்சார உதவிகளை அமிர்தலிங்கம் திட்டமிட்டு தயார் செய்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்ற உணர்ச்சிமிகு பேச்சாளர்களும் மட்டக்களப்பில் முகாமிட்டு தங்கி காசி ஆனந்தனுக்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காசி ஆனந்தனுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தப் பிரச்சாரங்களின் முன்னுரிமையானது மட்டக்களப்பு மக்களின் சந்தேக நரம்புகளை மெல்லியதாக அரட்டி விட்டது. இதன் காரணமாக மட்டக்களப்பில் படித்த இளைஞர் கூட்டம்; இராசதுரையை வெல்ல வைப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரக் களத்தில் குதித்தனர். மட்டக்களப்பில் நடந்த இறுதி நாள் பிரச்சாரக் கூட்டத்தில் இராசதுரையே கட்சிக்குள் நடக்கும் குழிபறிப்பை பூடகமாகவும் பகிரங்கமாகவும் மக்களிடம் வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணமா? மட்டக்களப்பா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என அவர் உரையாற்றினார்.
இறுதியில் காசி ஆனந்தன் படுதோல்வியடைய வழமை போல் இராசதுரையே மட்டக்களப்பில் முதலாவது எம்.பியாக தெரிவானார். இந்தத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் இருந்து இரண்டாவது எம்.பியாக ஐ.தேசியக் கட்சியைச் சேர்ந்த பரீட் மீராலெப்வை தெரிவு செய்யப்படார்.
தேர்தலில் வென்ற இராசதுரை தமிழ் அரசியல் வானில் தன்னை ஒரு தமிழனாக அன்றி மட்டக்களப்பானாகவே நடாத்தி கேவலப்படுத்திய யாழ்ப்ப்பாணத் தலைமைகளின் புறக்கணிப்பிற்கு பாடம் புகட்ட எண்ணி விரக்தியுற்று யு.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டார். கட்சிமாறி யு.என்.பி.யில் சேர்ந்தது பெரும் துரோகம் என்று அமிர்தலிங்கம் உட்பட யாழ்ப்பாணத் தலைமைகள் கூக்குரலிட்டன.
ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு அமிர்தலிங்கத்தினுடைய கீழ்த்தரமான அரசியல் சூதுகளுக்கு முன்னால் இராசதுரை கட்சிமாறியது ஒன்றும் துரோகமாகப்படவில்லை. இராசதுரை யாழ்ப்பாணத் தலைமைகளுக்கு தகுந்த பாடம் கற்பித்ததாகவே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
இருந்தபோதிலும் இந்த தேர்தலில் 13 ஆசனங்களை பெற்றுக் கொண்ட த.வி.கூட்டணி இலங்கையில் வரலாற்றின் முதலாவது தடவையாக பிரதான எதிர்கட்சியாகும் வாய்ப்பு பெற்றது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியடைந்த படுதோல்வியே த.வி.கூட்டணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. ஆனால் இலங்கையின் எதிர்கட்சியாகிவிட்ட தகுதி ஒன்றே தமக்கு தமிழீழக் கோரிக்கைக்கான ஆணையை வழங்கி விட்டதாக பரபரப்பாக த.வி.கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டது..
தேர்தலில் தமக்கு போடப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழீழத்துக்காகப் போடப்படுகின்ற ஒவ்வொரு ஆணையாகும் என்று தமிழ் மக்களை உசுப்பி விட்டு உணர்ச்சி மேலிட்ட இளைஞர்களிடம் இருந்து இரத்தத் திலகம் பெற்றுக் கொண்ட அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலில் சங்கமமானார்கள். இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் சட்டதிட்டங்களுக்கும் இறைமைக்கும் விசுவாசமாக நடப்போம் என்று இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் முன்னிலையில் சத்தியம் செய்து எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

தமிழ்த்தேசியத்துக்கு ஆமிக்காவல்

L’image contient peut-être : 1 personne, debout et marcheL’image contient peut-être : 1 personne, debout
 
இன்று (29.01.2018) வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை.
சிங்கள காவல்துறையும், சிங்கள அதிரடிப்படையும் பிரச்சார ஒன்றுகூடலுக்கு செல்பவர்களை தட்டி தடவவேண்டிய தேவை என்ன???? தமிழ்தேசிய வீரவசனம் பேசும் இவர்கள் பெட்டைத்தனமான பாதுகாப்பு சலுகைகளை பெறுவதன் பின்னணி என்ன?
அண்மையில் மட்டக்களப்பு மாவடி வேம்பிற்கு வருகைதந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு பட்டதாரிகளாகிய நாங்கள் சென்றபோது இவ்வாறான சோதனைகளை நாங்கள் காணவில்லை.
நேற்றய தினம் எமது மட்டக்களப்பிற்கு வருகைதந்த சிங்கள இன மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் சாதாரணமாகவே வந்து சென்றனர். அவர்களுக்கில்லாத பலகார அச்சுறுத்தல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இத் தமிழ் தேசிய வேடதாரிகள் எம் தமிழர்களை அவமானப்படுத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
»»  (மேலும்)

மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 1ம் வட்டார வேட்பாளராகிய திரு.அ.அருள்யோகசுந்தரம் மற்றும் திரு.ர.ஹரிப்பிரசாந் ஆகிய வேட்பாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தெளிவூட்டல் நிகழ்வானது. மட்டக்களப்பு அமிர்தகழியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது. L’image contient peut-être : 3 personnes, personnes sur scène et plein air
பிரதமஅதிதியாக கிழக்கு மாகாணசபை முன்னால் உறுப்பினர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னால் பிரதிமேயரும் வேட்பாளரான திரு.ஜோஜ் பிள்ளை மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மகளிர் அணித் தலைவி திருமதி.செல்விமனோகர் மற்றும் ஏனைய வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

1/28/2018

திரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ காலமானார்.

L’image contient peut-être : 1 personne, sourit, gros plan

சிங்களத் திரைப்படத்துறையின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர் தர்மசேன பத்திராஜா இன்று காலமானார். 1974ல் அஹஸ் கவ்வ திரைப்படத்தை இயக்கி, நடித்து சிங்களத் திரைப்படத்துறைக்குள் பிரவேசித்தவர். 1977ல் பொன்மணி தமிழ் திரைப்படத்தை இயக்கினார். பலவிருதுகளைப் பெற்ற இவர் பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார். 1948 மார்ச் 28ம் திகதி கண்டியில் பிறந்த இவர் தனது 74வது வயதில் இன்று காலமானார்
»»  (மேலும்)

1/24/2018

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

நாளை தபால் மூலம்  வாக்களிக்கவுள்ள  கல்வியாளர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.Résultat de recherche d'images pour "vote"


*வடக்கில் கடந்த காலங்களில் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேச சபைகள் சாதிச்சண்டைகளின் மையமாக மாறி செயற்பட முடியாமல் சீரழிந்தமை, உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா,?

*பாரிய சமூக பொறுப்புகளுடன் அமைந்த வடமாகாண சபையானது  கையாலாகாத முதலமைச்சரால் ஊழல் பெருச்சாளிகள் கூடாரமாக மாறி கட்சி சண்டைகளிலும் ஊழல் விசாரணை கமிசனுகளிலும் காலத்தை கரைத்தமை எவ்வளவு கேவலமானது?

*கிழக்கு மாகாண சபையில் முஸ்லீம் காங்கிரஸுடனான தமிழரசு கட்சியின் "இன நல்லுறவு அரசியல்" இருந்த நிலைமையையும் குழப்பியடித்து  கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஓர வஞ்சனை செய்து கிழக்கு தமிழர்களை அரசியல் அனாதைகளாக ஆக்கியதை மறந்து விட்டீர்களா? 

* கடந்த பாராளுமன்ற தேர்தலில்  தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கிய பேராதரவால்  கிடைத்த பதவிகளை வைத்து  கோடி கோடியாக சம்பாதித்த சுய லாப  அரசியலைத்தவிர தமிழ் மக்களுக்கென எவ்வித உரிமைகளையும் பெற முடியாத நடைபிணங்களாக மாறி மக்களின் இறைமையை பேரினவாதிகளிடம் தாரை வார்த்தமையை மன்னித்து விட முடியுமா?

*கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சி என்னும் மாயவித்தைக்கு மக்களை பலியாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை  வாரி வழங்க செய்த போதும் ஒரு சாராய குதத்தை மட்டக்களப்பில் உருவாக்கிய கேவலமான சாதனையை தவிர கிழக்கிலங்கை மக்களுக்கு வேறு எதை பெற்றுத்தந்தார்கள்? என்று சிந்தியுங்கள்,

அதன் பின்னர் வாக்களியுங்கள். 
»»  (மேலும்)

1/20/2018

நித்யானந்தா* உருவபொம்மை எரிப்பு போராட்டம்

ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் L’image contient peut-être : 1 personne, sourit
இசுலாமிய , கிறிஸ்தவ மக்களை இழிவுபடுத்தியும்
கலைஞர்,திருமாவளவன், சீமான், கனிமொழி, வைரமுத்து உள்ளிட்ட தமிழக அரசியல் ஆளுமைகளை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்ற
பெரியாரியவாதிகளுக்கும் முற்போக்காளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்ற
நித்யானந்த மடவாதிகளைள கண்டித்து
நாளை காலை மதுரையில்
நித்யானந்தா உருவ பொம்மை எரிப்பு போராட்டம்.
இந்துத்வாவாதிகளை எந்த வகையிலும் அனுமதியோம். அனைவரும் வருக
திராவிடர் விடுதலை கழகம்
மற்றும் தோழமை அமைப்புகள்
மதுரை
9600408641
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பாளர்களையே குறிவைத்து நிகழ்த்தப்பட்டு வரும் தேர்தல் வன்முறைகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தேர்தல் காரியாலயம் மீது தீ மூட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கான வேட்பளராக போட்டியிடும் காந்தன் அவர்களது பிரச்சார அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.மாநகரின் புறநகர் வட்டாரமான கருவப்பங்கேணியில் மேற்படி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தீயிடப்பட்ட அலுவலகத்தை தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீரணி தலைவி செல்வி மனோகரன்  உடன் சென்று பார்வையிட்டார். சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பாளர்களையே குறிவைத்து நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


»»  (மேலும்)

புத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா?- கருப்புப் பிரதிகள்

சென்னை புத்தகக் காட்சியில் எண் 596 புத்தக அரங்கில் இளைஞர்கள் அதிகம் வட்டமடிப்பதைக் காண முடிகிறது. அதுமட்டுமல்லாது சமகால அரசியலும் அங்கு வாசகர்களால் விவாதிக்கப்படுகிறது.
சுமார் 14 வருடங்களாக அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சமூக நீதி தத்துவங்களையும், அவர்களது வாழ்வியல் முறைகளையும் மக்களிடையே தொடர்ந்து எடுத்துச் செல்கிறது கருப்புப் பிரதிகள் பதிப்பகம். 
   

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் என நாட்டின் பல்வேறு முதன்மைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு மாணவர்கள் தரப்பு குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரும், சாதிய தீண்டாமைகளுக்கு நிரந்தர எதிர்ப்புக் குரலாகிப் போன பெரியாரின் புத்தகங்களும்தான் இப்பதிப்பகத்தின் முக்கிய அடையாளங்கள்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கருப்புப் பிரதிகள் அரங்கத்தில் உள்ள புத்தகங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் கருப்புப் பிரதிகள் நிறுவனர் நீலகண்டன்.
"இந்த வருடம் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ‘அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் கவிஞர் ம. மதிவண்ணன் எழுத்தில் புதிய நூல் வந்துள்ளது. இந்நூல் அம்பேத்கரை இன்னும் எவ்வாறு ஆழமாக வாசிக்க வேண்டும் என்பதை கூறுகிறது.
இதனையடுத்து, இலக்கிய சமூகங்களில் திருநங்கைகள் எழுதும் புத்தகங்கள் சமீப காலமாக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் லிவிங் ஸ்மைல் வித்யா 'மரணம் மட்டுமா மரணம்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு வந்துள்ளது.
'சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்' – பெரியார் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு அதே வேளையில் தனித்துவமான பெண் அரசியலை பேசியவர்களின் கட்டுரைகள், பேச்சுகள் ஆகியவை முனைவர்  மு. வளர்மதியால் தொகுக்கப்பட்டு இரண்டாம் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
குமரன் தாஸ் எழுதிய 'சேது கால்வாய் திட்டமும் ராமேஸ்வரம் தீவு மக்களும்' நூல் முக்கியமானது இந்த நூலில் மீனவ சமூகம் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை பற்றிய முக்கிய நூல் வாசகர்களுக்காக உள்ளது. எழுத்தாளர் தேவாவின் மொழிபெயர்ப்பு நூலான 'குழந்தைப் போராளி' ஆகியவை உள்ளன.
பெண் படைப்பாளிகளில் ஜெயராணியின் 'சாதியற்றவளின் குரல்', தமயந்தியின் 'ஒரு வண்ணத்துப்பூச்சியும் சிறு மார்புகளும்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் அதிகளவில் வாசகர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
 
இத்துடன் கருப்புப் பிரதிகளின் நிரந்த அடையாளமாக ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் ஷோபா சக்தி எழுதிய 'பாக்ஸ் கதைகள்', 'கண்டி வீரன்' ஆகியவை அரங்கில் இடப்பெற்றுள்ளன.
‘பெரியார் – அறம் அரசியல் அவதூறுகள்’ சாதி எதிர்ப்பு அரசியலையும், அவை சார்ந்த படைப்புகளையும் கருப்புப் பிரதிகள் தங்கள் அடையாளமாக வெளியிட்டு வருகிறது. வெளியிட விரும்புகிறது" என்றார் நீலகண்டன்.
எந்தப் புத்தகம் இந்த முறை வாசகர்களால் அதிகம் வாங்கப்பட்டுள்ளது...
“வாசகர்களால் திரும்பத் திரும்ப அம்பேத்கர் சார்ந்த நூல்களும், பெரியார் சார்ந்த நூல்களும், சாதி ஒழிப்பு நூல்களும் எங்கள் கடையில் அதிகம் வாங்கப்படுகின்றன. புதிதாக வந்த எழுத்தாளர்களை விடவும் அம்பேத்கரின் ‘நான் இந்துவாக சாகமாட்டேன்’, ‘சாதி ஒழிப்பு’ ஆகிய நூல்கள் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக விற்பனையாகி வருகின்றன.
 
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் புத்தகத் தேர்வுகள் இந்த புத்தகக் கண்காட்சியில் எப்படி உள்ளது?
நல்ல மாற்றம் காணப்படுகிறது. குறிப்பாக இவர்கள் பெரியார், அம்பேத்கர் நூல்களை தேடிப் பிடித்து வாங்குகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆணவக் கொலைகள், காதல் கலப்புத் திருமணத்தால் எழக்கூடிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரியாரையும், அம்பேத்கரை நோக்கி இளைஞர்கள் நகர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுக்கிறது. இந்த மாற்றம் எங்களுக்கு நம்பிக்கையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது"
பெண் வாசகர்கள்......
"பெண் வாசகர்கள் எண்ணிக்கை புத்தகக் கண்காட்சியில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. தற்போது இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட ஒரு இல்லத்தரசியிடம் நீங்கள் என்ன புத்தகம் வாங்க விரும்புகீறிர்கள் என்று கேட்டதுபோது, அதற்கு அவர் 'நான் இந்து வாக சாகமாட்டேன்' என்ற புத்தகத்தை குறிப்பிட்டார். இம்மாதிரியான பதிலை நீங்கள் ஒரு வருடத்துக்கு முன் ப்ரவலாகக் காண முடியாது.
முன்பெல்லாம் குடும்பத் தலைவிகள் சமையல், ஜாதகம், கோலம் புத்தகங்கள் வாங்குவார்கள். தற்போது இது முற்றிலும் மாறி இருக்கிறது. ரமணி சந்திரனை தேடுவர்கள் தற்போது அம்பேத்கரை தேடுகிறார்கள். அவர்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார் நீலகண்டன்.
நன்றி  * த இந்து 
»»  (மேலும்)

1/18/2018

திறந்த கடிதம்


திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் L’image contient peut-être : 1 personne
தலைவர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
தமிழ்தேசிய விடுதலை முன்னணி
தமிழ் தேசிய பேரவை
மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் அவர்களுக்கு வணக்கம்.
உங்களது அரசியல் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் ஒன்று கடந்த மூன்று நாட்களாக உங்களது கட்சி ஆதரவாளர்கள் பெரும்பான்மையோரால் முகநூலில் தொடர்சியாக வந்து கொண்டிருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரவிரும்புகின்றேன்.
தமிழ்தேசியகூட்டமைப்பின் பேச்சாளர், யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M .A .Sumanthiran அவர்களும் , அவரது மகளும் இருக்கும் படம் ஒன்று முகநூலில் பகிரப்பட்டு, அனாகரிகமான வார்தை பிரயோகங்களுடன் பதிவும், பின்னூட்டங்களும் இடப்பட்டு வருகின்றது. சுமந்திரன் அரசியல்வாதி பொதுவெளியில் நிற்பவர் அவர் தொடர்பான விமர்சனங்கள் அனாகரிகமானதாக இருந்தால் கூட புரிந்து கொள்ள கூடியதே. ஆனால் அவரது மகள் என்ற காரணத்துக்காக, அரசியலில் எவ்வகையிலும் சம்பந்தப்படாத அவரது மகளின் படத்தையும் பகிர்ந்து கொச்சைபடுத்தும் பதிவுகளும் பின்னூட்டம் இடுவதும், நாகரீகமான சமூகத்தின் செயலாக இருக்க முடியாது.
சிலமாதங்களுக்கு முன்பு , சுமந்திரன் அவர்கள், அவரது மனைவியை பின்னிருந்து கட்டித்தழுவுவது போன்ற உல்டா படம் ஒன்றை வெளியிட்டு சிங்கள அழகியுடன் சுமந்திரன் என்ற ஓர் பதிவு வந்தது. அப்போதே என்னை போன்ற பலர் அதனை கண்டித்தனர்.
தற்போது மீண்டும் அவரும் அவரது மகள் இருக்கும் படத்தையும் பகிர்ந்து கொச்சைபடுத்தும் பதிவுகள் அனாகரிகமான சொல்லாடல்களுடன் கடந்த மூன்று நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அவரது மகளது படத்தை பொதுவெளிக்கு கொண்டுவந்து
பகிர்வதற்கு எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. இதனை செய்பவர்களில் பெரும்பான்மையோர் உங்களது ஆதரவாளர்களே.
சுமந்திரன்னும், அவரது சரணாகதி அரசியலும் சுத்துமாத்துக்களும் தமிழ்மக்களுக்கு நன்மை விளைவிக்காது என்பதும் அவர்
தமிழர் அரசியலில் இருந்து ஜனநாயக ரீதியில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அரசியலுக்கு சம்பந்தமில்லாத
அவரது குடும்ப உறுப்பினர்களை இழுத்து, அவர்களின் படங்களை போட்டு எதிர்பு அரசியல் பிரச்சாரம் செய்வது அறமற்றதாகும். இதுவல்ல தமிழர் பண்பாடு, இதுவல்ல தமிழ்தேசியம். அரசியலுக்கு அப்பாற்பட்ட சாதாரண பொதுமக்கள், இந்த அறமற்ற அரசியல் பிரச்சாரத்தால் அருவருப்பு அடைகிறார்கள். இது நிட்சயம் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் உங்களது கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அச்சப்படுகின்றேன்.
எனவே தயவு செய்து உங்களது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும், மேற்கொண்டு, சுமந்திரனின் மகள் தொடர்பான படத்தை போட்டு பதிவுகள் இடவேண்டாம் என்றும், ஏற்கனவே இடப்பட்ட பதிவுகளை அழிக்குமாறும் நீங்கள் அறிவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். உங்களது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சரியான திசைவழியில் அவர்களை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு தலைவர் என்ற வகையில் உங்களுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஈழத்தமிழர் அரசியல் பரப்பில் உங்களதும், உங்கள் கட்சி மற்றும் கூட்டணியினதும் வகிபாகத்தை உறுதிப்படுத்தி கொள்ள, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகிறேன்
இப்படிக்கு
யோகா வளவன் தியா
அன்பே சிவம்
அறிவே பலம்
18.01.2018
»»  (மேலும்)