2/10/2018

2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு

இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது.

நாடு முழுவதிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி , வாக்குப்பதிவு இடம்பெற்ற மத்திய நிலையங்களிலேயே வாக்குகளை எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.

13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டிருந்ததுடன், வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தோரின் எண்ணிக்கை 1கோடியே 57 இலட்சத்து 60ஆயிரத்து 50 பேர் ஆகும்.

எவ்வாறாயினும் நீதிமன்ற உத்தரவொன்றுக்கமைய எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை என்பதும் கூறத்தக்கது.

0 commentaires :

Post a Comment