2/11/2018

மக்கள் வென்றது ஒரே ஒரு வட்டாரமே

நீண்ட காலமாக மட்டக்களப்பு மாநகர சபையால் திருப்பெரும் துறையில் திண்ம கழிவுகளை  கொட்டுவதனால் மக்கள் மிகவும் அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர். மிகவும் மோசமான  துர்நாற்றத்துடனும் அதிகளவிலான இழையான்களுக்கு மத்தியிலும் ஒரு நரக வாழ்க்கை வாழ்வதாக தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். Résultat de recherche d'images pour "பச்சைக்கிளி"
மலசல கழிவுகளை கொட்டுவதனால் சுகாதாரம் பாரிய கேள்விக் குறியாகியுள்ளதோடு குடி நீர் மாசடைவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அடிக்கடி உடல் சுகயீனங்களுக்குள்ளாகின்றனர் என கவலை தெரிவிக்கின்றனர்.
தங்களின் இந்த துயர நிலைக்கு அரசியல் வாதிகளே காரணம் எனவும்,   குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தும் எதுவித நடவடிக்கையும் எவரும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாற்றுகின்றனர்.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இந்த குப்பை மேடுகள் தீப்ப்பிடித்து பல நாட்கள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக இம்முறை தேர்தலில் அம்மக்கள் சகல அரசியல் வாதிகளாயும் நிராகரித்து தங்கள் பிரதேசத்தின் ஒருவரை சுயேட்சை குழுவாக இறக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
0 commentaires :

Post a Comment