2/28/2018

இலங்கையில் நடைமுறையில் உள்ள கருத்தடை முறைகள்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள கருத்தடை முறைகள்.

- Thanks: Nagamuthu Susanthan Résultat de recherche d'images pour "கருத்தடை முறைகள்."

01. வாய் மூலம் உட்கொள்ளும் OCP எனப்படும் கருத்தடை மாத்திரை. (Eg:- mithuri)
இதன் செயட்பாட்டு காலம் ஒரு நாள் மாத்திரமே.
02. Depot Injection எனும் ஊசி. 3 மாதம் கருத்தடை.
03. Jadelle என்னும் கையில் பதிக்கும் சிறிய tube ( 3 தொடக்கம் 5 வருட கருத்தடை )
04. IUCD எனும் கருப்பைக்குள் வைக்கும் சாதனம். (5 வருட கருத்தடை)
05. மேட்சொன்ன 4 உம் பெண்களுக்கு உரியது. இதட்கு மேலதிகமாக நிரந்தர கருத்தடை முறையான surgery செய்தல் (பெண்களுக்கு LRT, ஆண்களுக்கு Vasectomy)
*ரொட்டி கொத்தில் இது சாத்தியமில்லை என்பதற்கான காரணங்கள்*
01. இங்கு *"වඳ බෙහෙත්"* எனும் சொல் பதம் சிங்களத்தில் "நிரந்தர கருத்தடை மாத்திரை" என்ற அர்த்தத்தில் பாவிப்பது. அலோபதி மருத்துவத்தில் அப்படி ஒரு மருந்தே இல்லை.
நிரந்தர கருத்தடைக்கு ஒரே தெரிவு "Surgery" செய்வதே.
(குறிப்பு:- இதில் கருக்கலைப்பு என்பது வேறு. அது ஏற்கனவே உருவான கருவை கலைப்பது. அந்த மாத்திரையின் விலை மிக அதிகம். அதை சிங்களத்தில் "Gabsa" என்று கூறுவர். இங்கே பிரச்சினை அது அல்ல.)
இருக்கும் மாத்திரைகள் ஒரு நாளைக்கு கருத்தடை ஏற்படுத்துமே தவிர அதற்கு மேல் கிடையாது. அதுவும் இது பெண்கள் பாவிக்க வேண்டிய குளிசை.
(28 நாள் card குழிசை போடுபவர்களுக்கு தெரியும்.)
2. எந்த ஒரு மருந்தும் 25°C க்கு கீழ் வைத்து பாதுகாக்கப்  பட வேண்டும். (Recommended Temperature)
30- 35'C ஐ விட வெப்பநிலை தாண்டும்போது மருந்துகள் செயல் இழக்க ஆரம்பிக்கும்.
இதனாலேயே Pharmacy களை A/C பண்ணுமாறு அரசாங்கம் பணிக்கிறது. இது இப்படி இருக்க 100°C க்கு அதிக வெப்பநிலை உள்ள கொத்து ரொட்டியில் அது மருந்தாக இருக்காது.
3. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களால் கூட "கருத்தடை" எனும் சொல்லை பாவிக்கும்போது அதன் கருத்தை உடனடியாக விளங்குவது கடினம்.
அதை விட கடினமானது
"වඳ බෙහෙත්" எனும் சிங்கள சொல் பதம். சிங்கள தாய்மொழி கொண்டவார்களே யோசித்து தான் விடை சொல்கிறார்கள். இது இப்படி இருக்க அச்சுறுத்தலில் கேட்கப்படும் கேள்விக்கு பயத்தில் தலை ஆட்டுவதை ஆதாரமாக காட்டி கலவரத்தை உண்டு பண்ணும் பின்னணி யோசிக்க வேண்டியது.
4.இந்த பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக முஸ்லிம்களையும் அவர்கள் வர்த்தகத்தையும் குறி வைத்து பரப்பப்படுபவை.
பலருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது, பல அங்குகளுக்கு முன் BBS ஆல் கண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பகிரங்கமாக முஸ்லிம்களின் Hotel களுக்கு சென்றால் அங்கு வரும் அன்னியர்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் 3 முறை துப்பி விட்டுத்தான் கொடுப்பார்கள். அது அல்குரானில் சொல்லப்பட்டுள்ளது என்று பொய்யான விஷம பிரச்சாரம் பகிரங்க மேடையில் செய்யப்பட்டது.
அதேபோல் சமீபத்தில் சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பால்மா ஒன்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதட்கு வீடு வீடாக சென்று Sample கொடுத்தார்கள். அதில் பல முஸ்லீம் பெண்கள் Sales rep ஆக இருந்ததால் அங்கு கருத்தடை மாத்திரை கலந்த பால்மா வழங்குவதாக police case வரை சென்றது. பின்னர் அது அந்நியரின் Company என்பதால் கை விடப்பட்டு மூடி மறைக்க பட்டது.
இப்படி நாட்டு நிலைமை இருக்கும்போது நடுநிலையாளர்கள் என் பெயரில் "கடை காரன் செய்து இருக்கலாம்" என்று சமூக வலை தளங்களில் பதிவிட்டு எரியும் இனத்துவேசத்துக்கு எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
படித்ததில் பிடித்தது,...
கொஞ்சம் யோசிச்சி பாப்பம்.. உடனே நான் நல்லா குடுக்கன் என்டு கிளம்பாம,.
சிரியால செத்தாலும் ஈழத்துல செத்தாலும் உசிரு ஒன்டுதான் வீண் சண்டையால மனிதத்தை இழக்காதே மனிதா,..
மதம் மொழி கடவுளை தாண்டி மனிதனாக இருக்க முயற்சிப்போம் மனிதத்துடன்

0 commentaires :

Post a Comment