2/12/2018

தனிப்பெரும் கட்சியாக வளர்ச்சி கண்டுள்ளோம்- த.ம.வி.புலிகள்- அரசியல் ஆலோசகர்- சின்னான் மாஸ்டர்


Résultat de recherche d'images pour "முதலமைச்சர் சந்திரகாந்தன்  முனைக்காடு"
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு சபைகளிலும் இருந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகளில் 37 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்,  

வாகரை,வாழைச்சேனை,மற்றும் செங்கலடி போன்ற மூன்று சபைகளின் தீர்மானிக்கும் சக்தியாக வெற்றியடைந்துள்ளோம். மாநகரம்,பட்டிப்பளை,ஆரையம்பதி,வவுணதீவு,போரதீவு,களுவாஞ்சிக்குடி,
போன்ற அனைத்து சபைகளிலும்   எந்தவொரு கட்சியும்  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு எமது வெற்றிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  மட்டக்களப்பு   மாநகர சபையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளோம்.

இதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு கிடைத்த மொத்தவாக்குகள் 42,613ஆகும். அதன்படி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளான 21150 என்பது இம்முறை இரட்டிப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.  

இந்த வெற்றிக்காக ஒன்று பட்டு உழைத்த  எமது தலைமை  பணிக்குழுஉறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள்,வேட்பாளர்கள்  மற்றும் தொகுதி பிரதேச,கிராமிய அமைப்பாளர்கள்,கட்சிப்  போராளிகள்  உறுப்பினர்கள்,தொண்டர்கள் ஆதரவாளர்கள்,ஊடகவியலாளர்கள்,குறிப்பாக எமக்காக வாக்களித்த கிழக்கு மண்ணின் மைந்தர்கள்  அனைவருக்கும் எனது சார்பிலும் கட்சியில் தலைவர் கெளரவ.சந்திரகாந்தன் அவர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். குறிப்பாக எமது கட்சியின் செயலாளர் பிரசாந்தன் அவர்களது கடின உழைப்பு மெச்சத்தக்கது.


இரண்டரை வருடங்களுக்கு மேலாக எமது  கட்சியின் தலைவர் அரசியல் பழிவாங்கலில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.பணவசதி என்பதோ அரசியல் அதிகாரமென்பதோ பூச்சியமாய். பஸ்ஸிலும், மோட்டார் சைக்கிளிலும், அலைந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர்களும் நாமும்   மாவட்டம் முழுக்க பிரச்சாரங்களை செய்யவேண்டியிருந்தது. 

ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போன்றோர் மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும் தலைவர்களான (மூன்று  கட்சிகளின் தலைமைகள்)   எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர்,சுமந்திரன்,சித்தார்த்தர்,அடைக்கலநாதன் போன்றவர்கள்  எல்லாம் மட்டக்களப்பிலே களமிட்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அரசியல் அதிகாரமும் பணபலமும் அனைத்து கட்சிகளாலும் அள்ளி  வீசப்பட்டன. 

ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வெறும்கையுடன் தனித்து நின்றனர். ஆனால் நாம் நிமிர்ந்தே நின்றோம். அந்தவகையில் பாரிய வெற்றியை நாம் அடைந்துள்ளோம்.அனைவருக்கும் நன்றிகள்.

மகிழ்ச்சி 
அரசியல் ஆலோசகர்- சின்னான் மாஸ்டர் 
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்    

0 commentaires :

Post a Comment