2/15/2018

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.

Aucun texte alternatif disponible. எமது இரு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அதுசார்ந்து எமக்கான சாதகமான நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் எமது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அடுத்த நகர்வாக கிழக்கில் இடம்பெற இருக்கும் 387 பட்டதாரிகளிற்கான நியமனமன்றி கிழக்கிலுள்ள ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களையும், மத்திய அரசின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்களையும் விரைவுபடுத்தக்கோரிய கோரிக்கை கடிதத்தினை சிறிலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் ஊடாக ஜனாதிபதியிடம் கொழும்பில் கையளித்திருந்தோம்.
இதன் பிரகாரம் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர் எம்மை எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) சந்திக்கவுள்ளார். எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளும் இவ் விஷேட சந்திப்பிற்கு அவசியம் கலந்துகொள்ளும்படி வினயமாக வேண்டி நிற்கின்றோம்.
அத்தோடு, இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாமலுள்ள பட்டதாரிகளுக்கான பதிவுகளும் அன்றயதினம் இடம்பெறும்.
#நேரம்:- காலை 08.00 மணி.
#இடம்:- London Westminster College, 570H, Trinco Road, sinna uranni, Batticaloa.
மேலதிக தொடர்புகளுக்கு:- 0752150611.

0 commentaires :

Post a Comment