2/28/2018

கருத்தடை மாத்திரையும் காசியானந்தனும்

காசி ஆனந்தனை நான் 1977 காலப்பகுதியில் இந்தியாவில் சந்தித்தேன். தமிழரின் பிரச்சனையின் அடிப்படை அவர்கள் சிறுபான்மையாயிருப்பதால் தான். எனவே அதற்கான வழி சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை குறைக்கவேண்டும் என்று அதற்கான திட்டத்தை கூறினார். ஒன்று குளங்களில் சயனைட்டை கலப்பது. இரண்டு ஐஸ் பழத்தில் கருத்தடை மாத்திரையை கலந்து விற்பது. இதனைக்கேட்டு நான் மிக அதிர்ச்சி அடைந்தேன். Image associée

பின்னர் 83 கலவரத்தின் பின்னர் எனது ஊரில் ஒருவர் என்னை சந்திக்கவேண்டும் என அடாப்பிடியாக நின்றார். அவரை நான் சந்தித்தபோது தனது பிளானை கூறினார். காசி ஆனந்தனின் அதே சிந்தனை முறை. அவரது ஐடியா பெரகெராவில் பல்லாயிரக்கணக்காக சிங்கள மக்கள் கூடுவார்கள் எனவே விடுதலைப்புலிகள் அங்கு சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து முழுக்கூட்டத்தையும் அழித்தால் இரு இனங்களும் எண்ணிக்கையில் சமமானால் பிரச்சனையை தீர்க்கலாம் என்றார். இதனை ஏன் சொல்லவருகிறேன் என்றால் இனத்துவ மன நிலை இன்னொரு இனத்தை அழிப்பதை பற்றிய எவ்வித தார்மீகத்தையும் கொண்டிருப்பதில்லை.

முஸ்லிம்களை இனச்சுத்தீகரிப்பு செய்வதை நியாயப்படுத்துவதும் இந்த மன நிலையின் வெளிப்பாடு. இதன் மறு பக்கமே 'முஸ்லிம் கடைகளில் கருத்தடை மருந்து கலக்கப்படுகிறதென்ற' பொய்பிரச்சாரம். இதற்கான விஞ்ஞான ரீதியான எவ்வித ஆய்வும் கிடையாது. கருத்தடை மருந்தை கலந்தால் கூட இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. கருத்தடை மாத்திரை  பெரும்பாலும் பெண்கள் பயன் படுத்துவது. அத்துடன் அதனை ஒழுங்காக எடுக்காவிட்டால் மாத்திரை வேலை செய்யாது. இனவெறிப்பிரச்சாரத்துக்கு பகுத்தறிவு தேவையில்லை. மக்களிடம் பீதியை கிளப்பி இன்னொரு இனத்தின் மேல் வெறுப்பை ஏற்படுத்தி அவர்கள் மேல் நிகழும் கொலைவெறித்தாக்குதல்களை நியாயபடுத்துவதே இனவெறியின் கருத்தியல். யூதமக்களின் அழிப்புக்கான ஹிட்லரின் நாசிசத்திலிருந்து பொஸ்னியா ருவண்டாவரை இந்த கருத்தியலின் கொலைவெறித்தனங்கள் வரலாறு. 

நன்றிகள் முகநூல் *மூத்த ஈழ போராளி -ராகவன்  

0 commentaires :

Post a Comment