3/05/2018

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல் முறையாக தேர்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள தலித் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணா குமாரி என்பவர், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
.முதல் முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இந்து சமய பெண் தேர்வு
முஸ்லிம்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாழும் பாகிஸ்தானில் இந்து சமயத்தை சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கிருஷ்ணா குமாரி, "தார் பகுதியிலிருந்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகப்போகும் வாய்ப்பை பெறும் முதல் நபராக நான் இருப்பேன். இதற்கு காரணமான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பிளவால் பூட்டோ மற்றும் பார்யால் டல்பூர் ஆகியோருக்கு நன்றி கூறினால் மட்டும் போதாது" என்று அவர் கூறினார்.

0 commentaires :

Post a Comment