3/08/2018

ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இல்லை

Résultat d’images pour bbc newsஅம்பாறையில் தாக்கப்பட்ட முஸ்லிம் ஹோட்டலில் இருந்த உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டதாக கூறப்பட்ட உணவை ஆராய்ந்த அரசாங்க பகுப்பாய்வாளர்கள், அதில் அப்படியான மருந்து எதுவும் கிடையாது என்றும், உணவில் இருந்தது அவியாதா மாவின் பகுதியே என்று போலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
கார்போஹைட்ரேட் பொருளே அதில் இருந்ததாக அரசாங்க பகுப்பாய்வாளர்கள் செய்தியாளர்களுக்கும் கூறியுள்ளனர்.
அந்த உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இருந்ததாகக் குற்றஞ்சாட்டி தகறாறு செய்யப்பட்டதை அடுத்தே அன்றைய தினம் அந்த முஸ்லிம் ஹோட்டல் ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டது.
தகவல் *பிபிசி 

0 commentaires :

Post a Comment