9/30/2018

இந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் நில அதிர்வுகள்

இந்தேனீசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது, இந்தோனீசியா நிலநடுக்கம்: கரை ஒதுங்கும் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட உடல்கள்
இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர்.
டஜன்கணக்கானோரை காணவில்லை. பாலு நகரில் இடிந்துள்ள கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
»»  (மேலும்)

9/29/2018

உதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா

L’image contient peut-être : une personne ou plus  
  உதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது..சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன்  தொண்டு நிறுவனமாக இயங்கி வரும்  உதயம் நிறுவனமானது கிழக்கிலங்கையை மையமாக கொண்டு பல்வேறு வகையான கல்வி,பொருளாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வானது சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது.
»»  (மேலும்)

9/28/2018

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

சபரிமலைகேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
»»  (மேலும்)

9/25/2018

பணபலத்தால்_மறுக்கப்பட்ட_ஏழை_தொழிலாளிக்கான_நீதி

கடந்த 23.09.2018 குடுவில் பிரதேசத்தில் கிணறுக்கான குழாய் பதிக்கும்போது சிறியரக பாரம் தூக்கும் இயந்திர இயக்குனரின் கவனயீனத்தால் கழுத்து துண்டாடப்பட்டு உயிரிழந்த முனைக்காட்டை சேர்ந்த சீனித்தம்பி சந்திரசேகரம் அவர்களது உடற்கூற்றியல் மருத்துவப்பரிசோதனை இன்று (26.09.2018) அம்பாரை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி அவர்களது முன்னிலையில் இடம்பெற்றது.L’image contient peut-être : une personne ou plus et fleur
இதன்போது கிடைக்கப்பட்ட சட்ட வைத்திய அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஏழைத்தொழிலாளி கிணற்று மடுவினுள் நிற்க்கும்போது #மணல்_சரிந்து_கழுத்து_துண்டாடப்பட்டதாகவே சட்டவைத்திய அறிக்கை கூறுகிறது.
ஐயா,
நீதிமான்களே!!!!
எப்படி ஐயா மணல் சரிந்து கழுத்து துண்டாவது??? இவர்களது மருத்துவ அறிக்கை வேடிக்கையாக இல்லையா?
குறித்த ஏழை தொழிலாளியை வேலைக்கு அமர்த்தியவர் சம்மாந்துறையை சேர்ந்த #ஜலீல் எனும் ஆசிரியர், இவரது மனைவி #றிபா. இவரது மனைவி ஒரு நிர்வாகத்துறை உத்தியோகஸ்தர்(A.G.O). அத்தோடு ஜலீலின் மைத்துனர் ஒருவர் சட்டத்தரணி. இவ்வாறான பின்புல சக்திகளை கொண்டு இவர்கள் சட்டத்தை வாங்கி ஏழைத்தொழிலாளிக்கான நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் என்பதே உண்மை.
இது இவ்வாறிருக்க,
சிறியரக பாரம்தூக்கும் இயந்திரத்தினை சம்பவம் நடந்த இடத்தில் இயக்கியவர் 15 வயது சிறுவன் ஒருவன். அவன் தனது மனச்சாட்ச்சிக்கு உறுத்தியதால் நடந் உண்மையை தெரிவித்திருந்தார். தான் சங்கிலியில் பிணைத்து நீர் குழாயை தூக்கும்போது சங்கிலி கழண்டதால் இயந்திர வக்கட் உயிரிழந்தவரின் கழுத்தில் பட்டு கழுத்து துண்டாடப்பட்டு சம்பவ இடத்தில் நபர் உயிரிழந்ததாகவும், தான் சம்பவத்தை கண்டு கத்திக்கொண்டு வாகனத்தை விட்டு இறங்கி ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும்,
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத 15 வயது சிறுவனை வைத்து பாரம்தூக்கும் இயந்திரத்தை இயக்கியமை மற்றும் உயிரிழந்த காரணத்தை மறைத்து மண்மேடு சரிந்து விழுந்ததாக காட்ட சடலத்தை மணலால் மூடியமை பாரிய குற்றங்களாகும்.
இத்தகு பாரிய குற்றங்கள் இழைத்தவர்கள் தமது பணபலத்தை கொண்டு ஏழை தொழிலாளிக்கான நீதியை குழிதோண்டி புதைப்பவர்கள் ஒருபுறமிருக்க, எமது இனம்சார்ந்த ஒரு ஏழைத்தொழிலாளிக்காக இதுவரை எம் இனம்சார்ந்த அரசியல்வாதிகள் குரல்கொடுக்காமல் வாய்பேசா மடந்தையாக இருப்பது கவலைக்குரிய விடயம்.  

ziyam shivaa


»»  (மேலும்)

9/23/2018

அரசியல் நூல் வெளியீடு

இன்று பாரிஸ் நகரில் அறமும் போராட்டமும்  என்கின்ற அரசியல் நூல் வெளியீடும் அதன்மீதான அறிமுக விமர்சன உரைகளும் இடம்பெறவுள்ளன.


»»  (மேலும்)

9/22/2018

தோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல்

  தோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் தோழர் தேவாவும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்,அரசியல் இலக்கிய ஆர்வமுள்ள அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றனர் பெரியார் வாசக வட்டத்தினர். »»  (மேலும்)

9/21/2018

ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!Résultat de recherche d'images pour "rajini thiranagama"
1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.
அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?
இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.
அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.
இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.
மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.
இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.
மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.
சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.
எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.
-- 1989ம் (இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை
21 - 09 - 2005)
ஆண்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்

»»  (மேலும்)

கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Résultat de recherche d'images pour "கிழக்குத் தமிழர்"

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்குத் தமிழர்கள் சார்பில் அதி உச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் போட்டியிட வைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக கிழக்குத் தமிழர் ஒன்றியம் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்து பேசியது. அதன் அடுத்த கட்டமாக கடந்த 22.08.2018 அன்று அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஓரிடத்தில் சந்திக்க செய்த கலந்துரையாடினோம்.
இக்கலந்துரையாடல் சந்திப்பின் தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகல் வடிவம் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் சென்றவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் பின்னூட்டல்களையும் இறுதி நிலைப்பாடுகளையும் அறியத்தருமாறு கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கு அமைய பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய சம்மதிக்கும் கட்சிகளின் ஒரு அரசியல் கூட்டு அமைப்பின் (Alliance) கீழ் ஒன்றிணைத்துப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கட்சிகளினால் கைச்சாத்திடப்பெற்றபின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணைக்குழுவிடம் செல்லவிருக்கின்றோம்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தற்போதைய நிலமை என்னவென்று வினவியபோது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுத் தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

»»  (மேலும்)

9/20/2018

மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்

நிறைவேறியது மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் மலையக வரலாற்றில் ஒரு மைல்  கல் Résultat de recherche d'images pour "tea estate sri lanka"
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதை பிரதான இலக்காகக்கொண்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சட்டமூலம் (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாகவுள்ள சரத்துகளை நீக்குவதற்கு வழிவகுக்கும் பிரதேச சபைகள் ( திருத்தச்) சட்டமூலமும் திருத்தங்கள் சகிதம் நிறைவேறியது.

மலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,
குறிக்கோள்கள்….
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.
பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.
அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.
இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
அதிகாரசபையின் பணிகள்….
1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.
'
2. அதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கள்  முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.
4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.
5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.
»»  (மேலும்)

எழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி

Résultat de recherche d'images pour "கெகிராவ ஸஹானா"
எழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி வருத்தமளிக்கிறது.
நல்லதோர் ஆளுமை. எழுத்தாளர் கெகிராவ சுலைஹாவின் சகோதரி இவர். இதுவரை 10 இற்கும் அதிகமான இலக்கிய நூல்களை வாசிப்புச் சமூகத்திற்குப் பரிசளித்தவர்.
 
»»  (மேலும்)

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதசனிடம் விளக்குகிறார் ஜூட். கேன்ஸ் திரைப்பட விழாவில் Demons in Paradise படம் திரையிடப்பட்டது
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் சிலருக்கு வருத்தமளிக்கும் வகையில் இருக்கலாம்.
"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம், விடுதலை புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.
போர் முடிந்து பல ஆண்டுகளான நிலையில், இலங்கை திரைப்பட இயக்குநர்கள் இதனை மறு ஆய்வு செய்கின்றனர்.
ஒரு முக்கிய சித்தரிப்பு
நிர்மலன் நடராஜா மற்றும் ஞானதாஸ் காசிநாதர் உள்ளிட்ட சில தமிழ் இயக்குநர்கள், பொதுமக்களை குறிவைத்து பலரை கொன்று அநீதி இழைத்ததாக இலங்கை அரசாங்கத்தை நுட்பமாக விமர்சித்துள்ளனர்.
ஆனால், தனது 'Demons in Paradise' திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம், விடுதலைப்புலிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
»»  (மேலும்)

9/16/2018

திலீபனின் ஆன்மா அழுகின்றது


திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுஇ இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் 


Résultat de recherche d'images pour "திலீபனின்"

பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியில்இ மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில்இ யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ செயலாளர் எஸ். கஜேந்திரன்இ ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள்இ வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதுஇ திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்துஇ மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டவேளையில்இ நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இதன்போதுஇ பாடலை நிறுத்துமாறு சி.வி.கே சிவஞானம் கோரினார்.
இதற்குஇ பாடல் ஒலிபரப்பியவர்கள்இ “நிகழ்வு முடிவடைந்து விட்டது என அறிவித்த பின் கருத்துத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இங்கு அரசியல் தேவையற்றது என்பதே இங்கு முதன்மை” எனக் கூறிஇ பாடலை நிறுத்த மறுத்தனர்.
இதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
இதனிடையில் அவைத்தலைவர்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து முடித்துவிட்டார்.
ஆரம்பித்த கருத்து மோதல்களின் போது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான தூசன வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் முரண்பட்ட பார்வை இருந்தது. பிரதான சுடர் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்னதாக ஒரு சுடர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்​தமை குறிப்பிடத்தக்கது.


»»  (மேலும்)

9/12/2018

இந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:

கொழும்பு மருதானையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்தி, இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டிருந்தால், ஒருபாலுறவு என்பதை தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து அகற்றிக் கொள்ளும் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் என ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் தெரிவித்தார்.எல்.ஜி.பி.டி கொண்டாட்டம்
இந்தியாவில் ஒருபாலுறவை தண்டனைக்குரிய சட்டப் பிரிவில் இருந்து அகற்றி இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இலங்கையிலுள்ள ஒரு பாலுறவு சமூகத்திற்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து ஒருபாலுறவு விவகாரத்தை நீக்கிக் கொள்ள இன்னும் உறுதியோடு போராட வேண்டியிருப்பதாக பி.பி.சி. தமிழிடம் பேசிய மனோஜ் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவில் ஒருபாலுறவு உள்ளடக்கப்பட்டிருந்தது. இதேபோல இலங்கையில் 365-365A பிரிவுகளில் ஒருபாலுறவு குற்றமெனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், அதற்குக் கிடைத்த வெற்றியும் இலங்கையில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இங்குள்ள ஒருபாலுறவு சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தோம்.
இந்தியாவில் ஒருபாலுறவு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும், இந்தியாவிற்கும், இலங்கையின் நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
»»  (மேலும்)