3/29/2019

மட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்

மட்டக்களப்பில் நாளை சனிக்கிழமை  பலஸ்தீன பூமி தினம் ("Palestine Land Day - March )30" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பலஸ்தீன் விவகாரம் பற்றிய விவரணப்படம், பலஸ்தீன அரசியல், வரலாறு குறித்த சிறப்புரைகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளன.

 L’image contient peut-être : 1 personne, sourit, assis

நிகழ்வில்


தோழர் சிவரெத்தினம்(கிழக்கு பல்கலைக்கழகம்) 
"பலஸ்தீன விடுதலைப் போராட்டம்
ஈழப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம்" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.


தோழர் ராகவன் (எழுத்தாளர்-லண்டன் )   
"பலஸ்தீன மக்களின் வரலாறு மற்றும் அரசியல் தொடர்ச்சி"

 குறித்து உரையாற்றுகிறார்.

 நிகழ்வில்,

இலங்கைக்கான பாலஸ்தீனிய தூதுவர் கலந்துகொள்கிறார்.
 குறிப்பு -கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நேரம்: காலை 8.30
இடம்: Green Garden Hotel கல்லடி மட்டக்களப்பு.
 இணைந்த ஏற்பாடு:
*பெரியார் வாசகர் வட்டம்
*ஏறாவூர் வாசிப்பு வட்டம்
*சோஷலிச இளைஞர் சங்கம் மட்டக்களப்பு
»»  (மேலும்)

3/28/2019

பதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் பதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா   Image associée 
நுண்கலைத்துறை தமது கற்றல்ச் செயற்பாட்டை மாணவர் மையம் நின்று கற்று அதன் மூலம் கற்றல் பேறுனைக் காத்திரமாக வலுப்படுத்தவும் பிரயோகிக்கவும் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, பாரம்பரிய அரங்கச் செயற்பாடுகள், படச்சட்ட மேடையை மையப்படுத்திய நவீன நாடக மேடையேற்றங்கள், சிறுவர் நாடகம் மற்றும் பின் நவீனத்துவம், பின் காலனித்தும் சார்ந்த புதிய எண்ணக்கருகள் கோட்பாடுகளின் உருவாக்கம் என்பன நடைபெற்று வரும் சூழலில் படச்சட்ட மேடை மைய நவீன நாடகங்கள் மார்ச் 27, 2019 அன்று காத்திரமான நாடகங்களுடன் கொண்டாடப்பட்டன. 
நுண்கலைத்துறையில் உலக நாடக தின விழா 1998 இல் ஆரம்பமாகி 2005 வரையும் நடைபெற்றது. இதன்போது இருந்த தலைவர்கள் சிறப்பாகச் செய்து முடித்தனர். பின்னர் 2019 மார்ச் 27 அன்று திரு. சு.சந்திரகுமாரின் முழு முயற்சியால் அதனை மீளவும் பல்கலைக்கழக நிருவாகத்தினரின் ஒத்துழைப்போடு துறையின் விரிவுரையாளர்களின் இணைப்பாக்கத்தில் இனிதே நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கே.இ.கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வி.கனகசிங்கம் அவர்களும், கலைகலாசார பீடாதிபதி திரு.மு.ரவி அவர்களும், விஞ்ஞான  பீடாதிபதி பி.பிரதீபன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு அ.பகீரதன் அவர்களும், பேரவை உறுப்பினர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கலைகலாசார பீட பதில் பதிவாளர் திருமதி ஐனாபா மு.ச.ஜ மும்தாஜ் சமீம் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.
»»  (மேலும்)

சமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே!

Image associée

கையில் கிடைத்த மாகாண சபையில் காரியம் ஆற்ற முடியாதவர்கள்.
சமஸ்டியை கொடுத்தாலும், நடுக்கடலிலும் நாய்களுக்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே!
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாஜக கட்சியின்
செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மகாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில்,..
அண்மையில் இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர் கொள்ளக்கூடிய தண்ணீர் பவுசர்கள் வழங்கப்பட்டன.
அவை குறித்த உள்ளுராட்சி சபைகளின் சாரதிகள் ஊடாக கொழும்பில் இருந்தும் எடுத்து வரப்பட்டு மாவட்டச் செயலகம் ஊடாக பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.
இந்த பவுசர்களின் பராமரிப்பு, பழுது பார்க்கும் செலவுகள் அனைத்தும் அந்தந்த உள்ளுராட்சி சபைகளையே சாருகின்ற நிலையில்,
இவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீர்ப்பவுசர்கள் எந்த நேரத்திலும் மீளவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தால் கேட்கப்பட்டால் சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ் பிரதேச செயலக பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்த ஏற்பாடு என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கிளடையே தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. மேலும்,
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்பட்டு வருவதால் அவற்றை நிரப்ப வேண்டியத் தேவையும் தொடர்கின்றது.
வடக்கு மாகாண சபையின் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் இவைகளை கவனிக்க தவறிவிட்டார்கள்.
மாகாண சபைகளுக்கு இருக்கும் 37 அதிகாரங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து,
எஞ்சிய 35 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்தை கூட இவர்கள் தமிழ் மக்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தியிருக்கவில்லை.
ஒய்யாரக்கொண்டையாம், உள்ளே இருப்பது
ஈரும் பேனுமாம்.
பேசுவது போலித்தமிழ் தேசியம்!
சாதித்தவை வெறும் பூச்சியம்!!
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்,
வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல்,
கையில் கிடைத்த மாகாண சபையில் காரியம் ஆற்ற முடியாதவர்கள்.
சமஸ்டியை கொடுத்தாலும், நடுக்கடலிலும் நாய்க்கு நக்குத்தண்ணீர் நக்குத்தண்ணீரே!
காமலீலை குற்றவாளி பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்குமாறு இந்தியப்பிரதமர் மோடியிடம் கேட்டவருக்கு,
சிறையிருக்கும் ஒரு தமிழ்த்தாயின் புதல்வனை விடுவிக்கும் சிந்தனை தோன்றவில்லை.
இது யாரது குற்றம்?........
தனது ஓய்வு கால பொழுது போக்கிற்காக வடக்கு நோக்கி அரசியல் நடத்த வந்தவர் குற்றமா?......
அல்லது, தமிழரின் வலிகைளையும் வதைகளையும் அறியாத ஒருவரை வடக்கு மாகாண அதிகாரத்தில் உட்கார வைத்தவர்கள் குற்றமா?
யுத்த காலத்தில் அரசிடமிருந்து பெற்ற குண்டு துளைக்காத வாகனம் ஏறி பவனி வந்தவர்கள்,
அதே அரசுக்கு எதிராக கூச்சலிட்டு சூளுரைப்பது போல் சுத்து மாத்து அரசியலில் ஈடுபட்டார்கள்.
இன்று, அரசிடம் கூனிக்குறுகி இரந்து கேட்டு யாசகம் பெற்ற அரச ஆடம்பர மாளிகையில் வசித்துக்கொண்டு,
அதே அரசுக்கு எதிராக பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அறிக்கையிட்டு பம்மாத்து காட்டுகிறார்கள்.
நான் அடிப்பது போல் அடிக்கிறேன்.
நீ அழுவது போல் நடித்துக்கொண்டிரு என்று அரசின் காலில் விழுந்து ஆலோசனை கூறிவிட்டு,..
அடுத்த தேர்தலுக்கு நீங்கள் ஆயத்தமாகும் உங்கள் புலுடாக்கள் இனியும் வெற்றியளிக்காது.
தமது ஓய்வு காலத்தை பொழுது போக்கு அரசியலுக்காக செலவழிக்க வந்தவர்களும்,
வெளியில் வீரப்பேச்சும், அரசின் பின் கதவு தட்டி தத்தமது சொந்த சலுகைகளை மட்டும் பெறும் தரகு தலைமைகளும்,
தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் பிரதிபலிக்க போவதில்லை.
நான் இடையாறாது நேசிக்கும் எனது மக்களின் அரசியல் கனவுகளுக்கு மட்டுமின்றி,
எமது மக்களின் நடை முறை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்பும் எனது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, மேற்கூறிய விடயங்கள் தொடர்பில்
கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தில் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
இவ்வாறு தனது உரையில் தெரிவித்தார்...
»»  (மேலும்)

3/26/2019

பலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு

"தோழமைகளுக்கான பொது அழைப்பு" 
Palestine Land Day - March 30Résultat de recherche d'images pour "palastin land day"

பலஸ்தீன் விவகாரம் பற்றிய விவரணப்படம், பலஸ்தீன அரசியல், வரலாறு குறித்த சிறப்புரைகள், கலை நிகழ்வுகள்,புத்தக விற்பனைக் கூடங்கள்,
இலங்கைக்கான பாலஸ்தீனிய தூதுவருடனான கலந்துரையாடல் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
முடியுமான நம் தோழமைகள் எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளுங்கள்.

காலம்:
30.03.2019 சனிக்கிழமை
காலை 08.30 தொடக்கம்
நண்பகல் 12.05 வரை.
இடம்:
Green Garden Hotel கல்லடி மட்டக்களப்பு
இணைந்து ஏற்பாடு செய்திருப்பது.
பெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு
ஏறாவூர் வாசிப்பு வட்டம்
சோஷலிச இளைஞர் சங்கம் மட்டக்களப்பு


»»  (மேலும்)

3/25/2019

கே. டானியல் நினைவு தினம்..!

கே. டானியல் நினைவு தினம்..!Aucune description de photo disponible.
----------------------------------------------
'மக்கள் எழுத்தாளர்' கே. டானியல் காலமாகி
33 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்றுபோல் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.
தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டானியலுக்கு 23 - 03 - 1986 காலை 8. 30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். டாக்டர்களும் தாதிமாரும் உடனின்று சிகிச்சையளித்தனர்.
எனது கையைப் பற்றிப்பிடித்தவாறு ''தம்பி... தம்பி... " என ஏதோ சொல்ல விழைந்து முடியாத நிலையில் 8.40 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இந்நிகழ்வு என் மனதில் என்றும் மறக்கமுடியாத வேதனைப் பதிவாகிவிட்டது.
அவரது உடலைத் தோழர் பொ. வேல்சாமியின் உதவியுடன் அப்போது தஞ்சையில் வசித்த பேராசிரியர் அ. மார்க்ஸ் இல்லத்திற்குக் கொண்டு சென்றோம்.
எமது அறிவித்தல் கிடைத்துச் சென்னையிலிருந்து
செ. கணேசலிங்கன் வந்தார்.
எழுத்தாளர்கள் - கலைஞர்கள் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ஆகாசவாணி - இலங்கை வானொலி மற்றும் இலங்கைப் பத்திரிகைகள் யாவும் செய்தி தெரிவித்தன.
மறுநாள் அவரது உடல் செங்கொடி போர்க்கப்பட்டு வண்டியில் ஊர்வலமாகத் தஞ்சை வடவாற்றங்கரையிலுள்ள நாத்திகர்களுக்கான இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு திராவிடக் கழகத் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அவரது உடல் அடக்கம்செய்யப்பட்டது.
அங்கு தோழர் பொதியவெற்பன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் செ. கணேசலிங்கன் -
அ. மார்க்ஸ் - கரிச்சான்குஞ்சு - எம். வி. வெங்கட்ராமன் - பொ. வேல்சாமி - து. மூர்த்தி ஆகியோருட்படப் பலர் அஞ்சலியுரை நிகழ்த்தினர்.
யான் நன்றியுரை வழங்கினேன்.
புரட்சிப் பண்பாட்டு இயக்கத் தோழர்கள் முன்னின்று உதவினர்.
இறுதிவரை இலட்சியம் குன்றாத எந்தவித விட்டுக்கொடுப்புகளுமற்ற நம்பிக்கையான போராளியாகப், படைப்பாளியாகத் திகழ்ந்த டானியல் மறைவு குறித்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாஓ) பொதுச்செயலாளர் என். சண்முகதாசன் அன்று வெளியிட்ட அஞ்சலிச் செய்தியில் எழுதியுள்ள வரிகள் குறிப்பிடத்தக்கன.
''இளமைக்காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்." எனத் தோழர் என். சண்முகதாசன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மானிட நேசனின், மக்கள் விடுதலைப் போராளியின், கூர்ந்த சமூகப் பார்வையுள்ள படைப்பாளியின் நாமம் காலம் கடந்தும் வாழும்..!
- வி. ரி. இளங்கோவன்.
»»  (மேலும்)

3/21/2019

காணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்

காணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்   Résultat de recherche d'images pour "c v wigneswaran in batticaloa"

யுத்தகாலங்களில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் படுகின்ற துன்பங்கள் சொல்லிமாளாதவை. யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகின்றது. அதன்பின்னரான ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சர்வதேசம்  நமக்கு நீதி வழங்கும் என்று ஜெனிவா நோக்கிய எமது கவனங்கள் திசை திருப்பப்படுகின்றன. 

 கடத்தப்பட்டோர்,கைது செய்யப்பட்டோர், கொலைசெய்யப்பட்டோர் என்று இழந்து போன சொந்தங்களை எண்ணி  அவர்களை பறிகொடுத்தோர் கொண்டிருக்கும் துன்பங்களையும் துயரங்களையும்  மீள மீள புதுப்பிப்பதும்  ஒவ்வொரு வருடமும் வீதிக்கு இறங்கி நீதி கேட்பதுமாய் காலங்கள் கரைந்தோடுகின்றன.

"இம்முறை நிச்சயம் ஜெனிவா கைகொடுக்கும்" என்கின்ற  என்று அரசியல் பித்தலாட்டக்காரர்களால் ஊட் டப்படுகின்ற நம்பிக்கைகள்  ஒவ்வொரு வருடமும் கானல் நீராக போய் விடுகின்றன..

அந்தவகையில் வழமைபோல  இம்முறையும்  கிழக்கு வடக்கு தழுவிய ஆர்ப்பாட்டங்களும் நடந்தேறியுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வடக்கு மாகாணசபையை சீரழித்த சும்மா முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னையும் தனது புதிய கட்சியையும் கிழக்கில் அறிமுகப்படுத்த களமிறங்கியுள்ளார். 

இவர் உண்மையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் மீது உண்மையான கரிசனை கொண்டுள்ளாரெனின் தனது ஆட்சிகாலத்தில் வடக்கில் அவர்களுக்காக என்ன செய்தார்? 

அவர்களது உறவினர்களின் துயர் துடைக்க எத்தகைய அபிவிருத்திகளை செய்தார்? 

தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து வடமாகாண சபையூடாக இறுதி யுத்தத்தில் காணாமற்போனோர் எத்தனை பேர் என்கின்ற எத்தகைய தரவுகளை திரட்டினார்? 

இவற்றில் எதுவுமே செய்யாது இப்போது  நீலிக்கண்ணீர் வடிக்கின்ற இந்த மனிதனை நம்பி  தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஓணான் குழு அரசியல் மீது இருக்கின்ற வெறுப்பில் சிலர் "இவர்தான் தலைமைக்கு தகுதியானவர் "
என்று புதிய கண்டுபிடிப்பினை செய்கின்றனர்.

அதுவும் ஒரு அடிமைப்புத்தி, ஒரு மாயை என்பதை இன்று நாம் உணராவிடின் எதிர்காலம் நமக்கு அதை உணர்த்தும். அப்போது இன்னும் பல பத்து வருடங்கள் கடந்திருக்கும். »»  (மேலும்)

3/20/2019

மொஸாம்பிக்கில் பலமான சூறாவளி

மொஸாம்பிக்கில் பலமான சூறாவளியொன்று வெள்ளங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டலாம் என அந்நாட்டு ஜனாதிபதி பிலிப் நையுசி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.Résultat de recherche d'images pour "mozambique"

சிம்பாப்வே மலாவியிலும் பாதிப்புகளை ஏற்படுத்திய இடாய் சூறாவளியால் மொஸாம்பிக்கில் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆகவே உள்ளபோதும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேலால் பறந்திருந்த ஜனாதிபதி பிலிப் நையுசி கிராமங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தண்ணீரில் சடலங்கள் மிதப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில்  சிம்பாப்வேயில் இடாய் சூறாவளியால் 98 பேர் கொல்லப்பட்டதுடன்  200க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த வாரத் தகவலின்படி கடும் மழை  வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆகக் காணப்படுகின்றது. மலாவியை இடாய் சூறாவளி தாக்கிய பின்னரான புதிய எண்ணிக்கை வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அந்தவகையில்  மொஸாம்பிக்கியின் பெய்ரா நகரில் வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை மீட்பவர்களுக்காகஇ நெஞ்சளவிலான தண்ணீருக்குள் டிங்கிகளை மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்திருந்தனர்.
இதேவேளை  வீதிகள்இ பாலங்களை மீள் நிர்மாணிக்கவும்இ தண்ணீர்  சுகாதார வசதிகள்  மின்சாரத்தை வழங்குவதற்கு 18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை சிம்பாப்வே திறைசேரி விடுவித்துள்ளது
»»  (மேலும்)

3/18/2019

அமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஆகும்

நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை( PTA) நீக்கி ஐ.தே.கட்சி அரசினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஜனநாயத்துக்கும் சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று முற்போக்கு சக்திகள் குரலெழுப்புகின்றன.Résultat de recherche d'images pour "ranil unp"
"தடையை விட எதிர்ப்பு ஆபத்தானது" என்பதை உணர மனிதர்க்கு விசேட உணர் கொம்புகள் தேவையில்லையல்லவா ? இச்சட்டம் இரகசியமான முறையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை மிக மோசமாகப் பாதிக்கப் போகும் இச்சட்டத்தை இன்னும் வாசிக்காத முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவைத் தீர்மானத்தின் போது பேசா மடந்தைகளாக இருந்தமை "வாழைப்பழத்தை தின்னும் போது வாய் வலிக்கும்" என்று சொன்ன சித்தரின் நக்கல் கருத்தை நினைவூட்டுகிறது.
பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களின் உரிமைக் குரலை நசுக்கி அவர்களை சிறைக் குழிகளுக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டிருந்தது.இச்சட்டம் தமிழரைக் கொல்லும் உரிமைச் சீட்டை பாதுகாப்புத் தரப்புக்கு எழுதிக் கொடுத்திருந்தது.இவ்வாறே முஸ்லிம்களையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும், செயற்பாடுகளையும் பயங்கரவாத முலாம் பூசி நசுக்குவதைப் பிரதானமான இலக்காகக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்,தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரதியீடு செய்கிறது.
இவ்வருடம் வரும் தேசியத் தேர்தலுக்கு முன்னதாக இச்சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதற்கு இன்றைய அரசு அவசரமாக முயல்கிறது.
மஹிந்த தரப்பு இச்சட்டத்தை எதிர்க்கும் நோக்கத்தோடு கருத்துக்களைப் பரிமாறுகிறது. ஜே. வி.பி கொள்கை அடிப்படையில் இச்சட்டத்தை எதிர்க்கும், முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இச்சட்டமூலத்தை நாடாளுமன்றில் எதிர்த்தால் இச்சட்டம் படு தோல்வியடையும்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களே! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தலை முழுக வைக்க ஒன்று சேருங்கள். இச்சட்டமூலத்தை எதிர்க்க ஒன்றிணைவதன் மூலம் தமிழால் இணையும் புதிய அரசியல் போக்கை உருவாக்குவோம்!
நன்றி *முகநூல் தோழர் பசீர் சேகுதாவுத் 
»»  (மேலும்)

3/14/2019

அபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல் நாட்டுகின்றார்கள்!............. நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!.....

அன்று அபிவிருத்தியை வெறும் சலுகை என்று கூறியவர்கள் இன்று தாமாகவே குனிந்து நின்று அத்திவாரங்களுக்கு அடிக்கற்கள் நாட்டுகின்றார்கள்.
வேடிக்கை என்னவென்றால், வீதிகள் புனரமைப்பது எங்கள் விடுதலையாகாது என்று கூச்சலிட்டவர்கள், தமது தொண்டர்களை அனுப்பி புனரமைப்பதற்காக வீதிகளை அளந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
சிங்கள அரசுகள் தமிழர்களை பிரித்தாண்டு கூறு போட்டவர்கள் என்று சீறி எழுந்தவர்கள்,
அதே அரச தலைவர்களை அழைத்து சிம்மாசனம் இருத்தி மரியாதையோடு வழியனுப்பி வைக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் அபிவிருத்தியும் உரிமைதான் என்று எழுதப்பட்டிருக்கும் வாய்க்கியங்களை இப்போதுதான் இவர்கள் படித்துப்பார்த்தர்களோ தெரியாது.
நாங்கள் அதை எப்போதோ படித்துப்பார்த்தவர்கள். அதை விடவும் எமது மக்களின் அவலங்களை மக்களுடன் கூட இருந்தே அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொண்டவர்கள்.
ஆகையால்தான்,...
அரசியலுரிமைக்கான,......
அபிவிருத்திக்கான,......
அன்றாட பிரச்சினைகளுக்கான......
தீர்வுகள் என முப்பரிமாண கொள்கை வகுத்து நாம் செயலாற்றி வருகின்றோம்!....
அடுத்தவன் செய்தால் துரோகம்!
தாம் செய்தால் ராஜதந்திரம்!!
என்ற ஏமாற்று நாடகங்கள் எல்லாம் மக்களின் மன அரங்கில் இனி ஒரு போதும் ஏறாது.....
இப்போது கூட வடக்கின் அபிவிருத்தியை பிரதமரின் ஊடாக செய்ய எத்தனிக்கும் தரகு அரசியலை நடத்த விரும்புகிறார்களே ஒழிய,
தாமாக முன் வந்து தமிழ் பேசும் மக்களின் அவலங்களை நேரில் நின்று தீர்க்கும் திராணியற்றவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.
தத்தமது சொந்த சலுகைகளை அரசுடன் பின்கதவால் கைகுலுக்கி பெற்றுக்கொள்கிறார்கள்.
அது போல், தமிழ் பேசும் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளையும் தாமே அமைச்சு பொறுப்பெடுத்து பெற்றுக்கொடுப்பதில் ஏன் தயக்கம் என்று கேட்கின்றேன்.....
தமது அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர்களுக்கு கிடைக்கும் அமைச்சு அதிகாரங்களை தடுத்து நிறுத்தும் சுயலாப அரசியல் தலைமையல்ல நாம்.
யார் குற்றியும் அரிசியானால் சரி, ஆனாலும் அந்த அரிசி பசித்தவனை சென்றடைய வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் நாம்.....
எமது வழிமுறைக்கு மட்டும் வந்தவர்களை நாம் வரவேற்கின்ற அதேவேளை,...
அதைப்போல்; எதை? எப்படி? எவ்வாறு? சாதித்து காட்டுவது என்ற எமது பொறிமுறைக்கும் அவர்கள் வருவார்களேயானால், நாம் அதை திறந்த மனத்தோடு என்றும் வரவேற்போம்.
இன்று நிழல் அமைச்சர்களாக இருக்கும் நீங்கள்
நிஜ அமைச்சர்களாக பொறுப்பெடுத்து வந்தால் உங்களுக்கு வழி காட்டவும்,....
வல்லமை தந்து தமிழினத்தின் வாசல் தோறும் வெளிச்சத்தை தர வல்ல ஆலோசனைகையும் வழங்க நான் என்றும் தயாராக இருக்கின்றேன்.
அதேநேரம், தொழிற் பயிற்சி அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூல பயனாளிகள் தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியான வகையில்,
தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ளவர்கள் அதிகம் வாழுகின்ற பகுதிகளில் தமிழ் மொழி மூல பயிற்சி ஆசியர்களை போதுமானளவு இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன்.
குறிப்பாக, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் இது தொடர்பில் அதிக அவதானங்களை செலுத்த வேண்டும் என்பதை இங்கு சுட்டிக்காடடுகின்றேன் என்றார்.
»»  (மேலும்)